Featured post

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்

 இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்,  பேபி & பேபி !! விரைவில் திரையில் அழகான ஃபேமிலி எண்டர்டெயினர் பேபி &am...

Tuesday 18 May 2021

”96 க்கும் மேல் ஆக்சிஜன் அளவுள்ள நோயாளிகள் எவரும்

 ”96 க்கும் மேல் ஆக்சிஜன் அளவுள்ள நோயாளிகள் எவரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படக் கூடாது” என்பதே இந்த அரசாணையின் முக்கிய அம்சம். 


இந்த அரசாணைப்படி  கோவிட் நோயாளிகள் 4 வகையாகப் பிரிக்கப்படுகின்றனர். 


1. வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்போர் (1) 


ஒருவர் தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் இல்லை என்றாலும் , கோவிட் பரிசோதனை எடுத்துக் கொண்டாலும் இல்லை என்றாலும், பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானாலும்,   அல்லது நெகடிவ் என முடிவு கிடைத்தாலும், பின்வரும் அறிகுறிகள் இருந்தால் ”அவர் கோவிட்  நோயாளியாகத் தான்” கருதப்படுவார். 


அறிகுறிகள்: உடல்வலி, தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், தொடர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு, இருமல்.


முக்கிய அறிகுறி:  நாக்கில் சுவையும்,  மூக்கில் மணமும் தெரியாமை. 


இவர்களுக்கு ஆக்சிஜன் அளவு >96 க்கு மேல், மூச்சை அடக்கி வைக்கும் திறன் 20 நொடிகளுக்கு மேல் இருக்க வேண்டும். மூச்சு விடுதல் ஒரு நிமிடத்திற்கு 18 முறைக்கு மேல் இருக்கக் கூடாது.


சிகிச்சை: 


இவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கோவிட் பரிசோதனை மையத்திற்கு சென்று ஒருமுறை பரிசோதித்து விட்டு ஆர்டிபிசிஆர் முடிவுக்காக காத்திராமல் , மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.


மருந்துகள்: 

1. "ஐவர்மெட்டின், அசித்ரோமைசின், விட்டமின் சி, சிங்க், ரானிடிடைன்".   

                         

2. காய்ச்சல், உடல்வலி இருப்பின் "பாரசிட்டமால்" எடுத்துக் கொள்ள வேண்டும்.


                         3. நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


                         4. மூச்சுத்திணறல் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குப்புறப்படுத்தல், வலதுபுறம், இடதுபுறம் திரும்பிப் படுத்தல் ஆகியவற்றை ஒரு நாளைக்கு  4 முதல் 8 முறை செய்யலாம். 


2. வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருப்போர்  : (2)


மேற்கூறப்பட்ட அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும்.  எனினும், ஆக்சிஜன் அளவு 96 க்கும் கீழ் குறைந்து 95 ஆக மாறுவோர் , மூச்சை அடக்கும் திறன் 20 க்கும் கீழ் குறையத் தொடங்குபவர், ஒரு நிமிடத்திற்கு 18 க்கும் மேல் 24 தடவை  மூச்சுவிடுவோர் .


கூடுதலாக "மீத்தேல் பிரெண்ட்சலோன் அல்லது டெக்சாமெத்தசோன்” எடுத்துக் கொள்ள வேண்டும். 


3. கோவி சிகிச்சை மையங்கள் , கோவிட் பராமரிப்பு மையங்களில் இருப்போர் : 


ஆக்சிஜன் அளவு 90-94 க்குள் இருப்போர், ஒரு நிமிடத்திற்கு 24 முதல் 30 முறை மூச்சுவாங்குவோர் இங்கு சிகிச்சை பெற வேண்டும்.  


இவர்களுக்கு 2-4 லிட்டர் ஆக்சிஜன்  வழங்கப்பட வேண்டும். 


 கூடுதலாக "லோ மாலிக்குலார் ஹெப்பாரின் அல்லது அன்ஃப்ராக்சினேட்டட்  ஹெப்பாரின்"  அல்லது "ரிவரோக்சபன்" தேவைப்படும். 


ஒருவேளை இப்பிரிவில் அனுமதிக்கப்படுவோருக்கு இரத்த தட்டணுக்கள்  குறைந்தாலோ அல்லது 90 க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ அவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள்.


  4. மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை  தேவைப்படுவோர்: 


90% க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்கள், ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் மூச்சு வாங்குவோர்  இங்கு அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு "ஆக்சிஜன் தெரபி" வழங்கப்படும்.


”இந்த அரசாணை 14 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்பது முக்கியமானது “. இந்த வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதால்  இறப்புகளை எந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடிகிறது என்பதை ஆய்வு செய்த பின் இதைத் தொடர்வதா இல்லையா என நிபுணர் குழு மீண்டும் முடிவு செய்யும்.

No comments:

Post a Comment