Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Wednesday 24 February 2021

முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் இளம் வில்வித்தை வீரர்கள் புதிய உலக சாதனை படைத்தனர்.

முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் இளம் வில்வித்தை வீரர்கள் புதிய உலக சாதனை படைத்தனர்.

 முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு
மாணவர் ஆர்.கே.சாய்ஸ்ரீ கார்த்திக்,மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர் ஆர்.கே.ஶ்ரீசந்தான பாலன் ஆகியோர்  வில்வித்தையில் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
 
 
சமீபத்தில் சென்னை சேட்பட்டிலுள்ள உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் ஆர்.கே.சாய்ஸ்ரீ கார்த்திக் மற்றும் ஆர்.கே.ஶ்ரீசந்தான பாலன் ஆகியோர்
 12 சுற்றுகளில் 26 அம்புகளை  மிகக்குறைந்த கால அளவில் வெற்றிகரமாக முடித்து, புதிய  உலக சாதனை படைத்துள்ளனர்.

அர்ஜுனா வில்வித்தை அகாடமி ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 20 பள்ளிகள் பங்கேற்றன. வில்வித்தை மீதான மாணவர்களின் ஆர்வம், இந்த இளம் வயதிலேயே ஒரு அபார சாதனை முயற்சியை மேற்கொள்ளத் தூண்டியது.அவர்களின் இந்த துணிகரமான முயற்சி உலக சாதனைப் புத்தகத்தில் உலகின் "இளம் சாதனையாளர்கள்"
என்ற  மதிப்புமிக்க பட்டத்தை வெல்ல வழிவகுத்தது.

அவர்களது இந்த அற்புதமான சாதனையைப் பாராட்டிப் பள்ளி நிர்வாகம் அவர்களை வாழ்த்துகிறது.


No comments:

Post a Comment