Featured post

Dhoni Entertainment’s L.G.M. teaser gets a heart-warming response

 *Dhoni Entertainment’s L.G.M. teaser gets a heart-warming response*  Dhoni Entertainment’s maiden Tamil production ‘LGM’ is being highly an...

Tuesday, 11 April 2023

கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் '22 யார்ட்ஸ்' அமைப்பு

 *கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் '22 யார்ட்ஸ்' அமைப்பு கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாமை ஏப்ரல் 14 அன்று ஆரம்பிக்க உள்ளது*


கிரிக்கெட் ரசிகரான ஆதித்யா ரவி தன்னுடைய 16-வது வயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையில் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார்.


2014 இல் R. அஷ்வின் வழிகாட்டியாக இருந்த ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட் மூலம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டார். மேலும், லீக் அணியில் திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில்,

 வாய்ப்புகள் மற்றும் எங்கு அணுகுவது என்பது அவருக்குத் தெரியாததால், லீக் அணியில் சேருவது அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது.






இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் தோன்றிய யோசனையே '22 யார்ட்ஸ்'. தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்கும் வகையிலும், திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாகவும்  '22 யார்ட்ஸ்' அமைந்தது. 


பின்பு தங்கள் வீரர்களின் திறமைகளை சுவைக்க மேட்ச் எக்ஸ்போஷர் தேவைப்பட்டது. எனவே, அவர்கள் சொந்தமாக போட்டிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இது அவர்கள் சென்னை முழுவதும் தங்கள் சொந்த உள்கட்டமைப்பை உருவாக்க வழிவகுத்தது.


'22 யார்'டில் இப்போது 5 + கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, இரண்டு ஃப்ளட்லைட் கிரிக்கெட் மைதானம் என்பது MAC ஸ்டேடியத்திற்கு அடுத்ததாக ஒரு தனித்துவமான வசதிகளுடன் கூடிய ஒன்று.


அனைத்து வீரர்களின் தகவல்களையும் கையாள, '22 யார்ட்ஸ்' பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது வீரர்களின் தகவல்களை உள்ளடக்கியதாகவும் அவர்களின் திறமைகளை கண்டறிந்து சரியான வாய்ப்புகளை தரவும் வழிவகுக்கும்.


"சுமார் 4 முதல் 5 வருடங்களாக அஷ்வினிடம் எங்களின் முன்னேற்றம் குறித்து நான் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறேன். எங்களுக்கு அவர் தனது பிஸியான காலத்திலும் நேரம் ஒதுக்கி ஆலோசனைகாலையும் தெரிவிப்பார்" என்கின்றனர்.


ப்ரித்தி அஷ்வினின் திறமையான தலைமையில் '22 யார்ட்ஸ் ஜென் நெக்ஸ்ட்'   பயிற்சியளிக்கப்பட்டு, பொருத்தமாக இருக்கும் திறமைசாலிகளுக்கு, உள்ளூர் லீக்குகளில் திறமையை வெளிப்படுத்தவும், ஆர். அஷ்வின் ஆதரவுடன் இந்த சீசனில் இருந்து பிரீமியர் லீக்களிலும் கூட கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 


பான் இந்தியா அளவில் விரிவுப்படுத்தும் வகையில் இந்திய வம்சாவளி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களும் '22 யார்'டில் முதலீடு செய்துள்ள முக்கிய தொகுப்பிலிருந்து எங்களது முதல் சுற்று நிதி திரட்டியுள்ளோம்.


எங்கள் கோடைக்கால முகாமில் 14, 15, 16 ஆகிய தேதிகளில்  திறமையை நிர்ணயிக்க இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தொடர்புக்கு,

CT- 8925724222

No comments:

Post a Comment