Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Monday, 21 October 2024

பேண்டஸி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஆசை " சார் " படத்தின் ஒளிப்பதிவாளர்

 பேண்டஸி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஆசை " சார் " படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன் J ஹாரிஸ்












சூட்டிங்கை வேடிக்கை பார்த்து சினிமாவுக்கு வந்தேன் " சார் " படத்தின் ஒளிப்பதிவாளர் 

இனியன் J ஹாரிஸ்



எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் 2008 ஆம் ஆண்டு Dft படித்து முடித்து விட்டு  பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தன் வில்சனிடம் நான் கடவுள் படத்தின் மூலம் உதவி ஒளிப்பதிவாளராக சினிமா பயணத்தை துவங்கினார்  இனியன் J ஹாரிஸ்.  தொடர்ந்து பாலாவின் அவன் இவன், தெலுங்கில் ஜூனியர் என்டிஆரின் தம், பாலகிருஷ்ணாவின் சிம்ஹா, பவன் கல்யானின் கபர் சிங் 2  போன்ற தெலுங்கு படங்கள் உட்பட பல படங்களில் பணியாற்றினார்.


போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி சிறந்த படமாக அனைவராலும்  அறியப்பட்ட " கன்னி மாடம் " படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக களமிறங்கினார் இனியன் J  ஹாரிஸ், இந்த படத்தின் ஒளிப்பதிவு  அனைவராலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அதை தொடர்ந்து ஒரே இரவில் நடக்கும் கதையான " யுத்த காண்டம்" படத்திற்கு சிங்கிள் ஷாட்டில் ஒளிப்பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த படம் ஜப்பானில் நடந்த ஒசாக்கா ஃபிலிம் பெஸ்டிவலில் சிறந்த படத்திற்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.


ஜீவனின் பாம்பாட்டம், கிச்சு கிச்சு மற்றும் மகத்தின் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, சம்பவம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததோடு  15 ற்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 


தற்போது போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்      " சார் " படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


அவரிடம் பேசியதாவது....

கேப்டன் விஜயகாந்த் நடித்த புது பாடகன்  படத்தின் ஷூட்டிங் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடந்தது அப்போது ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தேன். அன்றிலிருந்து தான் எனக்கு சினிமாவில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது நான் கேப்டனின் தீவிர ரசிகர்.

சினிமாவிற்கு இயக்குனராக வேண்டும் என்று தான் வந்தேன் Technical ஆ ஏதாவது கத்துக்கிறதுகாக ஒளிப்பதிவு படித்தேன் ஆனால் தற்போது முழுநேர ஒளிப்பதிவாளராகி விட்டேன்.


எந்த சீனையும் டிஸ்டப் பண்ணமா அந்த சூழ்நிலைக்கு ஏத்தாவரு வொர்க் பண்ணனும் இதை சொன்னவர் பாலுமகேந்திரா சார். அதை தான் நான் கடைப்பிடிக்கிறேன். எனக்கு பிடித்த ஒளிப்பதிவாளர் அவர் தான்.    அவரோட படத்தில் வரும் கதாபாத்திரங்கள், லைட்டிங் எதுவுமே சீன டிஸ்டர்ப் பண்ணாம இருக்கும். கண்ணிமாடம் படத்தில் நிறைய கத்துக்கிட்டேன்.


சார் படத்தில் அந்த கிராமம் , வாத்தியார் வீடு எல்லா இடத்திலும் சீன டிஸ்டர்ப் பண்ணாம பண்ணியிருப்பேன். இந்த படத்தின் ஒளிப்பதிவை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள் எல்லோருக்கும்  இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


வில்லேஜ், வரலாற்று படம் ரெண்டும் பண்ணியாச்சு நல்ல பேண்டஸி படம் பண்ணனும். அதுதான் எனக்கு ஆசை,  ஏன்னா விசுவல் எபெக்ட்ஸ் கூட மெர்ஜ் பண்ணி ஒர்க் பண்ணனும், இன்னும் சொல்லனும்னா  எஃபக்ட்ஸ் தெரியாம ஒர்க் பண்ணனும், ஒவ்வொரு பிரேமும் மேஜிக்கா தான் இருக்கும். 

அதையும் தாண்டி ஒளிப்பதிவாளராக எல்லா  ஜானர் படங்களிலும்  வொர்க் பண்ணனும்.

 

மக்கள் கொடுக்கிற கைத்தட்டல்கள் மற்றும்  நான் வேலை செஞ்ச படத்தின் இயக்குனர் அடுத்த படத்திற்கு என்னை கூப்பிட்டாலே போதும்  அதுவே எனக்கு பெரிய அவார்ட் தான் என்கிறார் சிம்பிளாக   ஒளிப்பதிவாளர் இனியன் J ஹாரிஸ்.

No comments:

Post a Comment