Saturday, 5 December 2020

Disney+ Hotstar VIP யின் “ட்ரிபிள்ஸ்” விழா

Disney+ Hotstar VIP  யின்  “ட்ரிபிள்ஸ்” விழா

Hotstar Specials மற்றும்  Stone Bench Films சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்”. இதன் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் இத்தொடரிலிருந்து ஒரு அழகான காதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதை கிரங்கடித்தது. கலகலப்புக்கு பஞ்சமில்லா காமெடித் தொடரான  “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இந்த நிலையில்  “ட்ரிபிள்ஸ்” தொடரின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள் ஊடகம், பத்திரிக்கை மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் இருந்து சில  முக்கிய துளிகள்.Stone Bench Films சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது... 

முதன் முதலில் நண்பர் கல்யாண் தான் பாலாஜி எழுதியிருந்த திரைக்கதையின் சுவாரஸ்யங்கள் பற்றி கூறினார். நாம் அனைவரும் நகைச்சுவை மேதை கிரேஸி மோகன் அவர்களின் மிகப்பெரும் ரசிகர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பாலஜியின் திரைக்கதையில் அவரின் சாயல் அட்டகாசமாக விரவியிருந்தது.  நாங்கள் அனைவரும் கிரேஸி மோகன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் “ட்ரிபிள்ஸ்” இணையதொடரை அவருக்கு சமர்ப்பிக்கிறோம். ஆரம்பகட்ட கருவே அட்டகாசமானதாக இருந்ததால் உடனடியாக இதன் படப்பிடிப்பு பணிகளை துவக்கினோம். பட உருவாக்கத்தின் போது படக்குழு அனைவரிடமும் நேர்மறை தன்மையுடன் பெரும் உற்சாகம் பரவியிருந்தது. இப்போது இறுதி வடிவத்தை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடரில் நிறைய காமெடியும் அழகான ரொமான்ஸும் உள்ளது. நடிகர் ஜெய் முதல் வாணி போஜன், மாதுரி, ராஜ்குமார், விவேக் பிரசன்னா மற்றும் வெங்கடேஷ் அவர்கள் என அனைவரும் அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள்.  “ட்ரிபிள்ஸ்”  தொடர் ஒரு அட்டகாசமான பொழுதுபோக்கு சித்திரமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட பொருத்தமான கமர்ஷியல் தொடராக இருக்கும். நாங்கள் பொதுமுடக்கத்திற்கு முன்பாகவே முழுப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். ஆனால் இயக்குநர் சாருவின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் படு சுவாரஸ்யமாக இருந்தது.  “ட்ரிபிள்ஸ்” தொடர் ரசிகர்களுக்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பெரு விருந்தாக இருக்கும்.  நடிகர் ஜெய் கூறியதாவது...


உண்மையாக சொல்வதென்றால்  “ட்ரிபிள்ஸ்” தொடரின் படப்பிடிப்பு ஒரு இணைய தொடர் போல் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் எடுப்பதை விட படு கச்சிதமாக இருந்தது. இதன் கலைஞர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணியில் நிறைய தகவல்களை ஆராய்ந்து, வெகு சுவாரஸ்யமானதாக உருவாக்கியுள்ளார்கள். ஒரு வெப் சீரிஸ் விரைவாக முடிந்து விடும் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இத்தொடரின் போது அது பொய்யானது.  நண்பர்கள் தான் என் வாழ்வில் முக்கிய பங்காற்றியுள்ளார்கள் அவர்கள் தான் என் வாழ்வின் முதுகெலும்பாக இருந்துள்ளார்கள். இத்தொடரிலும் ராஜ்குமார், விவேக் பிரசன்னா இருவரும் அது போலவே இருந்தார்கள். தொடரை முழுமையாக இன்னும் பார்க்கவில்லை. திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது போல் டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் காண ஆவலாக உள்ளேன். இயக்குநர் சாருகேஷ் மிகத்திறமை வாய்ந்த இயக்குநர். காதல் மற்றும் காமெடி காட்சிகளை அட்டகாசமாக உருவாக்கியுள்ளார். நடிகை வாணி போஜன் கூறியதாவது... 

நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. மிகச்சிறந்த நண்பராக அவர் பழகுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.  எளிமையான அவரது இயல்பு படப்பிடிப்பில் எனக்கு பேருதவியாக இருந்தது. “ட்ரிபிள்ஸ்” போன்ற ஒரு அட்டகாசமான இணைய தொடரில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நான் மிகவும் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே வேலை பார்த்து வருகிறேன் அந்த வகையில் “ட்ரிபிள்ஸ்” மிக தரமான தொடர். நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படங்களின் தீவிர ரசிகை அவர் நிறுவனம் தயாரிக்க, இத்தொடரில் பங்கு கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு காட்சியும்  சரியாக வர வேண்டும் என கடுமையக உழைத்திருக்கிறார் இயக்குநர் சாரு. அவரது கடின உழைப்பால் இத்தொடர் மிக அழகானதாக வந்திருக்கிறது. இயக்குநர் சாருகேஷ் கூறியதாவது... 

80 கள் மற்றும்  90 வரை என நிறைய விதமான காமெடியை நாம் பார்த்திருக்கிறோம். “ட்ரிபிள்ஸ்”  அப்பாவித்தனம் நிறைந்த காமெடியாக இருக்கும். கதாப்பாத்திரங்கள் சீரியஸாக இருந்தாலும் காட்சி தருணங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக  இருக்கும். குடும்பத்துடனும் நண்பர்களுடன் அமர்ந்து கொண்டாட மிகச்சரியான தொடராக இத்தொடர் இருக்கும். மேலும்  “ட்ரிபிள்ஸ்”   தலைப்பு பற்றி கூறும்போது இத்தொடரில் அனைத்துமே “ட்ரிபிள்ஸ்” அர்த்தத்தை குறிப்பதாக இருக்கும். இதன் முதன்மை கதாபாத்திரங்கள் மூன்று நண்பர்கள், பெண் கதாப்பத்திர ஜோடிகள் மூவர், வில்லன்களும் மூவர். இத்தொடர் மூன்று பிரச்சனைகளை மையமாக கொண்டது எனவே “ட்ரிபிள்ஸ்” தலைப்பு மிகச்சரியானதாக இருக்கும் என்று இத்தலைப்பை வைத்தோம். நடிகர் விவேக் பிரசன்னா கூறியதாவது... 


இத்தொடரில் எனது கதாப்பாத்திரம் மிகவும் வேடிக்கையானது. கண்டிப்பாக எல்லோராலும் ரசிக்கப்படும். எனது கதாப்பத்திரம் மட்டுமல்ல அனைவரது பாத்திரங்களுமே காமெடி கலந்தே இருக்கும் குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழும்  தொடராக இது இருக்கும் டிரெய்லரில் இருந்த காமெடி போல் பல மடங்கு ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த தொடரில் இருக்கும் என்பது உறுதி. 


நடிகர் ராஜ்குமார் கூறியதாவது...


உண்மையில் எனது கதாப்பாத்திரம் ஒரு திருப்பம் கொண்டதாக டிவிஸ்ட் உடன் இருக்கும். அதனை இப்போது இங்கு கூறினால் சுவாரஸ்யம் போய்விடும். “ட்ரிபிள்ஸ்” எனது இயல்புக்கு முற்றிலும் எதிரான கதாப்பத்திரம். ஒவ்வொரு காட்சியும் குலுங்கி சிரிக்கும் வசனங்களை கொண்டதாக இருக்கும் ஒவ்வொரு காட்சியும் முந்தின காட்சியை தோற்கடிக்கும் காமெடியுடன் இருக்கும்.நடிகை மாதுரி கூறியதாவது... 


இத்தொடரில் வேடிக்கை நிரம்பிய சுதந்திரமான பெண்ணாக, ஜெய்யை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைப்பவளாக   நடித்திருக்கிறேன். உண்மையில் அங்கு தான் பரபரப்பு தொடங்கும். இந்த தொடரில் பணியாற்றிய முழு அனுபவமும் அற்புதமானதாக இருந்தது. இத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ராஜ்குமாருடன் இணைந்து நான் சரக்கடிப்பது போல் வரும் காமெடி காட்சி. தொடர் முழுக்கவே சிரிப்பு சரவெடி நிரம்பியதாக இருக்கும். டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் வெளியாகும் இத்தொடரை காண ஆவலாக உள்ளேன். 

நடிகர், பிரபல தொகுப்பாளர் மாகபா ஆனந்த் இந்த நிகழ்ச்சியினை மிக அழகாக தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a comment