Featured post

இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில்

 *‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது*     நந்தினி ஜ...

Friday 20 December 2019

தம்பியின் தயாரிப்பில் மற்றொரு தம்பி

தம்பியின் தயாரிப்பில் மற்றொரு தம்பி கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கும் “தம்பி” படம் இவ்வாரம் வெளியாவதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜோதிகா.

படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து


தம்பி எப்படி உருவானது ?

ஜோதிகா : எதிர் பார்க்கவே இல்ல, எப்படி நடந்ததுனு இப்பவும் ஆச்சர்யாமா இருக்கு. அதுவும் தம்பினு டைட்டில் அமைஞ்சது எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
 “தம்பி” எனக்கு படம் இல்ல, ஒரு செண்டிமெண்ட். என் தம்பியோட தயாரிப்பில் இன்னொரு தம்பி கார்த்த்தியோட நடிக்கிற முதல் படம். என் அம்மா ஒரு நாள் ஷூட்டிங் வந்தாங்க. அவங்கள வழக்கம்போல நான் சாப்பிடுங்கனு சொன்னேன் ஆனா அவங்க நான் ஹீரோயின் அம்மாவா வரல, நான் தயாரிப்பாளரோட அம்மாவா வந்திருக்கேன். அவங்க என்ன கவனிச்சுட்டாங்கனு பெருமையா சொன்னாங்க. அவங்க முகத்தில் அவ்வளவு பெருமிதம் இருந்தது என் படத்துல நான் அவங்கள இப்படி பார்த்ததில்லை. எனக்கும் அவ்வளவு பெருமிதம் இருக்கு.






படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது ?

ஜோதிகா : இந்த படமே ஒரு குடும்பம் மாதிரி இருந்தது. வெளிலயும் இது ஒரு குடும்ப படம் தான். ஜீத்து சார் ஃபேமிலி, பாம்பே ஃபேமிலி, எங்களோட முழுக்குடும்பம் எல்லாரும் செட்டுக்கு வந்தாங்க. உண்மையாவே இது குடும்ப படம். வழக்கமா எனக்கு பாம்பேல இருந்து யாரும் வரமாட்டங்க இப்ப வந்திருக்காங்க. இன்னொரு ஸ்பெஷல் என்னோட தம்பி கார்த்திகூட நடிக்கிற படம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நடிக்கிற மாதிரியே தோணல, வீட்ல இருக்கிற மாதிரியே இருந்தது.

கார்த்தி கூட நடிக்கிறது கஷ்டமா ?  இல்ல சூர்யா கூட நடிக்கிறது கஷ்டமா ?

ஜோதிகா : சூர்யா கூட தான். அவர் கூட நடிக்கிறது கஷ்டம் நிறைய சண்டை வரும்.

எப்படியான சண்டை ?

ஜோதிகா: உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை.

கார்த்தியோட நடித்தது எப்படி இருந்தது ?

ஜோதிகா : கார்த்திகிட்ட முதலிலிருந்தே ஒரு விசயம் சொல்ல வேண்டியது இருக்கு. ஒரு ஹீரோவா படம் பண்றப்போ பருத்திவீரன்ல இருந்து இப்ப கைதி வரைக்கும் அவரோட எல்லாப்படத்திலேயும் அவர் கூட நடிக்கிற கேரக்டர்களுக்கு சமமான இடம் கொடுப்பார். நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து பண்றார். இத நான் ரஜினி சார்கிட்ட பார்த்திருக்கேன்.  ரஜினி சார் கூட சந்திரமுகி நடிச்சப்போ முதல் நாள் அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகி பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனுசன்னு தோணுச்சு. அதே ஃபீல் காத்த்திகிட்ட இருந்தது. தன் கூட நடிக்கிறவங்களுக்கு அவ்வளவு இடம் கொடுக்கிறார்.

சத்யராஜ் சார் கூட நடிச்சிருக்கீங்க அவர் பற்றி ?

ஜோதிகா : இந்தப்படத்தோட  ஸ்பெஷல்லே சத்யாராஜ் சார் கூட நடிச்சது தான் . மிகப்பெரிய சந்தோஷம்.  வீட்டில் சொன்னப்போ என் குழந்தைகள் அம்மா நீங்க கட்டப்பா கூட நடிக்கிறீன்ங்கனு சொன்னாங்க, அவங்களுக்கு அது தான் ஸ்பெஷல். நான் கார்த்தி கூட சேர்ந்து நடிக்கிறது பத்தி அவங்க கண்டுக்கவே இல்ல. சத்யராஜ் சார் வீட்டில் அவ்வளவு பிடிக்கும்.

உங்களுக்கான இடம் படத்தில் இருக்கா ?

ஜோதிகா : இந்த போஸ்டர்ல கூட எனக்கு சமமான இடம் குத்திருக்காங்க. இதுவரைக்கும் தமிழ்படத்துல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல  ஹீரொயின் இருந்ததா ஞாபகம் இல்ல. ஒரு ஹீரோ கூட நடிக்கிறப்ப  ரெண்டு விசயம் பார்ப்பேன். என்னோட ரோல் நல்லாருக்கனும், படம் இண்டலிஜண்ட் படமா இருக்கனும். உதாரணமா கைதி சொல்லலாம் அந்தப்படம் கமர்ஷியலா இருக்கும் அதே நேரம் இண்டலிஜண்டா இருக்கும்.

