Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Sunday 14 July 2019

அதிநவீன மருத்துவ சேவையுடன் சென்னையில் கால்பதிக்கும் எம்ஜிஎம் ஹெல்த் கேர்






எம்ஜிஎம் ஹெல்த்கேர் மாநிலத்தின் அதிநவீன மிகச்சிறந்த மருத்துவமனையை சென்னையில், அதுவும் தலைச்சிறந்த தேசிய மற்றும் மாநில தலைவர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்துள்ளது.

மதிப்புக்குரிய இந்திய துணைக் குடியரசுத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு திறந்துவைக்க, தமிழகத்தின் மதிப்புக்குரிய திரு. பன்வாரிலால் புரோஹித், மதிப்புக்குரிய தமிழகத்தின் துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், மதிப்புக்குரிய தமிழகத்தின் மீன் வளத்துறை மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் மற்றும் மதிப்புக்குரிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கடந்த இரண்டு சகாப்தங்களாக மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராச்சி மையம், கல்வி மற்றும் மருத்துவ சேவையில் தலைச்சிறந்து விளங்கி வருகிறது. NIRF 2018 அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்ஜிஎம் 23-வது இடத்தில் உள்ளது. ஒருங்கிணைந்த சுகாதார சேவையை வழங்குவதே எம்ஜிஎம்-ன் கனவு ஆகும். மருத்துவ சேவையை அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் அதிநவீன சாதனங்களுடன் 400 படுக்கைகளுடைய எம்ஜிஎம் ஹெல்த் கேர்  சென்னையில் அறிமுகமாகியுள்ளது. இது சுமார், 3 லட்சம் சதுர அடியில், சென்னையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் 14ஆம் தேதி, 2019-ல் எம்ஜிஎம் ஹெல்த் கேர் திறப்பு விழா நடைபெற்றது. மதிப்புக்குரிய இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவமனையைத் திறந்து வைத்தார். தமிழகத்தின் மதிப்புக்குரிய திரு. பன்வாரிலால் புரோஹித், மதிப்புக்குரிய தமிழகத்தின் துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், மதிப்புக்குரிய தமிழகத்தின் மீன் வளத்துறை மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் மற்றும் மதிப்புக்குரிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

எம்ஜிஎம் ஹெல்த்கேரின் குறிக்கோள், ஒரு "சுகாதார கவனிப்பு இயக்கம்" (health-caring movement) ஏற்படுத்துவதாகும். இது சிகிச்சைப் பெறுபவர்களின் அனுபவத்தை எல்லா விதத்திலும் திருப்திகரமாக்க முயற்சியை மேற்கொள்ளும். அதாவது, மருத்துவ நிபுணத்துவம், தொழில் நுட்ப வசதி மற்றும் பசுமை கட்டிட வசதி உள்ளிட்டவை சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். மாநிலத்தின் சிறந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான இது, நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 400 படுக்கைகள், நூறு ஐசியூ படுக்கைகள், 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 900க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 12 சிறப்பு மையங்கள், 30க்கும் மேற்பட்ட துறைகள், 12 அறுவை சிகிச்சை மையம், 24 x 7 அவசர சிகிச்சை பிரிவு, 55 புறநோயாளி சிகிச்சை அறைகள்  மற்றும் 300 கார்கள் நிறுத்தும் அளவுக்கு  பலநிலை பார்க்கிங் வசதி ஆகியவை இம்மருத்துவமனையின் சிறப்பம்சம். நான்காம் நிலை மருத்துவமனை என்பதால், இங்கு 12 சிறப்பு பிரிவு மையங்கள் உள்ளன. அவை, இருதய அறிவியல், நரம்பியல் அறிவியல் மற்றும் முதுகெலும்பு, எலும்பியல், காஸ்ட்ரோ அறிவியல், சிறுநீரக அறிவியல், புற்றுநோயியல், பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல், குழந்தை மருத்துவம் மற்றும் நியோனாட்டாலஜி, அவசர மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு, நெருக்கடியான நிலை பராமரிப்பு மற்றும் மயக்க மருந்து, மற்றும் நோயறிதல் மற்றும் கதிரியக்கவியல் ஆகியவற்றுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.

தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சியாக, பல்வேறு புதிய மருத்துவக் கருவிகளை  எம்ஜிஎம் ஹெல்த் கேர் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசியாவிலேயே முதன் முறையாக, ‘பைப்லேன் கேத் லேப்‘( biplane cath lab), 3T எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஆகியவை இங்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக வயர்லெஸ் ஃபீட்டல்  (foetal) மானிட்டரிங் சிஸ்டம் , சென்னையிலேயே முதன்முறையாக IoTயுடனான ஐசியூ சார்ட்டிங் சிஸ்டம் மற்றும் நியூரோ நாவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை ஒரு விரிவான, முழுமையான ஒருங்கிணைந்த அமைப்பில் இயங்குகிறது. மேலும், HIS உடனான ஈ.எம்.ஆர், மருத்துவர்களுக்கான டாக்டர் ஆப், நோயாளிகளுக்கான செயலி, இன்-ரூம் ஆட்டோமேஷன், குரல் பதிவு கொண்ட நர்ஸ் கால் சிஸ்டம் மற்றும் பில்டிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த மருத்துவமையில் அமைந்துள்ளது.

