Featured post

Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present

 *Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present, Hari directorial, Actor Vishal starrer 'Rathnam&...

Wednesday 2 June 2021

இசையமைப்பாளர் க்ரிஷ் உருவாக்கியிருக்கும்,

 இசையமைப்பாளர் க்ரிஷ் உருவாக்கியிருக்கும், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பாடல் ! 

நடிகர், இசையமைப்பாளர் க்ரிஷ், தன் பன்முக திறமையினால்,  தமிழ் சினிமாவில்,  புகழ் மிக்க படைப்பாளியாக,   கவனம் குவித்து வருகிறார். சமீபத்தில் முருக கடவுள் குறித்து, ஆன்மிக பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றியை குவித்த, அந்த ஆல்பம்  பல முனைகளில் இருந்தும் பாராட்டுக்களையும் குவித்தது. இந்த நிலையில் தற்போது நம் சமூகத்திற்கு அவசியமான, கோவிட் தடுப்பூசி குறித்த, விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஒரு அற்புதமான பாடலை உருவாக்கியுள்ளார். SP Dr. சிவக்குமார் IPS, இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். 

பாடல் குறித்து இசையமைப்பாளர் க்ரிஷ் கூறியதாவது.... 

மதிப்புமிக்க, அற்புதமான இந்த விழிப்புணர்வு பாடலில், பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மனிதகுலம் வரலாற்றில் பல விதமான போர்களையும், போராட்டங்களையும் கடந்தே வந்திருக்கிறது. ஆனால் தற்போதைய நமது போராட்டம், முற்றிலும் மாறுபட்டது. இப்போது காலம் நம் மீது தொடுத்திருக்கும் போர் மிகப்பெரும் சவால் அளிக்ககூடியது. இந்தப் போரில் நாம் அனைவருமே போர் வீரர்கள் தான். நம்முடைய கேடயம் என்பது சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகும். மேலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதும், மாஸ்க் அணிவதும், இந்தப்போரில் நமது தலையாய கடமையாகும். ஆனால் இந்தப்போரில் வெல்ல, இவையனைத்தையும் விட முக்கியமானது, ஒவ்வொருவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்வதே ஆகும். தடுப்பூசியால் மட்டுமே நாம் இந்த கொடிய காலத்தை கடந்து செல்ல முடியும். இப்பாடல் இந்த சமூக கருத்தை வலியுறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை எழுதிய SP Dr. சிவக்குமார் IPS அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்பாடலை தயாரித்த ஆற்காடில் உள்ள  ‘Sri Kanishk Collections’  நிறுவனத்தாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். 



இந்த அற்புதமான தடுப்பூசி விழிப்புணர்வு பாடலை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், திரு.க்ரிஷ் அவர்கள் மாஸ்க் மற்றும் சானிடைஸர் ஆகியவற்றை 800 க்கும் மேற்பட்ட முன்கள காவல் துறை  பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment