Featured post

16வது தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்...

 16வது   தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்... ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பாக வைரப்பிரகாஷ் தயாரிப்பில் எஸ் பி பொன்சங்கர் இயக்கத்தில...

Saturday, 2 May 2026

Mythri Movies Makers’s Third Tamil Production titled ‘Modha Rathiri’ Official Announcement!

 *Mythri Movies Makers’s Third Tamil Production titled ‘Modha Rathiri’ Official Announcement!* 



_*Filmmaker Lokesh Kanagaraj unveils the Title of this Content-Driven Entertainer*_


Mythri Movie Makers, one of Indian cinema’s most influential production houses, has consistently set benchmarks with landmark blockbusters like Pushpa franchise and Good Bad Ugly, among several other big-ticket entertainers. Known for delivering high-impact cinema, the banner now takes an exciting step forward by expanding its creative spectrum.


The first look of Mythri Movie Makers’ Production No.3 in Tamil, titled “Modha Rathiri”, has been officially unveiled, marking the beginning of a promising content-driven entertainer. Filmmaker Lokesh Kanagaraj launched the film’s title and first look this evening (May 1, 2026)) on his social media platform. The film, directed by Raja Karuppasamy,  stars Rishikanth alongside Anishma Anilkumar, who gained attention with her performance in Sirai and Youth. 


At the core of Modha Rathiri lies a gripping and intriguing premise: An unusual wedding. One night. Two strangers. Too many surprises. So many lies. What begins as a new life spirals into chaos - a night that changes everything.


Producer Naveen Yerneni - Mythri Movie Makers says, “At Mythri Movie Makers, we have always been associated with large-scale entertainers. At the same time, we strongly believe in telling powerful, content-driven stories that connect with audiences across all sections and age groups. We have always been keen on collaborating with fresh and promising talents, and this project reflects that intent. When director Raja Karuppasamy narrated the script of ‘Modha  Rathiri’, we instantly felt it was the kind of engaging and unique story we wanted to bring to the screen. We are excited to be working with a vibrant team of young actors and technicians, and we look forward to delivering a thoroughly enjoyable theatrical experience for audiences.”


Director Raja Karuppasamy says “Making my directorial debut itself is a big challenge, and to do it under a prestigious banner like Mythri Movie Makers makes it even more special. Their belief in fresh ideas and new talents has given me great confidence and responsibility. I express my gratitude to producers have giving me creative freedom, especially allowing me to work with technicians, I am comfortable to work.  With ‘Modha Rathiri’, we are creating a story that is both engaging and emotionally rooted, while offering a fresh and fresh experience. I sincerely thank producers Naveen Yerneni and Y Ravi Shankar for trusting me with this opportunity.”


The film features a vibrant ensemble cast including Rishikanth, Anishma Anilkumar, Chetan, A. Venkatesh, Bucks, Abdool Lee, Shelly Kishore, Sangeetha Balan, Banupriya, Sumithra Devi L., Varshini Karmegham, Karthikeyan, Velan, and Kowshik Kabilan among others. 


Backed by a strong technical team, the film has Surendran Paranjothi as cinematographer, Ashok Arjunan as editor, and Bharath Sankar composing the music. He is one among the promising next-gen music composers, who was extolled with praises for his commendable works in Mandela and Maaveeran. The crew also includes Poornima Ramaswamy (Costume Designer), A. Balumahendra (Art Director), and Viyaki (Publicity Designer).


With a gripping premise, fresh talent, and the backing of a powerhouse production house, Modha Rathiri promises to deliver a unique, engaging, and thoroughly entertaining theatrical experience. More updates are expected soon.

வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!

 *வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!*




Zee studios & Drumsticks Productions தயாரிப்பில்,   கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது !! 


Zee studios & Drumsticks Productions  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.  


வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர்  ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் இப்படத்தின்  கதை. 


ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். 


இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு - Zee studios & Drumsticks Productions 

தயாரிப்பாளர்கள் - வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால்

இணை தயாரிப்பாளர்கள் - S வைஷ்ணவி விவேக்சந்தர் மற்றும் வினோத் CJ

எழுத்தாளர் -  இயக்குனர்: 

பிரவீன் S விஜய்

ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட்

இசை: சாம் C S

எடிட்டர்: பிரசன்னா G.K

கலை இயக்குனர்: பிரேம் கருந்தமலை, AM ஆனந்த்ராஜ்

ஆடை வடிவமைப்பாளர்: க்வாசய் 

கீர்த்தி ஆடை வடிவமைப்பு : ஸ்ருதி மஞ்சரி

பாடல்கள் - மோகன்ராஜன், கார்த்திக் நேத்தா, உமா தேவி

விளம்பர வடிவமைப்புகள் : தினேஷ் அசோக்

நிர்வாக மேலாளர் : மணி தாமோதரன்

மக்கள் தொடர்பு : சதீஷ்   AIM

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

 *இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!* 



தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது.


இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன், அதில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் தனித்துவமான தோற்றம் மற்றும் மனநிலையை வெளிப்படுத்தும் விதம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


 ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி, அனந்திகா சனில்குமார் இணைந்து நடித்துள்ளனர். 


மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு  தலைவன் தலைவி பட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாப்பாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார்.  மேலும் 

வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


“பரிமளா & கோ” திரைப்படம் Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக  Foxn அறிமுகமாகியுள்ளார்.


திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



தொழில் நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு : Lyca Productions, Tamilkumaran Productions Pvt Ltd, Pasanga Productions

கதை, திரைக்கதை, இயக்கம் : பாண்டிராஜ்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC

இசை : Foxn

எடிட்டர் : பிரதீப் E. ராகவ்

கலை இயக்குனர் : T. ராமலிங்கம்

ஸ்டண்ட் : கலாய் கிங்ஸன்

நடன அமைப்பு : சாண்டி, பாபா பாஸ்கர்

மியூசிக் சூப்பர்வைசர் : சந்தோஷ் குமார்

ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா ராமசாமி

ஆடை : K. நடராஜ்

ஒலிப்பதிவு : M.R. ராஜாகிருஷ்ணன்

சவுண்ட் எஃபெக்ட்ஸ் : ஷ்ரேயாஸ் பத், அருண் பிரசாத்

VFX தயாரிப்பு : B.R. வெங்கடேஷ்

DI : Knack Studios

கலரிஸ்ட் : பிரசாத் சோமசேகர்

விளம்பர வடிவமைப்பு : ADFX Studio

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

தயாரிப்பு மேற்பார்வை : ராமதாஸ் & விஜய் C

சப்டைட்டில்ஸ் : ரேக்ஸ்

Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi

*Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi Shoot Wrapped Up, Releasing Worldwide On June 4*



Mega Power Star Ram Charan’s upcoming rural action drama Peddi, directed by Buchi Babu Sana, wrapped up its entire shooting part. Backed by producer Venkata Satish Kilaru under Vriddhi Cinemas, and presented by Mythri Movie Makers and Sukumar Writings, Peddi is being mounted on a massive scale. The makers have now surprised fans with a significant update. The movie will arrive in cinemas worldwide on June 4th.


The release date poster erupts with raw fury as Ram Charan stands drenched in blood, sweat, and dust, his face lifted in a primal roar. His tangled hair, wounded visage, and tattered shirt paint a vivid portrait of a man forged in chaos. The entire design radiates unfiltered aggression, making it clear that Peddi is gearing up for an explosive big-screen arrival.


The early-June slot places Peddi perfectly within the tail end of summer holidays, ensuring solid footfalls before the academic season begins. Trade circles are already viewing this date as a smart strategic move that gives the film a strong nationwide runway.


The team has completed filming a lavish special number composed by AR Rahman on an extravagant set in Hyderabad, officially wrapping up the production. This vibrant song is expected to be one of Peddi’s standout highlights. Meanwhile, post-production work has already been progressing swiftly in parallel.


