Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Wednesday 25 September 2019

மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் இசை வெளியீடு..



சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்”

இயக்குநர் சரண் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். புதுமுகம்  நாயகியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி முதலான பல பிரபலங்கள் இணைந்து  நடித்துள்ளனர். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். A S லக்‌ஷ்மி நாராயணன் ஒலியமைப்பு செய்துள்ளார். 

சரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில்  அவரது வழக்கமான பாணியில்  காமெடி திரில்லர் என அனைத்தும்  அடங்கிய ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது “மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்”.
மிக விரைவில் வெளிவரவுள்ள இப்படத்தின்  திரைமுன்னொட்டம் மற்றும் இசை வெளியீடு பத்திரைகையாளர் முன்னிலையில்  படக்குழு அனைவரும் கலந்து கொள்ள இன்று இனிதே நடைபெற்றது. 

இவ்விழாவில்...
படத்தில் நடித்துள்ள  ராதிகா சரத்குமார் அவர்களுக்கு நடிகவேள் செல்வி   எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சரத்குமார், இயக்குநர் சரண், ஆர் கே செல்வமணி, நாசர், தயாரிப்பாளர் AL அழகப்பன், தனஞ்செயன், ரோகிணி ஆகியோருடன் படக்குழு மொத்தமும் மேடையேறி அவருக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர். 

தயாரிப்பாளர் மோகன் பேசியது .. 

நான் இந்த இடத்தில் இருக்க காரணமான என்  தாய் தந்தையர்க்கு நன்றி. நான் இதற்கு முன் ஒரு படம் எடுத்தேன் அது சரியாக வரவில்லை. இப்போது பெரும் நம்பிக்கையுடன் சரண் இயக்கத்தில் இந்தப்படம் செய்திருக்கிறேன். இந்தப்படம் 2 1/2 மணி நேர கொண்டாட்டமாக இருக்கும். இயக்குநர் சரண் அந்தளவு உழைப்பை தந்திருகிறார். ஆரவ்வுக்கு இந்தப்படம் மிகப்பெரிய அறிமுகமகா இருக்கும். ராதிகா அவர்களுக்கு பட்டம் அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார். 

முனைவர் ஞானசம்பந்தம் பேசியது... 

நிறைய படங்கள் பார்த்து வளர்ந்தவன் தான். இப்போது நிறைய அப்பா வேடங்களில் திரைத்துறையில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் இயக்குநர் சரண். அவர் ஒரு மிகச்சிறந்த  ரசனையாளர். திரைப்படத்தின் முன்னோட்டத்தினை பார்த்திருப்பீர்கள் படம் மிக அழகாக வந்திருக்கிறது. இந்தப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். ராதிகா சரத்குமார் இப்படத்தில் மிக வித்தியாசமான பாத்திரம் ஒன்றில் வருகிறார். அவர் படைத்த சாதனைகள் அளப்பரியது. தொலைக்காட்சி திரைப்படம் என இரண்டிலும் அவரின் பற்பல சாதனைகள்  போற்றப்பட வேண்டும் அவரது சாதனைகளை கௌரவிக்கும் விதமாக இன்று அவருக்கு ஒரு பட்டம் அளிக்கப்படுகிறது. அதை சரண் பல மாதங்களாக திட்டமிட்டிருந்தார். அவர் இந்தப் பட்டதிற்கு முழுதும் தகுதியானவர். அவரது தந்தையின் நினைவுகளும் பாதுகாத்து போற்றப்பட வேண்டும் என்றார். 




ராதிகா சரத்குமார் பேசியது 

என்னை விழாவுக்கு அழைத்த போது இந்த அளவு கொண்டாடிவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவும் போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்த போது என் தந்தை ஆச்சர்யப்பட்டார். நான் சினிமாவில் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன் முதலாக  நடிக்கும் போது மேக்கப்பை தொட்டு என் தொழில் உன்னிடம் இருக்கட்டும் என என்னை ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் என் கேரக்டர் என் அப்பாவின் சாயல்கொண்டது. அது தான் இந்தப்பட்டம் எல்லாம் கொடுப்பதை சரணுக்கு ஞாபகப்படுத்யியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும் எனக்கு இப்பட்டம் அளித்ததற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். 

