Featured post

Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow.

 Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow Kollywood masala entertainer Har...

Saturday 10 July 2021

நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும்

 நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சமுத்திரக்கனி & யோகிபாபு  நடிக்கும் 'வெள்ளையானை'


இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில்  சமுத்திரக்கனி , யோகிபாபு . ஆத்மியா நடிப்பில் உருவாகியுள்ள படம் "வெள்ளையானை".







இந்த வெள்ளையானை திரைப்படத்தை "மினி ஸ்டுடியோஸ் " தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரித்துள்ளார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார் .


முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,'சாலை ஓரம் ' ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .


இந்த உலகத்தில் உள்ள அனைத்து உரினங்களும்  உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந்துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.



படத்தொகுப்பு - AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் ,  ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த  விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின்  தம்பி  தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் .


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகிறது .


தொழில்நுட்பக்குழு :

எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா

தயாரிப்பு - S .வினோத்குமார்

கலை இயக்கம் -  ஆ .ஜெகதீசன்

ஒளிப்பதிவு - விஷ்ணு ரங்கசாமி

சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்

ஆடை வடிவமைப்பு - நாகு

மேக்கப் - A .சரவணகுமார் , B. ராஜா

விளம்பர வடிவமைப்புகள் - சசி & சசி

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மது

No comments:

Post a Comment