Featured post

வல்லவன் வகுத்ததடா” படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா

 “வல்லவன் வகுத்ததடா” படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டனர்  !!  எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ...

Monday 12 September 2022

வ.கெளதமன் இயக்கத்தில் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை

*வ.கெளதமன் இயக்கத்தில் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் "மாவீரா"*

ஜிவி பிரகாஷின் உணர்ச்சிப்பூர்வமான இசையில் உணர்வுமிக்க பாடல்களை எழுதுகிறார் "கவிப்பேரரசு" வைரமுத்து

மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், "கனவே கலையாதே" "மகிழ்ச்சி" திரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படத்திற்கு "மாவீரா" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 



வி.கே புரடக்க்ஷன் குழுமம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் மண்ணதிரும் ஒரு மாபெரும் வெற்றிப்படைப்பாக இத்திரைப்படம் இருக்கும் என இயக்குநர் வ.கெளதமன் உறுதிபட தெரிவித்தார்.


"மாவீரா" குறித்து மேலும் தகவல்களை பகிர்ந்த அவர், "என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவது மட்டும் தான். சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். முந்திரிக்காடு, வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது. "அத்து மீறினால் யுத்தம்" என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீரவரலாறே "மாவீரா" திரைப்படம்," என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், "கதை கேட்ட கணத்திலேயே இசைப் பொறுப்பேற்ற ஜிவி பிரகாஷ் அவர்களுக்கும், "உனக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே இப்படைப்பு ஒரு தலைநிமிர்வு" என்று வாழ்த்தியதோடு "புலிக்கொடி எங்கக் கொடி - நாங்க

பூமிப்பந்தின் ஆதிக்குடி"

எனத் தொடங்கும் பாடலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அடித்து ஆடிப்பாடும் பாடலாக எழுதித்தந்து எனது அனைத்துப் படைப்புகளுக்கும் தோளோடு தோள் நிற்கும் "கவிப்பேரரசு" வைரமுத்து அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்," என்றார். 


"மாவீரா" திரைப்படத்தின் ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் தீட்ட, கலை இயக்கத்தை மாயப்பாண்டியும், சண்டைப் பயிற்சியை "ஸ்டண்ட்" சில்வாவும், படத்தொகுப்பை ராஜாமுகமதுவும், மக்கள் தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கிறார்கள்.


படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகையர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் மகிழ்வோடு இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்தார். 


No comments:

Post a Comment