சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகைக்கான நம்ம சென்னை'ஸ் எஃப்.பி. விருதினை நடிகை இனியா தட்டிச் சென்றார்*
ஃபைஷாகான்,
பெனிட்டா ஆகியோரின் எஃப்.பி. ஃபேஷன் மற்றும் பிசினஸ் நிறுவனம் சார்பில்,
*நம்ம சென்னை'ஸ் எஃப்.பி. விருதுகள்* வழங்கும் விழா சென்னை
திருவான்மியூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியில், பல்துறை சார்ந்த 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த
சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில்,
சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகை விருதினை நடிகை *இனியா* பெற்றார். சிறந்த
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான விருதினை நடிகர் *ரியாஸ்கானும்*, அவரது
மனைவியும் நடிகையுமான *உமா ரியாஸ்கான்* பெஸ்ட் எண்டர்டெய்னருக்கான
விருதினையும் பெற்றனர்.
மிகவும்
ஸ்டைலான நடிகருக்கான விருது நடிகர் *பப்லூ பிரித்விராஜ்* மற்றும் மிகவும்
ஸ்டைலான நடிகைக்கான விருது நடிகை *சாக்ஷி அகர்வால்* ஆகியோருக்கு
வழங்கப்பட்டது.
மிகவும்
பேசப்படும் நடிகைக்கான விருதினை நடிகை *யாஷிகா ஆனந்த்* தட்டிச் சென்றார்.
சிறந்த புகைப்பட முகம் கொண்ட நடிகைக்கான விருது நடிகை *ஐஸ்வர்யா தத்தா*
வுக்கு வழங்கப்பட்டது.
Click here for video: Celebrities walk the Ramp at FB Awards 2021 | Fashion & Business Awards | Facebook Awards 2021 - YouTube
நடிகை *அபிராமி* சித்ரபதங்கா
என்ற விருதினை பெற்றார். சிறந்த செல்வாக்கு மிக்க நபருக்கான விருதினை
நடிகை *சுஜா வரூணி* யும், வளர்ந்து வரும் கன்னட நடிகைக்கான விருதினை
*சுபரக்ஷா* வும் பெற்றனர்.
மேலும், பலதுறைகளில் சிறந்த சாதனையாளர்கள் பலருக்கும் எஃப்.பி. விருதுகள் வழங்கப்பட்டன.