Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Thursday, 2 December 2021

புதுச்சேரியில் ஆல்பா கிளின் நிறுவனத்தின்

 புதுச்சேரியில் ஆல்பா கிளின் நிறுவனத்தின் பொருட்களை சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்,  சந்தோஷ்  உமாபதி மற்றும் ஆல்பா நிறுவனத்தின் இயக்குனர் ஸகாட் ஸ்பரொல் ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர்.


பாக்டீரியா மற்றும் வைரஸ் கிறுமிகளுக்கு எதிரான ஆல்பா கிளின் சானிடைசர், மற்றும் ஆல்பா லாண்டரி ஆகிய பொருட்களின் அறிமுக நிகழ்ச்சி புதுச்சேரி தனியார் உணவகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினர்களாக சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லஷ்மிநாராயணன், சந்திரபிரியங்கா, சாய்சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்த புதிய ஆல்பா கிளின் பொருட்களை  சபாநாயகர் செல்வம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் சந்தோஷ் உமாபதி மற்றும் ஆல்பா நிறுவனத்தின் இயக்குனர் ஸ்காட் ஸ்பரொல் ஆகியோர் ஆல்பா பொருட்களின் பயன்பாடுகள் குறித்து  பற்றி விளக்கினர். நிகழ்ச்சியில்  ஆராய்ச்சியாளர் கணேஷ், திருமலா எண்டர்பிரைஸ் உரிமையாளர் தியாகராஜன், ஜேம்ஸ் யங்,  ஆகியோர் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன் பேசுகையில், கொரொனா காலத்தில் தொற்று எப்படி பரவுகிறது என்பது புதிதாக உள்ளதாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டு 2 ஆண்டுகளாகியும் அதிலிருந்து நாம் மீளவில்லை என்றும் ஆல்பா பொருட்களை இந்தியாவில் முதன்முறையாக புதுச்சேரியில் அறிமுகப்படுத்துவதில் பெருமை என்றும் எவ்வித இராசயன பொருட்கள் இல்லாமல் இது உருவாக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம் என்று தெரிவித்த அமைச்சர், இவைகள் மூலம் மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்றும், நல்ல பொருட்களுக்கு எப்போதும் புதுச்சேரி அரசு ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார்.

































No comments:

Post a Comment