Featured post

Shibaura Machine to Invest Rs 225 Crore in India to Double Its Manufacturing Capacity

  Shibaura Machine to Invest Rs 225 Crore in India to Double Its Manufacturing Capacity Shibaura Machine India is a subsidiary of Shibaura M...

Tuesday, 26 October 2021

தமிழகம் மற்றும் புதுவையில் முதன்முறையாக Vasco People's Choice Awards என்ற

தமிழகம் மற்றும் புதுவையில் முதன்முறையாக Vasco People's Choice Awards என்ற பெயரில், மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை] விடுதிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்,  பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்,  சி.கே.குமாரவேல்  ஆகியோர்  விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

சென்னை சிட்டி சென்டரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக, Vasco People's Choice Awards என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இத்தகைய விருதுகள் வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

முதல் முறையாக வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருதுகளை, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பல்வேறு பிரபல விடுதியின் உரிமையாளர்கள் தட்டிச் சென்றனர். இந்த விருது வழக்கும் விழாவில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், * பிக்பாஸ் *பாலாஜி முருகதாஸ், கவுதம் ஜெயின், சேஷா சாய், ரங்கநாதன், பிரகாஷ், யஷ்வந்த், ஷீதல், பிரவீன், சி.கே.குமாரவேல் மற்றும் ஹக் குரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.



நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், சிறந்த வடநாட்டு உணவுகளுக்கான விருதை உத்தர் போஜன் மற்றும் சிறந்த துருக்கிய இனிப்புகளுக்கான விருதை ஓசல் புட்ஸ் உணவகங்களுக்கு வழங்கினார். 

அதேபோல், சிறந்த கேக் மற்றும் பேக்கரி வகைகளுக்கான விருதை லா சாக்லேட் மற்றும் சிறந்த பஞ்சாபி உணவுக்கான விருதை பங்ரா ஆகியவற்றிற்கு நடிகர் பாலாஜி முருகதாஸ் வழங்கி கவுரவித்தார். 

மேலும், கவுரவ பேராசிரியர் ரங்கநாதன், சாவி கர்லா மற்றும் லயன்ஸ் கிளப்புகளுக்கான விருதுகளை திரு.சி.கே.குமரவேல் வழங்கினார். சிறந்த தென்னிந்திய உணவுகளுக்கான விருதை VB Signature உணவகத்தின் சார்பில் ஆனந்த் மற்றும் ஆரோக்கியமான உணவுக்கான விருதை வில்லா 51 சார்பில் ரகு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் பெற்ற நிலையில், சிறந்த Chennai Night Life-கான விருதை அக்கி மற்றும் லலித் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கான விருதுகளை டாக்டர்.அனிதா ரமேஷ் மற்றும் ஷீதல் ஜெயின் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்


















































No comments:

Post a Comment