Featured post

Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present

 *Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present, Hari directorial, Actor Vishal starrer 'Rathnam&...

Monday 28 February 2022

சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன்

 சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்த மாநில  மற்றும் தேசிய அளவிலான சோதனைப் போட்டிகளில் 16 பாரா வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் சப்-ஜூனியர்,  ஜூனியர் மற்றும் நான்காவது சீனியர் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2022ல் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர்.


தமிழ்நாடு பாராலிம்பிக்ஸ் அமைப்பின் சார்பாக முதலாவது மாநில சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பாரா பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் மற்றும் நான்காவது சீனியர் ஆண்களுக்கான பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அமைப்பின் சார்பாக 27.02.2002 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நுங்கம்பாக்கம், Focuz Sports Academyல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக  தலைமை ஏற்று தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர், டாக்டர் J.ராதாகிருஷ்ணன் அவர்களும் மற்றும் திருமதி. கிருத்திகா ராதாகிருஷ்ணன் அவர்களும் வருகை தந்து துவக்கி வைத்தனர்.

இந்த போட்டியில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 150 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 11 ஆண்கள் 5 பெண்கள் மொத்தம் 16 பேர் தேசிய போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

11 ஆண்கள் பெயர், மாவட்டம் மற்றும் எடை பிரிவு வருமாறு:- முருகன்-கள்ளக்குறிச்சி 49 எடை பிரிவு, திவாகர்-இராமநாதபுரம் 54 எடை பிரிவு, எம்.சுதாகர்-செங்கல்பட்டு 54 எடை பிரிவு, ஜி.சரவணன் -நீலகிரி 59 எடை பிரிவு, எம்.ராமச்சந்திரன் கோயம்பத்தூர் 59 எடை பிரிவு, ஸ்ரீவேல்முருகன்-மதுரை 65 எடை பிரிவு, எம்.கிருஷ்ணமூர்த்தி-சென்னை 65 எடை பிரிவு, சஞ்சய்குமார்-கள்ளக்குறிச்சி ஜூனியர் 65 எடை பிரிவு, மோகனகிருஷ்ணன்- காஞ்சீபுரம் சப் ஜூனியர் 65 எடை பிரிவு, முஸ்தபா கமல் பாஷா-திருவள்ளூர் ஜூனியர் 49 எடை பிரிவு, ஜி.நாகராஜன்-விருதுநகர் சீனியர் 59 எடை பிரிவு.



































5 பெண்கள் பெயர், மாவட்டம் மற்றும் எடை பிரிவு வருமாறு:-கோமதி-சென்னை 50 எடை பிரிவு, நதியா-விருதுநகர் 55 எடை பிரிவு, தனம் - கள்ளக்குறிச்சி 55 எடை பிரிவு, கஸ்தூரி-சென்னை 67 எடை பிரிவு, யசோதா-கள்ளக்குறிச்சி 79 எடை பிரிவு.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற 16 வீரர் வீராங்கனைகள் அனைவரும் மார்ச் மாதம் 18 முதல் 20ந் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் பங்கு பெற்று விளையாட தேர்வாகியுள்ளனர்.

இந்த நிறைவு விழாவில் பவர் லிஃப்டிங் சர்வதேச மற்றும் ஆசிய பதக்கம் வென்ற திரு.ஜி.இளங்கோவன் மற்றும்  திரு டி. சமய முரளி IRS கூடுதல் சுங்க ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டு இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருமதி.டாக்டர்.ஸ்ரீமதி கேசன், நிறுவனர் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, திரு.அரவிந்த் ஜெயபால், நிறுவனர் ரைன் டிராப்ஸ் NGO, திரு. B கிருபாகர ராஜா பொதுச்செயலாளர், TNPSA, திரு. விஜயசாரதி பொருளாளர், TNPSA திருமதி.நர்மதா வேணி, சினிமா கலை இயக்குனர், Dr.M.S.நாகராஜன் - தலைவர், CPSA,திரு.S. கணேஷ் சிங் - செயலாளர், சென்னை பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment