Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Friday 19 July 2019

மண்டபம் மீன் பிடி தளத்தில் அறிய வகை திருக்கை மீன்




சத்யபாமா கடல் உயிரியலாளர்கள் திங்கட்கிழமை ஜூலை 15ம் தேதி அன்று ஓர் அறிய வகை திருக்கை மீன்கள் (2) மண்டபம் மீன் பிடி தளத்தில் தரை இறங்குவதைகண்டனர். இது இழுவலை மீன்பிடி செயல்பாட்டின் மூலமாக தற்செயலாக சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றதுமன்னார் வளைகுடா கடற்கரையில்இருந்து வெகுதூரத்தில் சுமார் நாற்பது முதல் ஐம்பது மீட்டர்ஆழத்தில் பிடி பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்த திருக்கை மீனின் நீளம் 2.45 மீட்டர் மற்றும் 1.97 மீட்டர்ஆகும். இந்த இரண்டு திருக்கை மீனும் சுமார் ஐம்பது முதல் எழுவது கிலோ எடை கொண்டவையாக இருக்கும், பல ஆயிரம் ருபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் திருக்கை மீன் வலையில் பிடிபட்டதும் அதன் வாலில் உள்ள விஷத்தன்மைகொண்ட முள் முதலில் நீக்கப்படும் என்றும் கூறினர்.
“இந்த திருக்கை மீனின் முதுகெலும்பு பக்கத்தில் உள்ள புள்ளிகளை ஒப்பிடும் பொழுது, புதிதாக கண்டறியப்பட்டஹிமாண்டுறா டுடுள்’ என்ற பெயர் கொண்டவையாகஇருக்கலாம். மேலும் விரிவான உருவவியல் பகுப்பாய்வுற்றும் மேம்பட்ட டி.என்.எ தொழில்நுட்பத்தையும்ஒருங்கிணைத்து இதனை உறுதி செய்ய முடியும்” என்று ராமேஸ்வரம் சத்யபாமா கடல் ஆராய்ச்சி நிலையத்தின்இளம் விஞ்ஞானி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த அரிய வகை திருக்கை மீனானது இதுவரை தான்சானியாலக்கடீவ்கடல் பகுதி, மலேசியா, பாலி, தெற்கு சீனா மற்றும் சுலுகடல் பகுதிகளில் கிடைத்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார். 
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் சுறாக்கள்மற்றும் திருக்கை மீன்கள் இடம் பெற்றிருந்தாலும், சில வகை திருக்கை மீன்களின் சூழலியல், இனப்பெருக்கம் முறை மற்றும் அதனுடைய வளம் (population status) பற்றிய தகவல்கள் இன்னும் வெகுவாகவே காணப்படுகின்றது. மேலே உள்ள தகவல்களை அறியும் பொருட்டு திருக்கை மீன் இனங்களுக்கான குறிப்பிட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு திட்டங்களை உருவாக்க இயலும்” என்று ராமேஸ்வரம் சத்யபாமா கடல் ஆராய்ச்சி நிலையத்தின்இளம் விஞ்ஞானி அமித்குமார் தெரிவித்துள்ளார். 
இந்த அறிய வகை திருக்கை மீன் இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் (கொல்கத்தாமீன் வள விஞ்ஞானி சுப்ரேந்து சேகர் மிஷ்ரா அவர்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டது. மேலும் இது போன்ற அறிய வகை திருக்கை மீன்களின் பாதுகாப்பு நிலை இன்னும் மதிப்பிட படவில்லை என்றும் இது மற்ற திருக்கை மீன்களைபோல சில குட்டிகளை மட்டுமே பெற்றெடுக்கும் நீண்ட ர்ப்ப காலம் கொண்ட மீன் இனமாகும் என்று விஞ்ஞானி சுப்ரேந்து சேகர் மிஷ்ரா பகிர்ந்துக்கொண்டார்.

No comments:

Post a Comment