Ram Charan went all out for the film, which was evident in the first two glimpses that showcased him in two completely different makeovers. He has also pushed himself further in the songs, delivering standout dance performances that elevate the film’s appeal even more.


The film boasts an impressive ensemble cast, with Janhvi Kapoor playing the female lead. Seasoned actors Shiva Rajkumar, Jagapathi Babu, Divyenndu, and Boman Irani are set to deliver powerful performances in pivotal roles. Technically, the film is fortified by top-tier talent. R. Rathnavelu handles cinematography, Navin Nooli oversees editing, and Avinash Kolla manages production design.


Positioned as a rural sports drama infused with intense action and strong emotions, Peddi is gearing up for a grand pan-India release in all South Indian languages along with Hindi.


Producer Venkata Satish Kilaru and his team are planning an aggressive promotional campaign across the country to set the bar even higher.


Cast: Mega Power Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma, Boman Irani


Technical Crew:

Writer, Director: Buchi Babu Sana

Presents: Mythri Movie Makers, Sukumar Writings

Banner: Vriddhi Cinemas

Producer: Venkata Satish Kilaru

Co producer: Ishan Saksena

Music Director: AR Rahman

DOP: R Rathnavelu

Production Design: Avinash Kolla

Editor: Navin Nooli

Executive Producer: V. Y. Praveen Kumar

Marketing: First Show

PRO: Yuvraaj

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார்

 *மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !*



மெகா பவர் ஸ்டார்  ராம் சரண் நடிக்கும் “பெத்தி” ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !


மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.


வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.


ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.


ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.


இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.


இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.


கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும் பான்-இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.


தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.


நடிகர்கள் :

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா,பொமன் இராணி


தொழில்நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பு  : அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்.


Friday, 1 May 2026

*18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!*

 *18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!*






திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 


நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி”


டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும் சந்திக்கும் ஒரு பொது பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்தான். சமூகத்தை கெடுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்”.


இயக்குநர் விக்ரமன், “எடிசன் விருதுகள் விழாவில் கலந்து கொள்வது பெருமையான தருணம். என் மகன் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வென்றான். அடுத்து அவன் நடிக்கும் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான எடிசன் விருது வெல்ல வேண்டும் என்பது என் விருப்பம். ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் போல எடிசன் விருதும் பெருமைக்குரிய விருது. இந்த விருது விழா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் என்பது என் விருப்பம்”.


நடிகர் ஜெகன், “எடிசன் விருது விழாவை மூன்று வருடங்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறேன். பலருக்கும் இந்த விருது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ராதாரவி சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதற்கு சிறந்த உதாரணம் அவர் நடித்த ‘சின்ன மாப்பிள்ளை’ என்ற திரைப்படம். அம்பிகா மேமுக்கு நான் பெரிய ரசிகன். அவரது எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். விக்ரமன் சாரின் படங்களும் எனக்கு பிடிக்கும். 18 வருடங்கள் எட்டியிருக்கும் எடிசன் விருது விழாவுக்கு வாழ்த்துக்கள்”.


நடிகை அம்பிகா, “18 வருடங்களாக நடக்கும் இந்த விருது விழாவுக்கு வாழ்த்துக்கள். செல்வாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். படப்பிடிப்பை பொருத்து விருது விழாவுக்கு வருகிறேன் என சொல்லியிருந்தேன். சரியான தருணமும் அமைந்தது. ராதாரவி அண்ணன் எனக்கு குடும்பம் போல. விழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி”.


ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, “நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து நின்றாலும் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இயக்குநர் தவிர வேறு யாரேனும் நமது பணியை பாராட்ட மாட்டார்களா, அங்கீகரிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான திறமையானவர்களை கண்டுபிடித்து எடிசன் விருதுகள் கொடுப்பது மகிழ்ச்சியான விஷயம். என்னுடைய ‘சித்திரை செவ்வானம்’ படத்திற்கும் எடிசன் விருது வாங்கியிருப்பது மறக்க முடியாத ஒன்று. ராதாரவி சார், விக்ரமன் சார், அம்பிகா மேம் போன்ற பல முன்னோடிகளால்தான் நாங்கள் இங்கிருக்கிறோம். விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.


