Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Thursday 29 July 2021

நடிகர் அருண் விஜய் - இயக்குநர் ஹரி

 நடிகர் அருண் விஜய் - இயக்குநர் ஹரி கூட்டணியில்  “AV33” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.


தமிழ் திரையுலகில் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அருண்விஜய். தற்போது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் “சினம், “அக்னி சிறகுகள் மற்றும் “பார்டர்” படங்களில் நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் அருண் விஜய், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு, பிரமாண்ட வெற்றிகளை தந்த மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் ஹரி உடன், தற்காலிக டைட்டிலான  #AV33 படத்தில் இணைந்துள்ளார். முன்னதாக துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் தற்போது ராமேஸ்வரத்தில் இன்றுமுதல் ஆரம்பமானது.

இராமேஸ்வரத்தில்  பிரமாண்ட செட் அமைத்தும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். 


அருண் விஜய், ப்ரியா பவானி சஙகர் சம்பந்தமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இராமேஸ்வரம், காரைக்குடி, தூத்துக்குடி பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு, மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.  நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இசை: GV. பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: K.A.சக்திவேல்

எடிட்டிங்: ஆண்டனி 

ஸ்டண்ட்: அனல் அரசு

கலை: சக்தி வெங்கட்ராஜ் 

Pro: ஜான்சன் 

இணை தயாரிப்பு: G.அருண்குமார் 

தயாரிப்பு: டிரம்ஸ்டிக்ஸ்    புரொடக்‌ஷன்ஸ் .

No comments:

Post a Comment