ஜீத்து ஜோசப் இயக்கம் எப்படி ?

ஜோதிகா : ஜீத்து சார் ஒவ்வொரு ஸீனும் ரசிகர்கள்  எப்படி எடுத்துப்பாங்கனு பார்ப்பாரு. அதுல லாஜிக் இருக்கணும்
அவர பத்தி சொல்லனும் அவர் வீட்டில் இருந்து  அவர் மனைவி இரண்டு  பெண்கள் படத்தில  வேலை பார்த்தாங்க, அவங்க டிஸ்கஸ் பண்ணுவாங்க. கூடவே இருப்பாங்க. பாய்ஸ் மாதிரி அவங்க வேலை பார்த்தாங்க. பெண்கள் முன்வந்து அப்படி வேலை பார்ப்பது பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது.

கேமராமேன் ராஜசேகர் கூட நீண்ட இடைவேளைக்கு பிறகு வேலை பார்த்திருக்கீங்க ?

ஜோதிகா : அவர் கூட மூணு படம் பண்ணி இருக்கேன். காக்க காக்க, மன்மதன், ஜில்லுனு ஒரு காதல் மூணுமே ஹிட் படம். நீங்க எனக்கு லககினு சொல்லிருக்கேன். இந்தப்படத்திலும் என்னை அருமையா காட்டியிருக்கார்.

நீங்க, கார்த்தி ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் போது எது கஷ்டமா இருந்தது ?

ஜோதிகா : கஷ்டமாலாம் தோணவே இல்ல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம்.

வீட்லயும் அப்படித்தானா ?

ஜோதிகா : இல்ல வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்.


தமிழ் சினிமால ஜோதிகாவ பொம்பள கமல்னு சொல்லுவாங்க இதுல எப்படி நடிச்சிருக்காங்க ?

ஜோதிகா : அப்படில்லாம் ஒண்ணும்  கிடையாது அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க. என்ன பொறுத்த வரைக்கும் லேடி கமல்னா ஒரே ஆள் ஊர்வசி மேடம் மட்டுந்தான்.


சௌகார் ஜானகி மேடம்
ரொம்பவும் அனுபவம் வாந்த நடிகை அவங்களோட நடிச்சது எப்படி இருந்தது ?

ஜோதிகா : நான் பலமுறை சொல்வேன் தமிழ் சினிமால மூத்த நடிகர்களோட அதிகமா நடிச்ச ஒரே நடிகை நான் தான். அதுல அவங்க டாப். அவங்க கேரவன் யூஸ் பண்ணல. ஒரு மிகப்பெரிய அனுபவம் அவங்களுக்கு எத்தனை வருட அனுபவம் இருக்கு. அவங்களோட சேர்ந்து இருந்தாலே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அவங்க ஹோட்டலுக்கே போக மாட்டாங்க, ஸ்பாட்லயே தான் இருப்பாங்க, இப்பவும் தொழில்மேல அவங்க காட்டற பக்தி ரொம்ப பெருசு. மூத்த நடிகர்கள் சுத்தி ஒரு பெரிய ஆரா இருக்கு. முத நாள் ஜீன்ஸ் டீசர்ட்ல வந்தாங்க, யூனிட்ல இருக்க எல்லாத்து கூடயும் பழகுவாங்க அவங்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்தாங்க, எல்லாத்துக்கும் சமச்சு போட்டாங்க. லவ்லி. இளைய தலைமுறை எல்லாரும் அவஙகிட்ட கத்துக்கணும். அப்பா எப்பவும் சொல்வார் நடிகர்களோட நட்பா இருக்கனும்னு சொல்வார். அத அவங்க கிட்ட கத்துகிட்டேன்.

கோவிந்த் வசந்தா மியூஸிக் எப்படி ?

ஜோதிகா : என்னோட ஃபேவரைட். 96 சாங்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். மெலடி கம்மியாதான் வருது. ஆனா அவர்   சூப்பரான மியூஸிக் தந்திருக்கார்.



உங்க ரியல் லைஃப் ரிலேஷன்ஷிப் இந்தப்படத்துக்கு உதவியா இருந்ததா ?

ஜோதிகா : கண்டிப்பா ரொம்ப ஈஸியா இருந்தது. கேஷிவலா நடிச்சோம். ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் டேக் முடிக்கிறது பிடிக்கும் எல்லாமே ரொம்ப ஈஸியா இருந்தது.


படத்தில் உங்க கேரகடர் எப்படி ?

ஜோதிகா : எனக்கு அக்கா கேரக்டர் இதுவரை பண்ணினதில்ல, அம்மா ஓகே இது ரொம்ப புதுசு நல்லா இருந்தது. அத தவிர இப்ப ஏதும் சொல்ல முடியாது.


உங்க லுக் பத்தி இந்தபடத்தில எப்படி வந்திருக்கு ?

ஜோதிகா : நான் இந்தபடத்தில கார்த்திய விட யங்கா தெரியனும்னு  பண்ணிருக்கேன். அது தான் என் லுக். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இது என்னோட ரெண்டு தம்பிகளோட படம். ரொம்ப இண்டலிஜண்ட்டான படம். எல்லோருக்கும் கண்டிப்பா பிடிக்கும் என்றார்.

No comments:

Post a Comment