Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Sunday 16 June 2019

ஓவியக் கலைஞர் காயத்ரி ராஜா பார்ட்அவுட் ஃபிளவர்ஸ் ஓவியக் கண்காட்சி




ஓவியக் கலைஞர் காயத்ரி ராஜா (Artist Gayathri Raja) அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களின் கண்காட்சி சென்னைஅம்பாசிடர் பல்லவாவில் (Hotel Ambassador pallava)உள்ள கலைக்கூடத்தில் ஜூன் 16ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 


பூக்களை மையப்படுத்தி வரையப்பட்டுள்ள இந்த ஓவியக் கண்காட்சியைதிருவான்மியூரை சேர்ந்த ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர்கருணாநிதிதமிழ்நாடு கலை மற்றும் கைத்தொழில் மேம்பாட்டு சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ‘கலைச் செம்மல்’ டாக்டர் பி ஆர் அண்ணன் பிள்ளை ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடத்தின் இயக்குனர் ‘கலைவளர் மணி’ வாகை டி தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாககலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.


ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற பெரும்பாலான ஓவியங்கள் விதவிதமான வண்ணங்களில்விதவிதமான வடிவங்களிலும் உள்ள பூக்களைகருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டதுபூக்களை ஓவியங்களாக வரையும் போக்கு பத்தாம் நூற்றாண்டில் பாரிஸ் நகரில்அறிமுகமானதுபத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரிஸ் மாநகரில் இத்தகைய ஓவியங்களுக்கான தனி கண்காட்சி கூடங்களும் இருந்ததாகஓவியக் கலைஞர் காயத்ரி ராஜா பகிர்ந்து கொண்டார்.

இவருடைய ஓவியங்களில் தனித்த பூக்களும்அதில் இடம்பெற்ற வண்ணங்களும் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.இத்தகைய ஓவியங்களை அவர் கேன்வாஸ்வாட்டர் கலர்ஆயில் பெயிண்டிங்களிலும் வரைந்திருந்தது பார்வையாளர்களை ஆச்சரியப்படவைத்தது.
காயத்ரி ராஜாவைப் பற்றி..
ஓவிய கலைஞரான காயத்ரி ராஜா எம்பிஏ பட்டதாரி பட்டம் பெற்றிருந்தாலும் ஓவியத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக ஓவியக்கலையில்டிப்ளமோ பட்டம் பெற்றுதொடர்ந்த அவருடைய ஈடுபாட்டின் காரணமாக 2005 ஆம் ஆண்டில் ஓவிய பயிற்சியை பெற தொடங்கினார்அதற்குஅடுத்த ஆண்டு கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்ற தொடங்கிஅந்த பள்ளியில் படிக்கும்குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்காக ஓவியத்தை ஒரு காரணியாக்கிஅப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை ஓவியத்தின் பக்கம்கவனத்தைத் திருப்பினார். இவர் தற்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசிக்கிறார் .
TACIA  வில் உறுப்பினராகவும் உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஜி ஆர் கலை மையம் என்ற பெயரில் ஒரு ஓவிய நிறுவனத்தைத் தொடங்கிஓவியத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓவியத்தை கற்பித்துஅவர்களின் திறமைகளை வெளிக் கொணர்வதற்கான செயல்பாடுகளிலும்தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தன்னிடம் ஓவியம் கற்கும் மாணவர்களின் படைப்புகளை,கண்காட்சியாக வைத்து பார்வையாளர்களையும் படைப்பாளிகளையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து அவர்களின் திறமைக்கு சான்றாகவிளங்கினார்.
 இவரிடம் கற்ற மாணவர்கள்  மாநில ,மாவட்ட ,தேசிய அளவில் பல சாதனைகளை செய்து உள்ளனர் .எந்த போட்டிக்கு சென்றாலும் பரிசுகளோடு தான் வருவார்கள்.இவர் ஓவிய ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே ஏராளமான ஓவியக் கண்காட்சிகளை சென்னை,பெங்களூரூகொச்சிஎர்ணாகுளம்புதுச்சேரிஅமிர்தசரஸ்ஆந்திர பிரதேசம் மற்றும் காத்மாண்டு ஆகிய இடங்களில் ஓவியக் கண்காட்சியைதனியாகவும்குழுவாகவும் நடத்தியிருக்கிறார்.
இவர் தன்னுடைய ஓவியத் திறமையை மேம்படுத்திக் கொள்வதிலும்ஓவிய பாணிகளில் பலவற்றை பின்பற்றுவதிலும் குறிப்பிடத்தக்ககலைஞராக திகழ்கிறார்இவர் கேரள முரல்கரித்துண்டு ஓவியம்வாட்டர் கலர்ஆயில் பெயிண்டிங்எம்போஸ் முரல் பெயிண்டிங் மற்றும்இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள பாரம்பரியமான ஓவியங்கள் வரைவதிலும் தன்னிகரற்றவராக திகழ்கிறார்.
இவரின் ஓவியத் திறமைக்கு ஒவ்வொரு படைப்புகளுமே சான்று என்பது வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டு குறிப்புகளே சான்று.காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு படைப்பையும்பார்வையாளர்கள் நின்று நிதானமாக ரசித்துஅனுபவித்து கடந்து சென்றதுமகிழ்ச்சியான அனுபவம்.
இந்த கண்காட்சி ஜூன் 16ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்பது சென்னையில் உள்ள ஓவிய ஆர்வலர்களுக்கு ஒருமகிழ்ச்சியான செய்தியாகும்.

No comments:

Post a Comment