பாடகர் அந்தோணிதாசன், “இந்த விருது விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஆரம்ப காலத்தில் நான் பாடியபோது சுற்றி இருந்தவர்களின் கைத்தட்டல்தான் எனக்கு பெரிய உற்சாகம். திரைத்துறைக்கு வந்த பிறகு விருதுகள்தான் அந்த உற்சாகத்தை கொடுத்தது. என்னைப் போன்றவர்களை கெளரவிக்கும் எடிசன் விருது விழாவிற்கு எனது வணக்கங்கள்”.


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “18 வருடங்களாக நடக்கும் விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது சாதாரண விஷயம் இல்லை. சித்தாந்த ரீதியாக ராதாரவி அண்ணனுடன் முரண்பட்டாலும் அவர் மிகவும் அன்பானவர். என்னை பல இடங்களில் முன்னிறுத்தி பேசியிருக்கிறார். திரைத்துறையில் பல நண்பர்கள் எனக்கு இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு பொதுவில் பாராட்டியவர் ராதாரவி அண்ணன் தான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மழைநீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி தடை சட்டம் இதெல்லாம் என்னுடைய சாதனைகள். அதெல்லாம் பேசுபொருளாக மாறவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அதன் மையக்கரு நான் தான். இதை பொதுவில் சொல்லி பாராட்டியவர் ராதாரவி அண்ணன், தமிழ்நாட்டில் வாழுகிற மக்களுக்காகவும், உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்காகவும் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் பேரியக்கம் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி. விருது வென்றவர்களுக்கும் விருது விழாவிற்கு வருகை தந்திருக்கும் ராதாரவி, விக்ரமன், அம்பிகா உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்" என்றார்.

பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM

 *பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM' தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு*









இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள 'எக்ஸாம் -  EXAM' எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எக்ஸாம் -  EXAM'   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 


ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி - இயக்குநர் ஏ. சற்குணம் - துஷாரா விஜயன் - அதிதி பாலன் - ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், '' நாங்கள் 'வா குவாட்டர் கட்டிங் 'எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான 'களவாணி' திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, 'பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்' என எடுத்துச் சொன்னோம்


சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ 'எக்ஸாம்' தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌


சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  'வதந்தி' தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும். 


நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார். 


நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார். 


இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். '' என்றார்.


இயக்குநர் காயத்ரி பேசுகையில், '' அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார். 


ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக-  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.


இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார். 


திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌


பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், '' சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம். 


நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது. 


நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌


அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌


அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள். 


எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்'' என்றார்.

 

நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ' இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி. 


எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌


ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. 


இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம். 


நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 


நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம். 


இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். 


இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை அதிதி பாலன் பேசுகையில், ''  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌


இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது'' என்றார்.


LINK : 

https://youtu.be/8MDZCOZzChM?si=_EmoKSOvaK91u_ND

2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின்

 ‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!



இயக்குநர் தயாள்  பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை வெளியிட்டார் விஜய் சேதுபதி!!



விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது தனது புதிய அப்டேட்டின் மூலம் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது .



படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு ஒரு சக்திவாய்ந்த முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, புகழ்பெற்ற நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சியை வெளியிட்டு, இந்தத் தீவிரமான குற்ற உலகத்திற்கான முதல் வலுவான பார்வையை வழங்கியுள்ளார்.



1 நிமிடம் 27 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிப்பதிவு, சிறைக் கம்பிகளின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் வலுவான, உணர்ச்சி மிகுந்த காட்சிகளை வெளிப்படுத்துகிறது. இந்தக் காட்சிகள் படத்தின் தீவிரம், மர்மம் மற்றும் கதையின் பல அடுக்குகளைக் கொண்ட தன்மையை நுட்பமாக உணர்த்துகின்றன. முதல் பார்வையிலேயே அதன் கரடுமுரடான காட்சித் தன்மை மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், 'பருத்தி வீரன்' சரவணன் சற்குணம் ஆகவும், மாறன் மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.



