Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Wednesday 20 May 2020

மாண்புமிகு முதலமைச்சர்

மாண்புமிகு முதலமைச்சர் ஐயா ‌ அவர்கள்‌

தமிழ்நாடு அரசு

சென்னை

 பொருள்‌ :  GYM திறப்பது, வாடகை மற்றும்‌ மின்‌ கட்டணம்‌ கட்ட கால அவகாசம்‌ நீடிப்பது பற்றி

மாண்புமிகு முதலமைச்சர்‌ ஐயா அவர்களுக்கு

உலகத்தையே மிரட்டிவரும்‌ கொரோனாவை தங்களின்‌ அரசு  மிகத்திறமையாக கையாண்டு மக்களை காப்பாற்றிக்‌ கொண்டிருக்கிறது. தங்களின்‌ திறமையான ஆட்சியை எங்களின்‌ TAMIL NADU GYM OWNERS ASSOCIATION வெகுவாக பாராட்டி, பெருமையுடன்‌ வணங்குகிறது.

இந்த தருணத்தில்‌ சிறு வணிகர்கள்‌, சிறு தொழில்கள்‌ மற்றும்‌ தொழிலாலர்கள்‌ பாதிப்படையாமல்‌ தங்களின்‌ அம்மா அரசு எடுத்துவரும்‌ பல நடவடிக்கைகள்‌ மிகவும்‌ பாராட்டதக்கது.

அதேபோல்‌ எங்களின்‌ GYM& FITNESS STUDIO துறையும்‌ மிகவும்‌ பாதிப்படைந்துள்ளது. GYM நிர்வாகிகள்‌, பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ தூய்மைப்‌ பளரியாளர்கள்‌ இவர்களின்‌ வாழ்வாதாரம்‌ மிகவும்‌ பாதித்துள்ளது. இவர்களின்‌ துயர்‌ துடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும்‌ என தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும்‌ உடற்பயிற்சிக்கூடத்தை நிர்வகித்து நடத்திவரும்‌ நாங்கள்‌ வங்கியில்‌ கடன்‌ பெற்று GYM நடத்தி வருகிறோம்‌. கடந்த 60 நாட்களாக உடற்பயிற்சிக்கூடம்‌ மூடப்பட்டதால்‌ வருமானம்‌ இல்லாமல்‌ எங்களின்‌ வாழ்வாதாரமும்‌ முதலீடும்‌ மிகவும்‌ பாதித்துள்ளது. பல கடன்சுமைகளுக்கு ஆளாகியுள்ளோம்‌

எனவே உடற்பயிற்சிக்கூடம்‌ திறக்க தாயுள்ளம்கொண்ட ஐயா அவர்கள்‌ ஆவன செய்ய வேண்டும்‌. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நோய்‌ தொற்று ஏற்படாமல்‌ அரசின்‌ வழிமுறைகளை நாங்கள்‌ பின்பற்றுவோம்‌ என்பதை நாங்கள்‌ உறுதி தருகிறோம்‌.

மேலும்‌ எங்களின்‌ பல வாடிக்கையாளர்‌ டாக்டரின்‌ ஆலோசனைபடி உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில்‌ உள்ளனர்‌. குறிப்பாக DIABETES PATIENT & ABDOMINAL FAT உள்ளவர்கள்‌ உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டும்‌. மேலும்‌ உடற்பயிற்சியின்‌ மூலம்‌ உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்‌. எனவே எங்களுக்கு வழிமுறைகளை வகுத்து கொடுத்து, எங்கள்‌ மேல்‌ கருணைகொண்டு உடற்பயிற்சி நிலையத்தை விரைவில்‌ திறக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ ஐயா அவர்கள்‌ ஆவன செய்ய வேண்டும்‌. அரசு கூறும்‌ அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும நாங்கள்‌ பின்பற்றுவோம்‌ என உறுதி கூறுகிறோம்‌.

மேலும்‌ TAMIL NADU GYM OWNERS ASSOCIATION சில கோரிக்கைகளை தங்களின்‌ கனிவான பார்வைக்கு முன்வைக்கிறோம்‌. எங்களின்‌ இந்த துயரத்திற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருமாறு மிகதாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

A. 60 நாட்களாக மக்களின்‌ பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சிக்கூடம்‌ மூடப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டங்களில்‌ எந்தவிதமான வருமானமும்‌ GYM நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால்‌ வாடகை கேட்டு வணிக கட்டிட உரிமையாளர்கள்‌ எங்களை வற்புறுத்துகிறார்கள்‌. வருமானம்‌ இல்லாததால்‌ கடந்த ஊரடங்கு காலகட்டத்தில்‌ முழு வாடகை தொகை செலுத்த இயலாத நிலையில்‌ உள்ளோம்‌. இதற்கு தங்களின்‌ தயவான தீர்வினை அளிக்குமாறு தயவுகூர்ந்து கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

