Thursday, 15 October 2020

21 Day Magic Launch

 த்தக வெளியீட்டு விழா

 நாள் / 13.10.2020

நேரம் / 3:45 pm

இடம் / Radisson Blu Resort Temple Bay, மாமல்லபுரம்

 

சிறப்பு விருந்தினர்கள்

Mr.C.K. குமரவேல் - CEO, Naturals

Mr. சுரேந்திரன் ஜெயசேகர் - CEO, Success Gyan

Mr. சித்தார்த் ராஜசேகர் - Lifestyle Entrepreneur & India's Leading Internet Marketer

Mr. விஜய் கபூர் - Founder & MD, Derby Responsible Menswear

 

Guests of Honor:

Ms. வீணா- Founder, Naturals

Ms. சுமதி ஸ்ரீனிவாஸ்- Founder, Twilite Group

Ms. ஹேமா ராக்கேஷ், Media Personality

Mr. தீனா - Indian Radio Jockey & MD- SaltAudios

 

 

 

 

 

 

21 Day Magic 

 

2020 மார்ச் 20ஆம் தேதி வரை நானும் ஒரு சாதாரண மனிதரைப்போல் தான் இந்த உலகத்தில் என்னுடைய வேலையை செய்து கொண்டு இருந்தேன்.ஒரு மதிய நேரத்தில் covid-19 காரணமாக ஒரு நாள் முழு அடைப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் பிரேக்கிங் நியூஸ் ஆக ஓடியது.நானும் வீட்டிற்கு சென்று குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குப் பிறகு முழு அடைப்பு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது

அனைவரும் தங்களுடைய குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே வராமல் குடும்பத்தோடு மகிழ்ந்திருக்க இது வலிந்து திணிக்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்று கருதினேன்சாப்பிட ,விளையாட, குடும்பத்தோடு நேரம் செலவழிக்க என நேரம் ஓடிக்கொண்டிருந்தது.இப்படியே எத்தனை நேரம் தான் வீட்டிலேயே இருப்பது இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் கோவிட் 19 தொடர்பான செய்திகள் தொலைக்காட்சிகளில் வேகமெடுத்தது. என்னுடைய வாழ்வில் ஏதோ புதிதாக இதுவரை நடந்திராத ஒரு வித்தியாசமான நிகழ்வாகத்தான் இதைப் பார்த்தேன்.

Stay Home Stay Safe இந்த இரு வார்த்தைகளும் சமூகவலைத்தளங்களில் trend  வார்த்தைகளாக வலம் வந்தன .ஆனால் உண்மையாக எத்தனை நாள் தான் மனிதர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய வாழ்வாதாரத்தை தொடர்ந்து கொண்டிருப்பார்கள் ? என்ற கேள்வி என்னுள் எழுந்தது.வீட்டிலேயே இருந்தால் தங்களுடைய பொருளாதார நிலை எப்படி இருக்கும் ? இனி என்ன செய்வது போன்ற கேள்விகள் அனைவருக்கும் எழுந்தது போல எனக்கும் இருந்தது .அந்தக் கேள்வி ஒரு பதட்டத்தை உருவாக்கியது.அந்த நேரத்தில் தேவை தன்னம்பிக்கை சிந்தனைகள் மட்டுமே .அது மனிதன் தன்னுடைய பயணத்தை தொடர்வதற்கான வழிகளில் முக்கியமான ஒன்று. வெறும் தன்னம்பிக்கை மட்டும்தான்

அந்த சிந்தனை எனக்குள் இருந்த ஒரு ரூபத்தை தட்டி எழுப்பியது.இந்த LOCKDOWN காலகட்டம் என்னில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது .எனக்கு என் மீது இருந்த நம்பிக்கை ,என் வாழ்க்கை மீதான என் பார்வையை மாற்றியது .ஏன் என்னுடைய நம்பிக்கை மற்றவர்களுடைய வாழ்க்கை பாதையை மாற்றாது? என யோசிக்க தொடங்கினேன். தொழில்நுட்பங்கள் மூலம் என்னுடைய வாழ்க்கை சிரமம் இன்றியும், எளிதாகவும் ,நான் நினைத்தது நடக்கும் பொழுது, அதை ஏன் மற்றவர்களுக்கும் உருவாக்கி தரக்கூடாது என்ற சிந்தனை மேலோங்கியது. அதிலிருந்து உருவானது தான் இந்த இருபத்தொரு நாட்கள் சேலஞ்ச்.

