Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Sunday 12 May 2019

புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019

புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையாரின் திருத்தலம் சென்னை மாநகரில் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் சாலையில் சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலையில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சென்னை மாநகரிலுள்ள பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ஓவ்வொரு வருடமும் உயிர்ப்பு ஞாயிறுக்கு பின்வரும் நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வெகு ஆடம்பரத்துடன் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடம் இத்திருவிழாவானது மே மாதம் 9ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழா மே 9ம் தேதி மாலை 6.00 மணி அளவில் மேதகு. ஆயர், அந்தோணி டிவோட்டா (திருச்சி பணிநிறைவு ஆயர்), அவர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணி அளவில் பல அருட்தந்தையார்களால் சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது. குறிப்பாக (12.05.2019) அன்று சென்னை – மயிலை உயர் மறைமாவட்ட முன்னால் பேராயர் மேதகு A.M சின்னப்பா ஆண்டகை அவர்களால் நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது. மேலும் (15.05.2019) புதன்கிழமை அன்று தருமபுரி மேதகு. ஆயர், லாரன்ல் பயஸ் அவர்களால் குடும்ப விழா திருப்பலி நடைபெற உள்ளது இத்திருவிழாவின் 19ம் நவநாளன்று (18.05.2019, சனிக்கிழமை) ஆடம்பரத் தேர்த்திருவிழாவானது செங்கல்ப்பட்டு ஆயர் மேதகு., நீதிநாதன் ஆண்டகை, அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் இறுதி நாளில் (19.05.2015, ஞாயிறு) மாலை 6.00 மணி அளவில் சென்னை – மயிலை உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி ஆண்டகையால் கொடியிறக்கமும் மற்றும் சிறப்பு திருப்பலியோடு இத்திருவிழா நிறைவுபெற உள்ளது.

புனித ஆரோக்கிய அன்னையின் பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் பக்தியோடு பங்கேற்று அன்னையின் ஆசீரை பெற்று செல்ல இத்திருத்தலத்தின் அதிபரும் மற்றும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை. P.து. லாரன்ஸ்ராஜ் அவர்கள் அன்போடு அழைக்கிறார்.

திருத்தலத்தைப் பற்றிய சிறிய வரலாறு:-
இயேசுவின் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தோமையார் இந்தியாவில் வாழ்ந்த 20 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் சின்னமலையில் வாழ்ந்திருக்கிறார். இந்த புனித திருத்தலத்தின் தொடக்கம் கி.பி. 68ஆம் ஆண்டாகும். புனித தோமையார்இ அன்னை மரியாளின் சிறப்பு பக்தர். புனித தோமையார், கால் பதித்த இப்பூமியில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். இப்பகுதியில்தான் கிறிஸ்தவம் ஐரோப்பிய நாடுகளுக்கும் முன்பே பிறந்தது. முதன்முதலில் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயம் கி. பி. 1551 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களால் இந்த மலை குன்றின் மீது கட்டப்பட்டது. தற்போதுள்ள வட்ட வடிவிலான ஆலயமானது 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும், இந்த வளாகத்தில் புனித தோமையார் வாழ்ந்த குகை, பலிபீடம், அதிசய நீருற்று மற்றும் இரத்தம் கசியும் கற்சிலுவையும்; சான்றுகளாக திகழ்கின்றன. இந்த வரலாற்றிற்கு அணிசேர்க்கும் வகையில் தற்போது சிலுவைப் பாதை நிலைகளின் பன்னிரெண்டாம் நிலையில் திருச்சிலுவை சிற்றாலயம் எழுப்பபட்டுள்ளது. இந்த சிற்றாலயத்தில் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து கல்வாரியில் உயிர்நீத்த திருச்சிலுவையின் ஒரு சிறிய திருப்பண்டம் ஆராதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்றாலயத்திற்கு ஏறிசெல்ல “ஸ்காலா சாங்க்தா” (Scala Sancta) எனப்படும் புனிதப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புனிதப் படிகள், ரோமையிலுள்ள “ஸ்காலா சாங்க்தா” புன்னியப் படிகளைப் போன்றதே. இறைமக்கள் இந்தப் படிகளில் முழுந்தாள்படியிட்ட, ஒவ்வோரு படியிலும் நம் ஆண்டவர் கற்பித்த ஜெபத்தை செபித்துக்கொண்டே செல்லவேண்டும். இது தவத்தின் அடையாளமாகவும், பாவப் பரிகாரச் செயலாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை – மயிலை உயர்மறைமாவட்ட நற்கருணை ஆண்டு (2018-2019) கொண்டாட்டத்தின் நினைவாக இந்த நம்பிக்கைத் தூண் நிறுவப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, இயேசுவின் திருத்தூதர் தூய தோமையார், தமிழ்நாட்டில் முதன்முதலாக நற்செய்தி அறிவித்த இத்திருதலத்தில், ஒரே பாறையிலிருந்து வெட்டி வடிவமைக்கப்பட்ட இந்த நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இந்திய கிறிஸ்தவம் ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை எண்பிக்கும் வரலாற்றுச் சின்னமாய் இத்தூண் விளங்குகிறது. விவிலியத்திலே பழைய ஏற்பாட்டிலே ஈசாக்கின் மகன் யாக்கோபு எப்போதெல்லாம் யாவே இறைவனை கண்டுணந்தாரோ அங்கே அடையாளமாய் நினைவுத்தூனை நிறுவினார். அதனுடைய பின்புலத்தைக் கொண்டு இறைமக்கள் புனித தோமையாரின் மற்றும் புனித ஆரோக்கிய அன்னையின் பரிந்துறையின்கீழ் மூவ்வெரு இறைவனை காணும் நம்பிக்கையின் அடையாளமாய் திகழ்கிறது நம்பிக்கைத் தூண். புனித தோமையாரின் குகை, நீருற்று, கற்சிலுவை, இயேசு கிறிஸ்துவின் திருச்சிலுவையின் திருப்பண்டம், நம்பிக்கை தூண் அடங்கிய திருத்தலம் இது.


இத்திருத்தலத்திற்கு வரும் அன்னையின் பக்தர்களுக்கென்று பேருந்து வசதிளும், மெட்ரோ இரயில் மற்றும் மின்சார இரயில் வசதிகளும் உண்டு. அருட்தந்தை. P.து. லாரன்ஸ் ராஜ் இத்திருத்தலத்தின் அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பொறுபேற்று, பங்குமக்களை ஆன்மீகத்திலும், புனித தோமையார் பறைசாற்றிய விசுவாசத்தை உலகறிய செய்யவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment