Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Tuesday 3 December 2019

சமூகத்தில் ஆசிரியர்களின் பொறுப்புகளை சூழற்றும் அடுத்த சாட்டை திரைப்படம்


மாணவர்களுக்கு ஆதாரவாகவும் சமூக அவலத்திற்க்கு எதிராகவும். சமூகத்தில் ஆசிரியர்களின் பொறுப்புகளை சூழற்றும் அடுத்த சாட்டை திரைப்படம் 

கதை களம் அண்ணன்  ஹூமாயூன் கபீர் நாம் தமிழர் மாநில ஒருகிணைப்பாளர் அவர்களின் #அன்னை_கல்லூரி #அப்பா_கல்லூரியாக

இலங்கை தமிழராக தம்பி யூசுப் நாம் தமிழர் மாணவர் பாசறை பொறுப்பாளர் நடிப்பு முகபாவனை மிகவும் சிறப்பு

சாதிய தீண்டாமை தனம் ஆசிரியர் பெருமக்கள் மத்தியிலும் வேர் பரப்பி இருப்பதை காட்டியுள்ளார்கள். 

அதிலே இரு சமூகத்தின் அடையாளமாக #மஞ்சள்_கயிறு #நீலக்_கயிறு ஆசிரியர்களும் கட்டி இருப்பதும். மாணவர்களும் கட்டி இருப்பதும். இறுதியில் கயிறுகளை சாதிய அடையாளத்தை மண்ணில் புதைப்பது மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது சிறப்பான காட்சி..

ஒவ்வொரு ஆசிரியர்களும் தன் பொறுப்புணர்ந்து தாங்களாகவே மாணவர்களின் மன நிலை சாதிய பாகுபாடு நீங்கியதை பார்த்து சாதி கயிறை கழட்டுகிறார்கள்..

இலங்கை தமிழரிடம் யாரும் பேச கூடாது என்று எச்சரிக்கும் ஆசிரியர் அழகிய தமிழ்மகனின். மகளை காப்பாற்ற இலங்கை தமிழர் அவரின். காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்கும் காட்சி சிறப்பு, அதோடு அந்த கதை முடிந்து விடுகிறது. காவல்துறை புகார் போன்றவை பேசப்பட்டாலும் திரைகதையில் அதை தொடர்ந்து கொண்டு வராமல் போனது ஒரு குறைதான்..

இலங்கை தமிழரிடம் யாரும் பேச வேண்டாம் எனும் காட்சியில் சமூத்திர கனியின் வசனம்
நெஞ்சை தொடுகிறது..

நீங்கள் குடும்பத்தை பிரிந்து எத்தனை நாள் இருப்பீங்க ஒரு நாள் கூட இருக்குமாட்டேன் 
ஆனா அவுங்க பிறந்ததிலிருந்தே குடும்பத்தை இழந்து வாழுகிறார்கள் அவர்களின் #ஆதிமண்ணே_இதுதானேஇங்கும்துரத்தினால்
எங்கே போவாங்க என்ற கேள்வி சிறப்பு

இலங்கை தமிழரை பார்த்து பிறந்த மண் மட்டும் போர்இல்லை வந்த இடத்திலும் போர்தான், என்ற வசனம் இலங்கை தமிழர்களின் வாழ்வின் வேதனையை வெளிப்படுத்தி இருக்கும் சமூத்திரகனி

படிக்கிற ஆசிரியர் வேனாம்
தினம் தினம் படிக்கிற ஆசிரியர்தான் வேனும்வசனம் அருமை

அதிகாரம் எப்போதும் மிரட்டும் லட்சபேர்கள் இருந்தாலும் மிரட்டும். கடத்தும் காணமல்
ஆக்கும் நாம் அதை எதிர்த்து நின்றால்தான் 
நீதி கிடைக்கும் என்ற வசனம் 

ஒரு அமைப்பாக கேள்வி கேட்கனும் என்ற கருத்தியல் சிறப்பு

இந்த வசனத்தின் காட்சி அமைப்பில் ஒரு நெருடல். சமூத்திர கனி பதினைந்து நாள் சஸ்பெண்ட் பன்ன பட்டு இருப்பார் அந்த காலகட்டத்தில் பேசுகிறார். அப்போ வேலையில் இருப்பது மாதிரி ஐடி கழுத்தில் போட்டு இருப்பது சற்று நெருடல்

மாணவர் நாடாளுமன்றம் என்ற அமைப்பு தொடங்கி பிரதமர் துணை பிரதமர் போன்ற அமைச்சர் இலாக்காவாக பிரித்து அவரவர்கள்
கல்லூரியின் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள்..

தம்பி ராமையா நடிப்பு அபாரம் அவரின் மகன்
பிரதமராக நாடாளுமன்ற மாணவர் அமைப்புக்கு இருப்பார். அதிலே பிற சமூதாயத்தை சார்ந்த #ஆதி கதாபத்திரம் துணை பிரதமராக இருப்பார்..

சுவர்கள் இல்லாத வகுப்பறை மாணவர்களை வெளியே அழைத்து சென்று. வங்கிகளில் காசோலை எப்படி நிரப்புவது. இ.சேவை மையத்தில் எப்படி விண்ணப்பம் செய்வது போன்ற விஷயத்தை சொல்லி கொடுப்பது மிகவும் தேவையானதாகும். 

பாட்டில் கூட பல கருத்தியலை வைத்து
 காட்சி அமைப்பு சிறப்பு.

கதையின் இறுதி காட்சி கண் கலங்கவைக்கிறது. தம்பி ராமையா எப்படி தனது சாதிய வெறியை தூக்கி போடுகிறார்

இறுதியில் ஆதி என்னவாகிறார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 

மொத்தத்தில் அடுத்த சாட்டை சாதியை கொடுமைக்கு தீவைக்கிறது

இயக்குநர் அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துகள்

*சோனாபூர் முகைதீன்*
*துபாயிலிருந்து*

No comments:

Post a Comment