Saturday, 18 April 2020

கொரோனவை எதிர்த்து போராடுவோம்

கொரோனவை எதிர்த்து போராடுவோம் .வீட்டிலே இருப்போம் .

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த இரட்டையர்களான ஸ்ரீவிசாகன் (srivishakan), ஸ்ரீஹரிணி( sriharini ).இவர்கள்  இருவரும் உள்ளூர் ,வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது வயதுக்குள் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல்  200க்கும் மேற்பட்ட விருதுகளை காரத்தேவில் வாங்கி  உள்ளனர் .சிறு வயதில் உலக சாதனை படைத்த முதல் இரட்டையரும் கூட கொரோனா விழிப்புனர்வுக்காக  வீட்டிலே சில அடிப்படை விஷயங்களை எல்லோரும் புரியும் படி ,தெரியும் படி  தந்துள்ளனர்  
----------------------------
புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர் முருகானந்தம். அவரது மனைவி பெயர் பிரியா. இந்தத் தம்பதிக்கு 9 (2010) வருடங்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஆண் குழந்தைக்கு ஸ்ரீவிசாகன் (srivishakan) என்றும், பெண் குழந்தைக்கு ஸ்ரீஹரிணி( sriharini )  என்றும் அவர்கள் பெயர் வைத்தனர். முருகானந்தத்திற்கு சிறு வயது முதலே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். எனவே தான் சாதிக்க முடியாததை தன் குழந்தைகள் மூலம் சாதிக்க நினைத்தார். பிறகென்ன மூன்று வயதில் இருந்தே இரண்டு குழந்தைகளையும் பயிற்சிகளில் சேர்த்து விட்டார். ஸ்ரீவிசாகனும் சரி ஸ்ரீஹரிணியும் சரி சிறுவயதிலேயே துறுதுறுவென இருந்ததால் முதலில் நீச்சல் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அது அவர்களுக்கான துறையல்ல என்பது பிறகுதான் தெரிந்துள்ளது.
இதனால் அவர்களை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy ) இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் குமாரிடம் கராத்தே பயிற்சிக்கு சேர்த்து விட்டார்.  அவரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள்முதன்முதலாக 9 வயதுக்குள்  கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து பல்வேறு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து புதுச்சேரி ஆளுநர் . முதல்வர்   மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றனர்.  இவர்கள் காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் ( Good Shepherd English School ) 5ம் வகுப்பு படிக்கின்றனர்  இவர்களை சிறப்பிக்கும் விதமாக பள்ளித் தாளாளர் ரான்சன் தாமஸ் முதல்வர் ஜாய் தாமஸ் ஆகியோர் இவர்களின் பல்வேறு சாதனைகளை பள்ளியின் சார்பாக  புத்தகமாக தயார்செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் கைகளால் வெளியிட்டனர்.
இவர்களைப் பற்றி இவர்களின் அம்மா பிரியா கூறும்போது “3 வயசுலிருந்தே ரெண்டு பேரும் கராத்தே கிளாசுக்குப் போறாங்க. கராத்தேவை நல்லா கத்துகிட்டு இன்னைக்கு உலகிலேயே குறைந்த வயதில் பிளாக் பெல்ட் வாங்கிப் பெருமை சேர்த்திருக்காங்க. இதைப் பார்க்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. கராத்தேயுடன் ஸ்ரீவிசாகன் செஸ் கிளாசுக்கும் போறான். அதுபோல் ஸ்ரீஹரிணி நல்லா ஓவியம் வரைவாள். அத்துடன் கட்டுரை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்’’ என்கிறார் சாதனை இரட்டையர்களின் அம்மா பிரியா.
இவர்களைப் பற்றி இவர்கள் அப்பா முருகானந்தம் கூறும்போது ‘குழந்தைகளின் கராத்தே பயிற்சிக்கான பொறுப்பு என்னுடையது. அவர்களின் பள்ளிப் படிப்புக்கான பொறுப்பு என் மனைவியுடையதுன்னு பிரிச்சிக்கிட்டோம். தினமும் அதிகாலை 5.00 மணிக்கு எழுந்திருச்சி 5.30 மணிக்கு கராத்தே கிளாஸுக்குப் போயிடுவாங்க. இரண்டு மணிநேரப் பயிற்சிக்குப்பின் வீடு திரும்பியவுடன் ஸ்கூலுக்குப் போறதுக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சி வெச்சுருப்போம். ரெண்டு பேருமே ரொம்ப நல்லா படிக்குறாங்க. படிப்புடன் ஸ்கூலில் எந்தப் போட்டி நடந்தாலும் கலந்துகிட்டுப் பரிசு வாங்கிடுவாங்க.” ”கராத்தே போட்டிக்கு வெளியூருக்குப் போகிறபோது வயசு மற்றும் எடைக்கு ஏற்ற மாதிரிதான் போட்டியாளர்களும் இருப்பாங்க. சில நேரத்துல இவங்களைவிட வயசுல பெரியவங்க போட்டியாளரா கலந்துக் கிட்டாலும் அசராமப் போட்டியிட்டு ஜெயிப்பாங்க” என்கிறார் அப்பா முருகானந்தம்.
குழந்தைகளின் கராத்தே மாஸ்டர் குமாரிடம் பேசியபோது ‘‘ஸ்ரீவிசாகன் ஸ்ரீஹரிணி இருவரும் 6 வருடமா என்கிட்ட கராத்தே கத்துக்குறாங்க. எப்போதும் சரியான நேரத்துக்கு வந்துடுவாங்க. இந்த வயசுல பிளாக் பெல்ட் வாங்குவது உண்மையிலேயே பெரிய விஷயம். பல மாநிலங்களிலும் நாடுகளிலும் நடந்தபோட்டியில் இருவரும் ஜெயிச்சிருக்காங்க” என பெருமையுடன் கூறுகிறார்.
சின்ன வயதில் இப்படி அந்தப் பயிற்சி இந்தப் பயிற்சி படிப்பு என இருப்பதால் அவர்களுக்கு பொழுதுபோக்கே இருக்காதா என நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். அதற்கும் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள் இந்த இரட்டையர்கள். கராத்தே பிடிக்கும் என்பதால் திரைப்படங்களிலும் ஆக்‌ஷன் படங்கள் தான் இவர்களது விருப்பமாம்.
இந்தச் சின்ன வயதிலேயே சாதனை புரிந்த உங்களின் வருங்காலக் கனவுதான் என்ன? எனக் கேட்டால் டக்கென இரட்டையர்கள் ஆளுக்கொரு காரணத்தை தெளிவாகக் கூறுகிறார்கள். ‘‘ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும் ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டராகணும் ’’ என்கிறான் ஸ்ரீவிசாகன். ஸ்ரீஹரிணியோ ‘‘நானும் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும்.
எங்கள் தாத்தா இதய நோயால திடீர்ன்னு இறந்துட்டாங்க. அதனால டாக்டருக்குப் படிச்சி இதயநோய் நிபுணர் ஆகி எல்லோரையும் காப்பாத்தணும்’’ என்கிறார்.

No comments:

Post a comment