சரத்குமார் பேசியது. 

ராதிகாவை கௌரவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 41 வருடம் சினிமாவில் இருக்கிறார் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டியவர். என்னை விட அவர் நடிப்பில் மூத்தவர், பிரபல நட்சத்திரம். என்னைப் பொறுத்தவரை அவர் தான் லேடி சூப்பர்ஸ்டார். அவருக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்திருக்க வேண்டும். பத்மஶ்ரீக்கு தகுதியானவர் அவர். இந்தப்படக்குழு அவரை கௌரவித்ததிற்கு நன்றி. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தை தியேட்டரில் ரசியுங்கள். மார்க்கெட் ராஜா வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார். 


நாசர் அவர்கள் பேசியது...
 
இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நடிகவேள் செல்வி எனும் பட்டத்திற்கு ராதிகா தகுதியானவர். சரத்குமார் சொன்னது போல் அவர் இன்னும் பல உயரங்களுக்கு தகுதியானவர். ஒரு படத்தில் சிலையாக நடிக்கச் சொன்னாலும் அந்தப்படத்தில் சிலை நன்றாக நடித்திருகிறது என்கிற பெயரைப் பெற்றித் தருவார் ராதிகா. அவருக்கு வாழ்த்துகள். 

இந்தப்படத்தில் இளைஞர்களுக்கு இணையான ஒரு உருவாக்கத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சரண். இயல்பிலேயே அவர் பல திறமைகள் வாய்ந்தவர். நாயகன் ஆரவ்வுடன் தொடர்ந்து இரு படங்களில் நடித்தேன் இரண்டிலும் வேறு வேறு ஆளாக இருந்தார் பின்னணியில் தன் கதாப்பாத்திரத்திற்கு அத்தனை உழைத்திருக்கிறார். படத்தில் இதுவரை நான் நடித்த மாதிரி இருக்கக் கூடாது என கேட்டு வேறு மாதிரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் சரண். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார். 



இயக்குநர் ஆர் . கே செல்வமணி  பேசியது

இயக்குநர் சரணை ஆரம்பம் முதல்   அனைத்து காலகட்டத்திலும் எனக்கு தெரியும். வெற்றி தோல்வி என எல்லா நேரத்திலும் சம நிலையில் இருப்பவர். இப்படத்தில் அவர் காதல் மன்னன், வசூல் ராஜா சரண் போல் வெற்றி ராஜாவாக திரும்ப வரவேண்டும். ராதிகாவுக்கு இன்று இந்தப்பட்டம் அளிக்கப்பட்டது மிகுந்த பெருமை வாய்ந்தது. இனி அவர் பெயர் சொல்லும்போது அவரது தந்தை நடிகவேள் எப்போதும்  நினைவுகூறப்படுவார் என்றார். 


நடிகை ரோகிணி பேசியது 

இந்த விழாவில் ராதிகா அவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சி. அவரது தைரியம் அவரது ஆற்றல் மூலம்  பல பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர். இந்தப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது தந்தையின் சாயலில் மிக வித்தியாசமான ஒன்று. கண்டிப்பாக பெரிதாகப்பேசப்படும். இந்தக் கேரக்டர்களை எல்லாம் உருவாக்கிய இயக்குநர் சரணுக்கு நன்றி. முன் தாயாரிப்புகள் அதிகம் தேவைப்பட்ட  ஒரு படமாக இந்தப்படம் இருந்தது. ஆரவ் காவ்யா, விஹாண் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி என்றார். 


ஒளிப்பதிவாளர் கே வி குகன் பேசியது...

