Featured post

CHALLANI'S DAIMOND FESTIVAL

 *CHALLANI'S DAIMOND FESTIVAL*  Challani Jewellers T.Nagar Celebrates Diamond Festival From 5th June To 15th June. The Inauguration Has ...

Friday, 31 March 2023

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்

 *இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது*


இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.


அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ​​ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.

No comments:

Post a Comment