B. கடந்த 60 நாட்களாக GYM & FITNESS STUDIO திறக்கவில்லை மின்சாரத்தையும்‌ பயன்படுத்தவில்லை. ஆனால் சென்ற மாதம்‌ செலுத்திய மின்கட்டனத்தை கட்ட சொல்கிறார்கள. சென்ற மாதம்‌ செலுத்திய பெருந்தொகை தற்போது வருமானமே சுத்தமாக இல்லாத இந்த சூழ்நிலையில்‌ எங்களால்‌ மின்கட்டணம்‌ செலுத்த இயலாத நிலையில்‌ உள்ளோம்‌. எனவே மின்சாரம்‌ பயன்படுத்தாத ஊரடங்கு காலகட்டத்தில்‌ மின்‌ கட்டணத்தில்‌ இருந்து எங்களுக்கு விலக்களிக்க வேண்டும்‌

என தங்களை வணங்கி மிகத்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்கள்‌ எங்களின்‌ குறைகளை நேரில்‌ தெரிவிக்க நேரம்‌ ஒதுக்கி தருமாறு மிகத்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.



நன்றி!

இப்படிக்கு

தங்களை வணங்கி எதிர்பார்க்கும்‌

TAMILNADU GYM OWNERS ASSOCIATION.              Fahad / Prassana/ Rajesh   7339411222 / 9962224466/ 9884345766


தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்ட ஜிம்மிற்கான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

1. உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் லிஃப்ட்/எஸ்கலேட்டர் ஆகியவை பயன்படுத்த அனுமதி கிடையாது.
2. பயிர்சியாளர்கள், உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் நுழைவாயிலில் அகச்சிவப்பு வெப்பமானி மூலம் சோதிக்கப்படுவர். மேலும் உடனடியாக கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படும்.
3. ஒவ்வொரு உறுப்பினர்களும் முககவசம் & கையுறைகளை அணிய வேண்டும். workoutடின் போது கூட அவர்கள் அதை அகற்றக்கூடாது. ஊழியர்கள்கூட பணிபுரியும் நேரங்களில் முககவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.
4. உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சொந்தமாக தண்ணீர் பாட்டிலை எடுத்துவர வேண்டும். (எந்த விதமான தண்ணீர் குளிர்விப்பான்கள் தளத்தில்  வைக்கப்பட மாட்டாது)
5. குழுவாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் ஜூன் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்.
6. ஒவ்வொரு உறுப்பினர்களின் பயிற்சி நேரம் அதிகபட்சம் 60 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. 60 நிமிடங்களுக்குமேல் எந்த உறுப்பினர்களும் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
7. பயிற்சியை முடித்ததும் GYM உபகரணங்களை முறையாக அதன் இடத்தில் வரிசையா அடுக்கி வைக்க வேண்டும். மேலும் எவரும் கூட்டமாக நின்று பயிற்சியோ செய்வதோ, ஆலோசனையோ, பேச்சுக்களோ இருக்கக்கூடாது. GYM கேட்டின் அருகே கூட்டம் கூட்டக்கூடாது.
8. ஏர் கண்டிஷனரை அணைக்க வேண்டும். இயற்கை காற்றோட்டம் மற்றும் விசிறி பயன்முறை ஏசி (Fan mode AC) மட்டுமே பயன்படுத்த வேண்டும் (ஏர் கண்டிஷனரைத் தவிர்க்க அரசால் நமக்கு பரிந்துரைக்கப்படுகிறது)
9. ஊழியர்கள் GYM -ல் அதிக நேரம் செலவிடுவதால் ஊழியர்கள் பணிக்கு முன்னும் பின்னும் அவர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும்.
10. கண்டிப்பாக  தும்மல், இருமல் மற்றும் சுரம் உள்ள எவரும்  ஜிம்மிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். (ஊழியர்கள் உட்பட)
11. ஒரு துடைக்கும் துணி மற்றும் டெட்டோல் (Dettol) கலந்த கிருமி நாசினி பாட்டில்கள் ஜிம்மின் ஒவ்வொரு மூலையிலும் வைக்கப்படும். உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உபகரணங்களைத் துடைக்க வேண்டும்.
12. நீராவி குளியல் மற்றும் shower bath தற்காலிகமாக ஜூன் இறுதி வரை நிறுத்தப்படும். உறுப்பினர்கள் ஓய்வறை மற்றும் லாக்கர்களை பயன்படுத்தலாம்.
13. 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஜிம்மில் அனுமதிக்கப்படுவார்கள்.
14. ஜிம் இடத்திற்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படுகிறது. உதாரணமாக
1000 சதுரஅடி உள்ள இடத்தில் 10 உறுப்பினர்கள், 2000 சதுரஅடி உள்ள இடத்தில் 20 உறுப்பினர்கள், 3000 சதுரஅடி உள்ள இடத்தில் 35 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரண்டு அல்லது மூன்று மாடிகளை கொண்ட ஜிம்களில் ஒரு தளத்திற்கு 10 உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

for TAMILNADU GYM OWNERS  ASSOCIATION

சங்க நிர்வாகிகள்

No comments:

Post a Comment