Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Monday 30 August 2021

Black Ticket Cinema மற்றும் Hangover tech Pvt ltd. இணைந்து உருவாக்கிய BTC

 Black Ticket Cinema பத்திரிக்கை செய்தி 

 Black Ticket Cinema மற்றும் Hangover tech Pvt ltd. இணைந்து உருவாக்கிய BTC எனும் ஓடிடி செயலியுடைய பயன்பாட்டின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறது. தற்பெருமையாக இல்லாமல், உண்மையிலயே இந்த செயலி, இந்திய பொழுபோக்கு துறையில் ஒரு மைல்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மொபைல் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் மக்களிடையே அதிகரித்து வரும் வேளையில், மக்கள் விரும்பும் இடத்தில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.  இந்த செயலி பார்வையாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் இருவரையும் மகிழ்விக்கும் நோக்கோடு செயல்படும்

பார்வையாளர்களுக்கு இச்செயலியில் என்ன உள்ளது ?

- இது மாத சந்தா கட்டும்படியான செயலி அல்ல . நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்கு மட்டும் பணம் செலுத்தி, அந்த படைப்பை மட்டும் பார்க்கலாம். 

- உலகில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். 




- நேரடி நிகழ்வுகளுக்கு மாற்றாக டிஜிட்டல் நிகழ்வுகள் உலகளவில் அரங்கேறிவரும் நிலையில், BTC செயலி, அதனை காண வழிவகை செய்கிறது. பல்வேறு இசைகலைஞர்களுடைய, இசைக்கச்சேரிகள் முதலாக பல நிகழ்வுகள் , BTC செயலி மூலம் உங்கள் வீடுகளை வந்தடையும்.

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கான சிறப்பம்சங்கள் 

- Forensic Watermarking - an Anti-piracy தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஓடிடி BTC. ஒரு பயனர் ஒரு படத்தை பார்க்கும் பொழுது, அவருக்கென ஒரு watermark உருவாக்கபடும். அது திரையில் தெரியாது, ஆனால்  திருட்டு நிகழ்வுகள் நடந்தால் அதனை  கண்டுபிடிக்க அது மிக  உதவிகரமாக இருக்கும்

- உங்களது படைப்புகள் உங்களுக்கே சொந்தம். உங்களது படைப்புகளுக்கு BTC உரிமை கொண்டாடாது. நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களது படைப்புகளை தளத்தில் இருந்து நீக்கி கொள்ளலாம். இதைப் படிக்கும் சுயாதீன திரைப்படத் கலைஞர்களுக்கு இந்த செய்தி உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் என்பதை நாங்கள் அறிவோம். 

-  உங்களது படைப்புகளை Geo-Lock செய்து கொள்ளலாம். உங்களது திரைப்படம், தொடர் இந்தியாவில் திரையரங்கில் வெளியிடுவதாக இருந்தால், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பார்க்காத வண்ணம் Geo-Lock செய்து கொள்ளலாம். அதே நேரம் உலகின் மற்ற நாடுகளில் அனைவரும் பார்த்துக்கொள்ளும்படி செய்யலாம். 

- படைப்பு குறித்த வெளிப்படையான தரவுகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது படைப்புகளை இதில் பதிவேற்றும்போது உங்களுக்கு ஒரு லாகின் ஐடி தரப்படும் அதன் மூலம் உங்கள் படைப்பை எத்தனை பேர் பார்க்கின்றனர், எங்கு ஆரம்பிக்கின்றனர், எங்கு ஸ்கிப்  செய்கின்றனர் என அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறலாம். 

- விளம்பரங்கள் மூலம் வருவாய். உங்கள் படைப்புகளை பார்வையாளர்கள் பார்க்கும்போது வெளியாகும் விளம்பரங்களில் இருந்து, நீங்கள் வருவாயில் ஒரு பங்கைப் பெறுவீர்கள். 

- தயாரிப்பாளர் சங்கமும்  அவர்களுக்கு உரிய ஒரு  பங்கை இதில் பெறுகிறது. படைப்புகளுடைய  தயாரிப்பாளரின் வருமானத்திலிருந்து 2% வீதமும், BTC செயலியின் வருமானத்திலிருந்து 2% வீதமும் தயாரிப்பாளர் சங்கத்தை சென்றடையும். 

எனவே, கேள்வி 'ஏன் BTC?' என்பதல்ல, 'ஏன் BTC கூடாது?'  என்பதுதான்.

No comments:

Post a Comment