“சென்னையில் முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் அதிநவீன முறைகள் உள்ள  மருத்துவமனையை அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறோம்” என எம்ஜிஎம் ஹெல்த் கேரின் நிர்வாக இயக்குநர் எம்.கே.ராஜகோபாலன் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் “எங்கள் மருத்துவமனையின் ஒரு தலைச்சிறந்த அம்சம், டிஜிட்டல் ஐசியூ ஆகும். அங்கு IOT-யுடனான சார்ட்டிங் சொல்யூஷன் மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வு சிஸ்டம் அமைந்துள்ளது. இதுபோன்ற அதிநவீன அமைப்புகளை சென்னையில் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ” என்றார்.

எங்கள் மருத்துவ வளாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் குணப்படுத்தும் நெறிமுறைகள் மற்றும் அமைதியான உணர்வு பிரதிபலிக்கும். சிகிச்சையின் ஒரு பிரிவாக நகரின் உயர்ந்த சாய்வு தோட்டம் முதல் மியூசிக் தெரபி வரை  இங்கு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவில் கலைநயத்துடனான ஓவிய அரங்குகளும் கலைக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கலைக்கூடத்தில் தமிழகத்தின் தனித்துவங்கள், சிறப்பம்சங்கள் ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் இடம்பெற்றுள்ளது தான் முக்கிய அம்சமாகும். எம்ஜிஎம். ஹெல்த் கேரின் 11வது தளமானது மிகவும் ஆறுதலான சூழ்நிலையை வழங்க, உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கும் முறையை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இங்கு ஒவ்வொன்றும் அக்கறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல் என்னவென்றால், பசுமையான மருத்துவமனைக்கான USGBC LEED பிளாட்டினம் சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும், மற்ற நிர்வாக கட்டிடங்களை விட மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
எம்ஜிஎம் ஹெல்த் கேர் இந்த அதிநவீன வசதிகளை அமைத்ததற்கு காரணம், சிகிச்சை மேற்கொள்பவர்களின் நலனுக்காக தான்.  கருணை மற்றும் நல்லெண்ணத்துடன் சிறப்பான மற்றும் அறிவுசார்ந்த மேம்பாட்டுடன் மருத்துவ சேவையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே கொள்கை.

அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், நிர்வாக மற்றும் பராமரிப்பு ஊழியர்கள்  அடங்கிய குழு , இவர்களுடன் நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிரஷாந்த் ராஜகோபாலன் தலைமையில் சிறப்பாக செயலாற்றுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனெனில் ஒவ்வொருவருமே தங்களது துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சென்னையில் வேறெங்கும் கிடைக்காத சிறந்த மருத்துவ சேவையை இங்கு வரும் நோயாளிகள் பெறுவார்கள்.

டாக்டர் பிரஷாந்த் ராஜகோபான் கூற்றின்படி, “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் மருத்துவரின் சிகிச்சை மட்டுமின்றி அக்கறையும் தேவைப்படுகிறது. ஹெல்த் கேர் இயக்கத்தை துவங்குவதற்கான சரியான தருணம் இது. அதை எம்.ஜி.எம்.ஹெல்த் கேர் கையில் எடுத்துள்ளது. மருத்துவமனையின் ஒவ்வொரு விஷயமும் பார்த்துபார்த்து அக்கறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் முதல் சுற்றுசூழல் வரை அனைத்துமே ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு குரல் உதவி சார்ந்த செவிலியர் அழைப்பு சேவை வழங்கப்படுகிறது. வெற்றிகரமாக சிகிச்சை அளிப்பதும், நோயாளிகள் சீக்கிரம் உடல்நலம் தேறுவதுமே எங்கள் முதன்மை குறிக்கோள்.”
தனியார் மருத்துவமனையாக உருவெடுத்தது குறித்தும், சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர். ராகுல் ஆர் மேனன் பேசுகையில், “இந்தியாவிலேயே தனியார் மருத்துவ சேவைக்கான சிறந்த இடமாக சென்னை உள்ளது. இந்திய மட்டுமின்றி, சர்வதேச அளவில் மருத்துவ முறைகளை தரம் உயர்த்த எம்.ஜி.எம். பல்வேறு புதிய தொழில் நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையிலேயே சிறந்த மருத்துவமனையாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. நோயாளிகளின் உடல்நிலை முதல் பணம் செலுத்தும் முறை வரையிலான அனைத்துமே வெளிப்படை தன்மையுடன் நிகழும். அதே சமயம், ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தப்படும்” என்று முடித்தார் பெரும் மகிழ்ச்சியுடன்

No comments:

Post a Comment