Featured post

THE CREATOR Movie Review

THE CREATOR Movie Review  Hai, Hello friends, இப்போ நம்ம பாக்க போறது ஒரு பிரம்மிப்பான action thriller movie 'THE CREATOR", ஓட revie...

Monday, 28 August 2023

நாட் ராமையா வஸ்தாவையா..' பாடல் நாளை வெளியாகிறது

 *'நாட் ராமையா வஸ்தாவையா..' பாடல் நாளை வெளியாகிறது*


இந்தப் பாடலின் பிரத்யேக காணொளியை தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்!



சமீபத்தில் #AskSRK அமர்வின் போது ஷாருக்கான், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ஜவானிலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும் 'நாட் ராமையா வஸ்தாவையா..' பாடலின் டீசரை பகிர்ந்து, தனது ரசிகர்களை மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுத்தினார்.  இப்போது எந்த தாமதமும் இல்லாமல்.. படத்தின் மூன்றாவது பாடலின் கூடுதல் காட்சிகளுடன் பார்வையாளர்களுக்கு பிரத்யேக காணொளியை வெளியிடவிருக்கிறார்கள். 


இந்தப் பாடலை நாளை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


'வந்த எடம் ..' எனும் ஆற்றல் மிக்க கொண்டாட்ட பாடலும்.. 'ஹய்யோடா..' எனும் மனதை வருடும் காதல் மெலோடியும், பார்வையாளர்களை விருந்தளித்துவிட்டு, 'நாட் ராமையா வஸ்தாவையா..' என்ற பார்ட்டி பாடலுடன் நடன அரங்கில் அனல் பறக்கும் நேரம் வந்துவிட்டது. 


டீசர் ஷாருக் கானின் ஆற்றலை வெளிப்படுத்தியது. இது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக அதிகரித்துள்ளது. 'நாட் ராமையா வஸ்தாவையா..' படத்தின் டீசரில் ஷாருக்கான் விளையாட்டுத்தனமான அதிர்வுகளை அமைத்துள்ள நிலையில்.., தயாரிப்பாளர்கள் இப்போது இந்த பாடலிலிருந்து ஒரு பிரத்யேக காணொளியை வெளியிடுகின்றனர்.


பார்வையாளர்களுக்கு அனைத்து சுவைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கிறது படக்குழு. இப்படத்தின் புதிய உள்ளடக்கம் மற்றும் போஸ்டர்கள் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் உற்சாகத்தை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. மேலும் இந்த பாடல் நாளை வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. 


'ஜவான்' படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். மேலும் கௌரவ் வர்மா இணைந்து தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment