Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Monday 28 January 2019

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பில் சென்னை போரூரில் முப்பெரும் விழா

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் க.பீம்ராவ் அவர்கள் தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து சிருஷ்டி மகப்பேறு மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச சிறப்பு முகாம் டாக்டர் திருமதி சாமுண்டி சங்கரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமை திரைப்பட இயக்குநர் திருமதி லட்சுமி இராமகிருஷ்ணன் அவர்கள் துவங்கி வைத்தார். மேலும் உடல் ஆரோக்கியத்தை பற்றியும், தன்னலமற்ற மருத்துவர்களின் சேவைகளை பற்றியும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்களையும் பாராட்டி பேசினார்.

அதைத் தொடர்ந்து மருத்துவ உலகின் புரட்சியாளர், பயிற்சி மருத்துவர்களின் சங்கத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி அவர் சங்கத்தின் அடையாள அட்டையை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

திரைப்பட நடிகை திருமதி கவுதமி அவர்கள் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

டி.யூ.ஜே மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன், மாநில இணைச் செயலாளர் கழுகு கே.ராஜேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் திருத்தனி விநோத், லயன் லி.பரமேஸ்வரன், ஆவடி மணிமாறன், கட்டுப்பாட்டு குழு தலைவர் LIC வைத்தியநாதன், குன்றத்தூர் எஸ்.எம்.எஸ்.செல்வம்,மூத்த பத்திரிகையாளர்கள் தினகரன் நேதாஜி, தினத் தந்தி சார்லஸ், சிட்டி போஸ்ட் ஏ.வி.சங்கர், எம்.டி.ராமலிங்கம், முதல் செய்தி வெங்கட்ராமன், தேசியக் குழு உறுப்பினர்கள் நரியார் கிருஷ்ணமூர்த்தி, ஜீவா பெரியசாமி, டாக்டர் ஆர்.தேவன், ஆவடி ஜான், ஜான் சேவியர் தங்கராஜ், நிர்வாகிகள் ஆவடி பி.கே.மூர்த்தி, கழுகு வீரா, பல்லாவரம் ஜெயகுமார், முதல் செய்தி பெருமாள், கேப்டன் தொலைக்காட்சி நாகராஜ், தருமபுரி சசி குமார், சசிகலா தேவி ரவீந்திரதாஸ், புகழேந்தி, ஆவடி சரவணன், பார்த்திபன், யுவராஜ், சுரேஷ்,மதி ஒளி ராஜா, கருணாநிதி சார், ஜான்சிராணி புகழேந்தி, கௌரி, தமிழ்ச் செல்வி, உமா சண்முகம், சித்ரா, நெய்வேலி ஜெயந்தி,வெங்கட், தின உரிமை கல்பனா குழுவினர், எஸ்.எல்.எஸ்.சதீஷ், மீசை ஏழுமலை, மணிகண்டன், ஜீனியஸ் சங்கர், ஐ.கேசவன், சட்ட கேடயம் ராஜன், வேளச்சேரி சசி குமார், மற்றும் செல்வ விநாயகம், யுனைடட் கிட்ஸ் விஜயலட்சுமி வெங்கடேசன், லட்சுமி உழவுக்கும், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

20 க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில்,100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த நிகழ்வின் முடிவில் தோழர் போரூர் ஜனா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.





No comments:

Post a Comment