Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Thursday 4 March 2021

அப்பல்லோ மருத்துவமனை, கட்டட விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பை

அப்பல்லோ மருத்துவமனை, கட்டட விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பை அடைந்த 20 வயது இளைஞரின் உயிரைக் காப்பாற்றி ஒரு புதிய வாழ்க்கையை அவருக்கு வழங்கியுள்ளது

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) உள்ள அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, பல உயிர் காக்கும் சிகிச்சை நடைமுறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு அந்த இளைஞரின் உயிரைக் காத்துள்ளது

சென்னை, 04 மார்ச் 2021: ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான பன்னோக்கு மருத்துவமனை சங்கிலித் தொடரான அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு பகுதியான  சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விபத்தில் படுகாயம் அடைந்த இளை{ருக்கு மிகச் சிக்கலான சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காத்துள்ளது. ஒரு கட்டுமான தளத்தின் 17 வது மாடியில் இருந்து தற்செயலாக விழுந்த 20 வயது இளைஞருக்கு அப்பல்லோ மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து புதுவாழ்வு அளித்துள்ளது. ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபேஷ் குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர், டாக்டர் பிரதீமா ராமச்சந்திரன், டாக்டர் தேவச்சந்திரன் ஜெயக்குமார், அவசர சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சையை வழங்கினர். 

Click here to watch recovered patient & Apollo Doctors Press Meet

https://youtu.be/0t2ZDqlkGOI

20 வயதான, ஏர் கண்டிஷனிங் மெக்கானிக், எம்.டி. ஃபிரோஜ் ஆலம், என்பவர் சென்னையை அடுத்த பெருங்குடியில் ஒரு பெரிய கட்டுமான தளத்தில் பணிபுரிந்து வந்தார். 2020 டிசம்பர் 9-ம் தேதியன்று, ஃபிரோஜ் தற்செயலாக 17 வது மாடியில் இருந்து தவறி ஐந்தாவது மாடியில் விழுந்தார். இதனால் அவரது உடலில் பல இடங்களில் மிக பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக சென்னை ஓஎம்ஆர்-ரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.


செயல்பாடுகள் இன்றி நினைவு இழந்த நிலையில் மருத்துவமனை்குக் கொண்டு வரப்பட்டார். சுவாசப் பிரச்சினைகள், குறைந்த ரத்த அழுத்தம் எனப்படும் தீவிர ஹைபோடென்ஷன் உள்ளிட்டவை இருந்ததுடன் தலை, வாய், காதுகள் மற்றும் மூக்கில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தப்போக்கு இருந்தது. அத்துடன் அவரது இரண்டு கால்களின் எலும்புகளும் வெளியில் தெரிந்தன. அவசர சிகிச்சைப் பிரிவு வல்லுநர்கள் உடனடியாக அவரது சுவாசக் குழாயை பாதுகாக்கும் சிகிச்சையளித்து செயற்கை சுவாச முறையைத் தொடங்கினர்; அவரது குறைந்த ரத்த அழுத்தத்திற்கு ரத்தமாற்றம் மற்றும் இண்ட்ராவீனியஸ் திரவங்கள் எனப்படும் ஐவி திரவங்கள் முறை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. 


அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை ஓரளவு இயல்பு நிலைக்கு வந்ததால் அடுத்து முழு உடலும் விபத்துக் காயங்களுக்காக சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. அவரது ஆக்ஸிபிடல் லோப்களில் ரத்தக் கட்டிகளால் கடுமையான அதிர்ச்சிகரமான மூளைக் காயம், முக எலும்பு முறிவுகள், கழுத்துப் பகுதி முதுகெலும்பு முறிவு, கல்லீரல் மற்றும் ஹீமோபெரிட்டோனியத்துடன் வலது சிறுநீரக காயங்கள், கீழ் மூட்டு எலும்பு முறிவுகள் போன்ற பல வகை ஆபத்தான காயங்களையும் சிக்கல்களையும் சி.டி. ஸ்கேன் வெளிப்படுத்தியது. இதையடுத்து கூடுதல் சிகிச்சைக்காக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவான ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார்.


நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபேஷ் குமார் தலைமையிலான உயர் சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் டாக்டர் பிரதீமா ராமச்சந்திரன் மற்றும் தேவச்சந்திரன் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய ஓஎம்ஆர் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் குழுவினர் இந்தக் காயங்களுக்கு திறம்பட சிகிச்சை அளித்து படிப்படியாக கூடுதல் சிகிச்சைகளை வழங்கி சிக்கல்களைத் தவிர்த்து அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தினர். 


இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது விரிவாக விளக்கிய, ஓஎம்ஆர் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபேஷ் குமார் (Dr. Roopesh Kumar Senior Consultant, Neurosurgeon, Apollo Specialty Hospitals OMR) கூறுகையில், “நாங்கள் உடனடியாக அவருக்கு மயக்க மருந்து அளித்து, அவரது நிலையை சீராகக் கொண்டு வர தேவையான சிகிச்சைகளை வழங்கினோம். சுவாசத்தை எளிதாக்குவதற்காக நாங்கள் ட்ரக்கியோஸ்டோமி நடைமுறையைச் செய்தோம். அத்துடன் மூளை வீக்கத்தைக் குறைக்க மருந்துகளை வழங்கினோம். அவரது இரத்த அழுத்தம் நிலைப்படுத்தப்பட்டவுடன், அவரது எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. எங்களது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு கால்களில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள் சரி செய்யப்பட்டன. சிறுநீரக மருத்துவர்கள் மற்றும் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்டுகளின் குழு அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரக காயங்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாத நடைமுறைகள் மூலம் சிகிச்சை வழங்கியது”. என்றார். 


சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் சிக்கலான நோய் நிர்வாக ஆலோசகர்கள் டாக்டர். பிரதீமா ராமச்சந்திரன் மற்றும் டாக்டர் தேவச்சந்திரன் ஜெயக்குமார் (Dr.Pratheema Ramachandran and Dr.Devachandran Jayakumar,Critical care Consultants, Apollo Specialty Hospitals OMR) ஆகியோர் கூறுகையில், “ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் தொடர்ச்சியாக, அவரது சேதமடைந்த முக எலும்புகள் ஃபேசியோமாக்சிலரி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டன. நடுவில் அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல்கள் மற்றும் பிற குறைபாடுகளுக்கு தொற்று நோய் ஆலோசகரின் வழிகாட்டுதலின் படி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைகளுக்குப் பின்னர் அவர் மறுவாழ்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார், நாங்கள் பிசியோதெரபி, பேச்சு மற்றும் உணவுகளை உட்கொள்ளும் பயிற்சிகளை வழங்கும் சிகிச்சையைத் தொடர்ந்தோம். சுய நினைவு நிலைக்கு அவர் மீண்டும் வந்தவுடன், கடுமையான மனநிலை மாற்றங்களுடன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இதற்கு மனநல மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் உளவியலாளர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இவற்றை அடுத்து அவர் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பினார்.”  என்று விளக்கினர்.


எனினும் அந்த இளைஞரின் கை கால்களின் நான்கு மூட்டுகளிலும் குறிப்பிடத்தக்க விறைப்பு இருந்தது. இது அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு ஒரு தடையாக மாறியது. வாய்வழி மருந்துகளுடன், மையமாக செயல்படும் தசை தளர்த்தி முதுகெலும்பு ஊசி மருந்துகள் (multiple spinal intrathecal injections of centrally acting muscle relaxants along with oral medications) அவருக்கு வழங்கப்பட்டன. இது விறைப்பைக் குறைக்க உதவியதுடன் நடைபயிற்சிக்கு வளைந்து கொடுக்கும் நிலையை ஏற்படுத்தியது.


கிட்டத்தட்ட இரண்டு மாத தீவிர சிகிச்சைகள், பல அறுவை சிகிச்சை முறைகள், பல்வேறு மருந்துகள், பிசியோதெரபி சிகிச்சை, பேச்சுக்கான பயிற்சி மற்றும் சிகிச்சை, அறிவாற்றல் சிகிச்சை (cognitive therapy), மறுவாழ்வு சிகிச்சை ஆகியவற்றுடன் சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிறந்த செவிலியர் பராமரிப்பும் வழங்கப்பட்டது. இந்த சிகிச்சைக் காலகட்டத்தில் ஆதரவாக இருந்த தமது தந்தையுடன் ஃபைரோஸ் தற்போது தமது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லத் தயாராக உள்ளார். 



No comments:

Post a Comment