இந்தக் கதாபாத்திர காட்சிகளை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன் அவர்களும் தனது D Pictures நிறுவனம் மூலம் இணை தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளார்.



சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விரிவாகப் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளில் இறங்கியுள்ளது. பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் சிந்திக்க வைக்கும் திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பக் குழு


கதை, இயக்கம் & இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன் 


திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன் 


ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம் 


எடிட்டிங்: V. பூபதி 


இசை & பின்னணி இசை: தர்புகா சிவா 


பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன் 


ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு 


மேக்கப்: குப்புசாமி 


ஆடை வடிவமைப்பு: ரமேஷ் 


தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன் 


மக்கள் தொடர்பு (PRO): ரேகா.

Makkal Selvan Vijay Sethupathi Unveils Striking Character Visuals from 2M Cinemas-D Pictures' Lakshmikanthan Kolai Vazhakku directed by Dayazh Padmanabhan

 *Makkal Selvan Vijay Sethupathi Unveils Striking Character Visuals from 2M Cinemas-D Pictures' Lakshmikanthan Kolai Vazhakku directed by Dayazh Padmanabhan*


Makkal Selvan Vijay Sethupathi Unveils Striking Character Visuals from Dayazh Padmanabhan’s Lakshmikanthan Kolai Vazhakku Lakshmikanthan Kolai Vazhakku has kept radars ringing with high-intensity anticipation since its beginning. Significantly, the hard-hitting title and swirling curiosities kept the film under spotlights. With the shooting wrapped up, and postproduction nearing completion,  the makers deliver a powerful reveal. Acclaimed actor Vijay Sethupathi has unveiled the film’s character introduction visual, granting a riveting first glimpse into its intense realm.


The 1 minute 27 seconds visual conjures powerful, evocative imagery of the film’s core characters framed behind prison bars, offering a compelling portal into the narrative’s layered intensity. The reveal commands immediate attention with its raw timbre and arresting aesthetics.


The film boasts a promising ensemble cast, including ‘Jiivi’ fame Vetri as Arivumathi, Rangaraj Pandey as Sivanandham, Brigida as Mallika, Saravanan as Sargunam, and Maaran as Murthi, alongside a roster of notable performers who infuse profound depth into the storyline. Elevating these visuals to sublime heights is the masterful musical score by Darbuka Siva.


Lakshmikanthan Kolai Vazhakku is produced by K.V. Shabarreesh under the banner 2M Cinemas,  and is co-produced by Dayazh Padmanabhan for D Pictures, who has handled story, and direction as well. The ensemble star-cast includes Vetri, Rangaraj Pandey, Brigida Saga, Maaran, Saravanan, Lizzie Anthony, Lokah Kannan, Narmadha, Aruvi Madhan, Kanya Bharathy, Kavitha Bharathy, Subramanyam Shiva and others. 


Shot extensively in and around Chennai, the film has transitioned into post-production and is close on the heels of completion. Positioned as an intense crime drama, Lakshmikanthan Kolai Vazhakku promises a gripping, thought-provoking cinematic journey, propelled by powerhouse performances and a riveting narrative. The official announcement pertaining to the film’s teaser, trailer, audio, and worldwide theatrical release dates will be made soon.


*Technical Team*



Banner: 2M Cinemas & D Pictures 

Story & Direction: Dayazh Padmanabhan


Screenplay & Dialogues: Kavitha Bharathi & Dayazh Padmanabhan


Cinematography: M.V. Paneerselvam


Editing: V. Boopathi


Music & Background Score: Darbuka Siva

Lyrics: Bharathiyar, Bharathidasan, Dayazh Padmanabhan


Production Design: Anbu


Makeup: Kuppusamy


Costume Design: Ramesh


Production Executives: Mariyappan, Kutty Krishnan


Public Relations: Rekha