Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Tuesday 17 September 2019

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததார்ர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பத்திரிகை செய்தி


மின் ஒப்பந்தத்தையும், கட்டட ஒப்பந்தத்தையும் சேர்த்து ஒப்பந்தம் கோரும் அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததார்ர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

175 ஆண்டுகாலமாக மின்துறை ஒப்பந்தமும், கட்டட ஒப்பந்தமும் தனித்தனியே கோரப்பட்டு வந்தன. இந்த நடைமுறையை தற்போதுள்ள மாநில அரசு ஒன்றாக இணைத்துவிட்டது. அரசின் இந்த நடவடிக்கையால், உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததார்ர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு ஒப்பந்தமும் கட்டட ஒப்பந்ததார்ரிடம் வழங்குவதால் மின் துறை சார்ந்த பணிகள் தரமில்லாமல் இருக்கும் என்றும், உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததார்ர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு லட்சக்கணக்கானதொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததார்ர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மின் பொறியியல் பட்டம் பெற்று சுயத்தொழில் செய்துவந்த ஆயிரக்கணாக்கான பொறியியல் பட்டதாரிகளின் சுயத்தொழில் வாய்ப்பும்இதன் மூலம் பரிபோவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மின் ஒப்பந்தத்தையும், கட்டட ஒப்பந்தத்தையும் சேர்த்து ஒப்பந்தம்கோரும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை திரும்பப்பெறக்கோரி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததார்ர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் கருணாமூர்த்தி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பட்டத்தில் பேசிய தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததார்ர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கருணாமூர்த்தி, 175 ஆண்டுகாலமாக பின்பற்றி வந்த நடைமுறையை மாநில அரசு தற்போது மாற்றியுள்ளதாக கூறினார். மின் ஒப்பந்தமும், கட்டட ஒப்பந்தமும் சேர்த்து வழங்கினால், மின் ஒப்பந்த பணிகள் தரமில்லாததாக இருக்கும் என்றும், அண்மையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேரிட்ட விபத்தே அதற்கு சான்று என்றும் தெரிவித்தார். மேலும், உரிமம் பெற்ற மின் உப்பந்ததார்ர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதித்துவிடுவதோடு, மின் ஒப்பந்ததார்ர்கள் மூலம் மறைமுக வேலைவாய்ப்புகளை பெற்றுவந்தவர்களின் நிலையும்கேள்விக்குறியகியுள்ளதாக தெரிவித்தனர்.


மின் ஓப்பந்ததாரர்களின் வாழ்வு நிலை பாதிப்பு - கண்டுகொள்ளுமா? தமிழக அரசு : https://www.youtube.com/watch?v=cm9kYHlZDrs

No comments:

Post a Comment