Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Saturday 11 July 2020

புதிய நெமர்டியன் புழு இனம்

புதிய நெமர்டியன் புழு இனம் சென்னையின் கோவளம் கடற்கரையில் சத்யபாமா விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
அண்மையில் வெவ்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களான சத்யபாமா பல்கலைக்கழகம், ரஷ்யன் அகாடமி ஆப்சயின்ஸ், ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூஷன், அமெரிக்கா ஆகிய விஞ்ஞானிகளுக்கு இடையிலான கூட்டு முயற்சியில் ஒரு புதிய இன நெமர்டியன் புழு (டெட்ராஸ்டெம்மாஃப்ரீயே) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய புழு இனம் ஒரே நேரத்தில் ஹவாய் (ஓஹு தீவு) மற்றும் இந்தியா (குறிப்பாக சென்னைகோவளம் கடற்கரையில்பாறை நிறைந்த இடத்திலிருந்து) கண்டுபிடிக்கப்பட்டது. இதன் முடிவுகள் புகழ்பெற்ற சர்வதேச “ஜூடாக்ஸா” இதழில் வெளியிடப்பட்டுள்ளது.




“கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் கடற்கரையில்(சென்னை முதல் கன்னியாகுமரி) சேகரிக்கப்பட்ட பல்வேறு நெமர்டியன் புழு இனங்கள் மற்றும் அதன் மாதிரிகள் பற்றிய விரிவான களப்பணி மற்றும் நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய நெமர்டியன் புழு (டெட்ராஸ்டெம்மாஃப்ரீயே) வெளி மற்றும் உள் உருவ அமைப்பின் அடிப்படையில் புதிய இனம் என்று அடையாளம் காணப்பட்டதாக” தகவல் சேகரித்த சத்யபாமா ஆராய்ச்சி அறிஞர்கள் Mr. விக்னேஷ் மற்றும் Ms.ருச்சி கூறியுள்ளனர்.
மேலும்,“டெட்ராஸ் டெம்மா இனத்தின் கீழ் உள்ள நெமர்டியன் புழு உலகில் 110க்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும்அதன் பன்முகத்தன்மை இந்தியாவில் மிகவும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கடலோரப் பகுதியில் நெமர்டியன் பல்லுயிரியலை ஆவணப்படுத்த தீவிர கள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்கால ஆய்வுகளுக்கான நெமர்டீயன்களின் அடையாள குறிப்புகளையும் நாங்கள் தரப்படுத்தியுள்ளோம்” என்று சத்யபாமா விஞ்ஞானி Dr. ராஜேஷ் கூறியுள்ளார்.
“டெட்ராஸ்டெம்மா சில சிக்கலான நெமர்டியன் புழுஇனங்களில் ஒன்றாகும். எங்களிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் டெட்ராஸ் டெம்மா வெப்பமண்டல கடல்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. தற்போதைய ஆய்வு நெமர்டியன்களை அடையாளம் காணும் சமீபத்திய ஹிஸ்டாலஜி-இலவச அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளோம். மேலும், இந்த நெமர்டியன் புழுஇனத்திற்கு தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (என்.எம்.என்.எச்)ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூஷன், அமெரிக்காவில் பல ஆண்டுகளாக புலம் மற்றும் ஆய்வக பணியில் குறிப்பிடத்தக்க உதவிகளை மேற்கொண்ட Ms.ப்ரேயாகோட்ஸ் என்பவரின் பெயரை மரியாதை நிமித்தமாக சூட்டியுள்ளோம்” என்று முன்னணி பேராசிரியர் Dr.அலெக்ஸி செர்னிஷேவ், ரஷ்ய அகாடமி ஆப்சயின்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் Drஜே. எல். நோரன்பர்க் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்தப்பதிவில் முதன் முறையாக ‘உருவவியல் மற்றும் டி.என்.ஏ குறிப்பான்கள்’ இரண்டையும் இணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையாண்டு இந்த புதிய நெமர்டியன் புழுஇனம் (டெட்ராஸ் டெம்மா ஃப்ரீயே) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சத்யபாமா இளம் விஞ்ஞானி Dr.பிரகாஷ் கூறியுள்ளார். இவர் டி.என்.ஏ அடிப்படையிலான வகைபிரிவில் அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர். மேலும், இது போன்ற ஆராய்ச்சிகள் இந்திய கடல்சார் பல்லுயிர்தன்மையில் மிகவும் சிக்கலான இனங்களை கண்டறிய உதவும் என்றும் கூறினார்.
 புகைப்படம்: டெட்ராஸ்டெம்மாஃப்ரீயே; உள்படம்: Mr. விக்னேஷ் மற்றும் Ms.ருச்சி

No comments:

Post a Comment