Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Monday 3 February 2020

படூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்

படூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு ஆண்டு விழா, நடைபெற்றது. மாண்புமிகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு*

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இவ்வாண்டு வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்  பகுதி நிறைவாக 25 வது ஆண்டு விழா 31.01.2020 வெள்ளிக்கிழமை இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி  வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆர் அரங்கத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் மேதகு. பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்துகொண்டார். இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 25 ஆண்டுகளை நிறைவு செய்ததன் பதிவாக சிறப்பு வெள்ளி விழா ஆண்டுமலரை ஆளுநர் வெளியிட்டார்.

Click here to watch videos:


தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சீ. திருமகன் வரவேற்புரையாற்றியதுடன் வெள்ளி விழா அறிக்கையை வழங்கினார். அவர் பேசுகையில் 1995 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் குறைந்தளவு பாடப்பிரிவுகள் மற்றும் மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 3500 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 200 மேற்பட்ட தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் உள்ளனர். பெருமைகொள்ளும் வகையில் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு தேசிய தரமதிப்பீட்டுக் கழகம் B++ 2(f) சான்றிதழ் வழங்கியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 'ஹிந்தோ உத்சவ்' பல்வேறு கல்லூரிகளுக்கிடையேயான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பெறுகின்றன. மேலும் மாணவர்கள் நலம் சார்ந்து சான்றிதழ் வகுப்புகள் கொண்ட சமூகக் கல்லூரி இயங்கி வருகிறது என்றார்.
 







































 

கல்லூரி இயக்குநர் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் தம் சிறப்புரையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 ஆண்டுகால வளர்ச்சி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் கல்லூரி முதல்வர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, பிரமாண்டமான முறையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பன்னாட்டு திரைப்பட விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு முதலானவற்றைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இந்துஸ்தான் கல்விக் குழுமத் தலைவர் முனைவர். எலிசபெத் வர்கீஸ் தமது தலைமையுரையில் இந்துஸ்தான் கல்விக் குழுமங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அளவிலும் தம்முடைய குறிக்கோள் நோக்கியும் எல்லோருடைய ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மட்டுமின்றி இந்துஸ்தான் சமூகக் கல்லூரி கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருவது குறித்தும் பெருமை கொண்டார்.

விழாவில் 'இந்திரா யோஜனா ' திட்டத்தின் கீழ் இந்துஸ்தான் சமூகக் கல்லூரி மூலமாக சிறந்த தொழில் வளர்ச்சி மற்றும் பத்தாண்டு கால சேவைக்காக அளிக்கப்பெறும் விருதை தமிழக ஆளுநர் அவர்கள் இயக்குநர் டாக்டர். சூசன் மார்த்தாண்டன் அவர்களுக்கு வழங்கினார். ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் துணை முதல்வர் திரு. சாமுவேல் சம்பத்குமார் நன்றி நல்கினார்

No comments:

Post a Comment