இந்தப்படம் ஒரு குடும்பத்தோடு  பயணித்தது போல் இருந்தது. இன்று நான் ஒளிப்பதிவாளராக இருக்க மிக முக்கிய காரணம் என் அண்ணன் சரண். பல கஷ்டங்களுக்கு பிறகு வந்திருக்கிறார். அவருக்கு இந்தப்படம் பெரு வெற்றி பெற வேண்டும். இன்னும் நிறைய வெற்றி படங்கள் அவர்  இயக்க வேண்டும் என்றார். 


நாயகி காவ்யா தப்பார் பேசியது...

என்னை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தியதற்கு இயக்குநர் சரணுக்கு மிக்க நன்றி. இப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைரிடம் இருந்தும் நான்  நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தில் நாங்கள் நிறைய உழைத்திருக்கிறோம். படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றார். 

இசையமைப்பாளர் சைமன் கே கிங் பேசியது... 

555 படத்திலிருந்தே தயாரிப்பாளர் மோகன் சாரைத் தெரியும். சரண் சாருடன் படம் பண்ணப்போகிறோம் என்றபோது முதலில் பயந்தேன். அவரது எல்லாப்படத்திலும் பாடல்கள் பெரிய  ஹிட். அதற்கு காரணம் அவர் எப்போதும் இளமையாக இருக்கிறார்.  புதுமைகளை ரசிப்பவர். அவருடன் வேலை செய்தது என்னை நிறைய மாற்றியது. இந்தப்படத்தின் பாடல்களுக்கு கிடைத்த அனைத்து வரவேற்புக்கும் பின் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. உழைத்த  எல்லோருக்கும், வாழ்த்திய அனைவருக்கும்  நன்றி என்றார். 


நாயகன் ஆரவ் பேசியது... 

இது என்னுடைய முதல் படம். பிக்பாஸுக்கு பிறகு எனக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் நாயகனாக வாய்ப்பு தந்தார் மோகன் சார் அவருக்கு நன்றி. நான் புதுமுகம் எனக்கு கதை சொல்லி என்னை சம்மதிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அதைச் செய்தார் சரண் சார் அவருக்கு நன்றி. ராதிகா மேடமுடன் நடிக்க ஆசைப்பட்டேன் ஆனால் இந்தப்படத்தில் அவர் நடித்திருக்கும் அம்மா ரோல் எல்லோருக்கும் சர்ப்ரைஸ்ஸாக இருக்கும். காவ்யா தப்பார் அழகான திறமையான பெண் மார்க்கெட் ராஜா பக்காவான கமர்ஷியல் படம் எல்லொருக்கும் பிடிக்கும் படி இருக்கும் பாருங்கள் ஆதரவு தாருங்கள் என்றார். 



இயக்குநர் சரண் பேசியது.. 

இந்த மேடை மட்டுமல்ல எந்த மேடையையும் எனக்கு தந்த இயக்குநர் இமயம் பாலச்சந்தர், நண்பர் அஜித், தயாரிப்பாளர் சுரபி மோகன் அனைவருக்கும் நன்றி. 

அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது 
நான் வந்துவிட்டேன் மார்க்கெட் ராஜா மூலம் திரும்ப வந்துவிட்டேன். வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன் . இப்படத்தில்  அமர்ககளம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா மேடம். என் படங்களில் வைரமுத்து பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங். இந்தப்படத்தில் வேற லெவல் எனச் சொல்லக்கூடிய உழைப்பைத் தந்திருக்கிறார் என் தம்பி கே வி குகன். என் அம்மா இருந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும். ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில் நடிக்க வேண்டும் ஒரு தேர்ந்த நடிகர் போல  நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார். 


அனைவர் முன்னிலையில் பிரபலங்கள் மற்றும்  படக்குழு கலந்துகொள்ள இசை வெளியீடு நடைபெற்றது.

No comments:

Post a Comment