உடனடியாக செயல்களில் இறங்கினேன் .என்னுடைய அனுபவத்திலிருந்து நான் பெற்ற பழக்கவழக்கங்களை கொண்டு ஆன்லைன் வகுப்பிற்காக பாடத்திட்டததை உருவாக்கினேன். முதன்முதலில் ஃபேஸ்புக் பக்கத்தில் உலகின் முதல் 5 am Webinar என்ற Concept உருவாக்கினேன்

என்னுடைய எண்ணங்களை நான் முழுதாக நம்பினேன்முதல் வகுப்பிற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று நினைத்தேனோ அத்தனை பேர் மட்டுமே வந்தார்கள் .அதற்குப் பிறகு காட்சிகள் மாறியது. என் வகுப்புகளை பார்த்த பல பேர் அவர்களுடைய வார்த்தைகள் மூலமே கடந்த 6 மாதத்தில் பல புதியவர்களை என்னுடைய வகுப்பிற்குள் அழைத்து வந்தது.இந்த ஆறு மாதத்தில் தொழில்முனைவோர்கள், தொழிலதிபர்கள், இல்லத்தரசிகள் மாணவர்கள் என பல பேருடைய வாழ்க்கையில் என்னுடைய இந்த வகுப்புகள் மாற்றத்தை உருவாக்கி இருந்தன

 

நான் மேற்கொண்ட இந்த வகுப்புகள் யாரும் செய்யாதது அல்லது புது பயிற்சியோ அல்ல .ஆனால் இந்த பயிற்சி அனைவராலும் முடிந்த ஒன்றுதன்.இந்த பயிற்சியை எப்படி வெற்றிகரமாக அனைவரும் முடித்தார்கள் என்பதை மிக அழகாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன் .அதேபோல இந்த புத்தகம் 100 தன்னம்பிக்கை புத்தகங்களில் இருக்கக் கூடிய மிக முக்கியமான விஷயங்களை கொண்டிருக்கிறது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை

 

புத்தகம் குறிப்பு

இருபத்தொரு நாள் அற்புதம் என்பது 21 நாட்களில் உங்களுடைய வாழ்க்கையில் புதிதாக ஒரு பழக்கத்தை கற்றுக் கொள்ள முடியும் என்பதுதான். இது ஏற்கனவே நம்முடைய முன்னோர்கள் செய்து காட்டிய ஒரு விஷயம்தான் .இந்த புத்தகத்தை ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பின்புதான் எழுதி இருக்கிறேன் .என்னுடைய வகுப்புகளில் கலந்துகொண்ட அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களை கண்கூடாக பார்த்த பின் தான் இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது .நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு விஷயம் .ஒரு பழக்கத்தை இருபத்தொரு நாட்கள் சரியாக கடைபிடிப்பது . இந்த புத்தகத்தில் எழுத்தாளர் தரணிதரன் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு விஷயம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நோக்கம் என்பது எப்படி இருக்க வேண்டும்? அந்த நோக்கம் உங்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர வேண்டும் என்பது பற்றி விவரித்திருக்கிறார். இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கை குறித்தும் உங்கள் வாழ்க்கையின் மீதான பார்வை குறித்தும் இந்த காலகட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பங்கள் குறித்தும் எளிதாக விவரிக்கிறது.  மிகச் சிறிய மாற்றங்களை மட்டுமே உங்களுடைய வாழ்க்கையில் செய்தால் யார் வேண்டுமானாலும் நேற்றைவிட இன்றைக்கு மேம்பட்ட மனிதனாக உருவாக முடியும் என்பதை இந்த புத்தகம் ஆதாரபூர்வமாக விளக்குகிறது.

====================

எழுத்தாளரைப் பற்றி

தரணீதரன் Digital Life Style Monk. உலகின் முதல் 5 மணி Webinar வரை உருவாக்கியவர். Social Eagle  என்ற நிறுவனத்தை உருவாக்கியவர் இந்த நிறுவனம் சென்னையில் இருக்க கூடிய சிறந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஒன்று.  120 நிறுவனங்களுக்கு Social Eagle நிறுவனம் Digital Promotions செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.Nestle, Singapore Management University, Haagen Daz, Azuz, போன்ற நிறுவனங்களும் அதில் அடக்கம்.

 India's No.1 Salon Chain ,  PAN India for Naturals நிறுனவத்தில்  தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக பணிபுரிந்திருக்கும்  தரணீதரன்  Junior Chamber International  முலம்  Best JC of the year  என்ற விருதையும் பெற்றுள்ளார். இவருடைய Social Eagle நிறுவனம்  GMASA–ஆசியாவின் பெரிய Mobile App நிகழ்வில்  “Best emerging social media company”  என்ற விருதை பெற்றுள்ளது.15 வருடங்கள் கல்வித்தறையிலும் அனுபவங்கள் பெற்றவர் இப்போதுவரை 500க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த கூட்டங்களில் கலந்து கண்டு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுத்திருக்கிறார்இதுவரை லட்சக்கணக்கான மக்களிடம் தன்னுடைய தன்னம்பிக்கை பேச்சு மூலமாக மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்

Madras Institute of Technology  இல் கம்யூட்டர் பொறியியல் படிப்பை முடித்த இவர் , சாப்ட்வேர் இன்ஜினியராக அமெரிக்க டெலிகாம் நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளார். டிஜிட்டல் மார்க்கெட்டிங், தொழில்முனைவோர், மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி குறித்து பல்வேறு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பேசியுள்ளார். தன்னம்பிக்கை சிந்தனைகள் மட்டுமே தன்னை முழுமையாக செழுமைப்படுத்துவதாக நம்புகிறார். 10 லட்சம் தமிழ் மக்களுக்கு தொழில்நுட்பங்கள் முலம் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே இவருடைய நோக்கம்.

  

No comments:

Post a comment