Featured post

கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!*

 *கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்ப...

Tuesday, 1 September 2026

ராஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே – அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இணையும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம்

*ராஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே – அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இணையும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!*

*இந்தியாவின் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!*

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.


அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அதன்படி, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.


ரிலீஸ் தேதிக்கான போஸ்டரில், கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா காட்சியளிக்கிறார். அவரது முகத்தில் போர்க்காயங்களும், பின்னணியில் ஏராளமான மக்கள் கூட்டமும், தீப்பிழம்புகளும் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய உடைகள், ஆயுதங்கள், தீக்காட்சிகள் மற்றும் ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான முகபாவனை ஆகியவை போஸ்டருக்கு வலிமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான தோற்றத்தை அளிக்கின்றன.


மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மைசா’, நவீன இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு புதிய அளவுகோலை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளுடன், பார்வையாளர்களுக்கு பரபரப்பும், அட்ரினலின் நிறைந்த அனுபவத்தையும் வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது.


பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்களின் எல்லைகளை மட்டுமின்றி, இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான தரத்தையே புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘மைசா’ உருவாகி வருகிறது.


படப்பிடிப்பில் மிகவும் சவாலான அதிரடி காட்சியில் நடித்தபோது ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து வரும் அவர், விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளார். படப்பிடிப்பில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.


அதே நேரத்தில், படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமான காட்சியமைப்பை உருவாக்கும் வகையில் அதிநவீன VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனுடன், படத்தின் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவை ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா மேற்கொள்ள, இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் நிபுணர் ஆண்டி லாங் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், கேச்சா காம்பாக்டீ ஸ்டண்ட் பணிகளை கவனித்துள்ளார்.


‘மைசா’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.


நடிகர்கள்: ராஷ்மிகா மந்தனா, ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், தாரக் பொன்னப்பா, நிதி சிங் மற்றும் பலர்.


இயக்கம்: ரவீந்திர புல்லே

தயாரிப்பு நிறுவனம்: அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்

தயாரிப்பாளர்கள்: அஜய் சாய்புரெட்டி, அனில் சய்யாபுரெட்டி, வீரசாய் கோபா

இணை தயாரிப்பாளர்: ஸ்ரீகாந்த் ரெட்டி சாத்தி

இசை: ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா

ஸ்டண்ட்: கேச்சா காம்பாக்டீ

புரொடக்‌ஷன் டிசைனர்: ஜி.எம். சேகர்

ஆடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்

VFX: நாகு தலாரி & அசோக் மொச்சர்லா

பப்ளிசிட்டி டிசைன்: ஏஸ்தெடிக் குஞ்ஜம்மா

மார்க்கெட்டிங்: ஹாஸ்டேக் மீடியா

மக்கள் தொடர்பு: சதீஷ் குமார், S2 மீடியா


‘மைசா’ – நவம்பர் 27, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!


English Press Release 


Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films’ Pan India Film Mysaa Worldwide Theatrical Release On November 27

 

National Crush Rashmika Mandanna is pushing her physical limits for Mysaa, an ambitious Pan-India action drama that is shaping up to be one of the most challenging projects of her career. The actress, who plays a Gond tribal woman in the film, is leaving no stone unturned to bring authenticity and intensity to the character. Directed by debutant Rawindra Pulle and produced by Unformula Films, Mysaa has already generated curiosity with its striking first glimpse.

 

The makers of Mysaa have officially launched the striking release date poster, locking November 27, 2026, for its grand worldwide theatrical arrival. Rashmika is seen standing with a large spear, her face marked by battle wounds, while a huge gathering and blazing surroundings create a charged atmosphere behind her. The combination of traditional clothing, weapons, fire, and raw expressions gives the poster a strong period-action flavour.

 

Mounted on a colossal scale, Mysaa pushes the envelope of contemporary cinema, setting unprecedented benchmarks for high octane stunt choreography. Designed as a fierce, adrenaline pumping experience, the film’s vision redefines action standards not just for female led cinema, but for the Indian action genre as a whole.

 

Rashmika Mandanna, who recently sustained an injury while performing a demanding high-octane sequence on set, has shown tremendous dedication and grit. Following her recovery, she is set to rejoin the sets very soon to complete the final leg of principal photography, with just 12 days of shoot remaining.

 

Simultaneously, post-production work is advancing at a brisk pace. Advanced VFX work is in full swing to deliver an extraordinary visual spectacle, complemented by a powerful, pulse pounding original score.

 

Eshwari Rao, Guru Somasundaram, and Rao Ramesh are part of the prominent supporting cast. The technical team features Shreyaas P Krishna as the cinematographer and Jakes Bejoy as the music composer. International stunt specialist Andy Long is choreographing the action, adding further scale to the film’s combat portions.

 

Mysaa will arrive in cinemas across the globe, releasing simultaneously in five languages: Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam.

 

Cast: Rashmika Mandanna, Eshwari Rao, Rahul Ravindran, Samuthirakani, Rao Ramesh, Tarak Ponnappa, Nidhi Singh and others  Marketing: Haashtagter, Director: Rawindra Pulle

Banner: Unformula Films

Producers: Ajay Saipureddy, Anil Sayyapureddy, Veerasai Gopa

Co-Producer: Srikanth Reddy Sathi

Music: Jakes Bejoy

DOP: Shreyaas P Krishna

Stunts: Kecha Khamphakdee 

Production Designer : GM Shekar

Costumes: Ayesha Mariam

VFX: Nagu Talari & Ashok Mocharla

Publicity Design - Aesthetic Kunjamma

PRO: Sathish Kumar, S2 Media 

Marketing: Haashtag Media

Monday, 31 August 2026

சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது..,

 சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது.., 


“இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என படக்குழுவினரின் நேர்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரிகிறது.














குறிப்பாக, தமிழ் சினிமாவில் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை இவ்வளவு தரமாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஜி.வி. பிரகாஷ் எப்போதும் தனது பணியில் அபாரமான ஆற்றலுடன் செயல்படுபவர். எத்தனை படங்களில் நடித்தாலும், எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் அவரது உழைப்பும் வேகமும் குறைவதில்லை. அவர் வாங்காத தேசிய விருது இல்லை ஆனாலும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.  அதேபோல், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் விஷனும் மிகப்பெரியது. ஒரு தயாரிப்பாளராக அவர் இந்தப் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும், பிரமாண்டமாக படத்தை உருவாக்கி விளம்பரப்படுத்தும் முயற்சியும் பாராட்டுக்குரியது. நல்ல இயக்குநர்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் தயாரிப்பாளராக அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன்.


‘இம்மார்டல்’ ஒரு அழகான ரொமான்டிக் கதையுடன், பிரமிப்பூட்டும் விஷுவல்ஸ் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட படமாக உருவாகியுள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், ஒவ்வொரு ஃப்ரேமின் பின்னாலும் படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பை ரசிப்பார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்,” என்றார்.


நடன இயக்குநர் சபரீஷ் பேசியதாவது.., 


“இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். குறிப்பாக, இது எனது முதல் படத்தைப் போன்ற ஒரு உணர்வை எனக்குக் கொடுக்கிறது. அதே நேரத்தில், இது எங்களின் இரண்டாவது திரைப்படமாகும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அருண் அண்ணா, இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி,” என்றார்.


எடிட்டர் ராஜேஷ் பேசியதாவது.., 


“இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனக்கு முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்திய தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. இந்தப் படத்தின் பணிகளில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.


மேலும், எனது குரு மற்றும் அவருடன் பணியாற்றிய அசோசியேட் நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும் எனது பயணத்தில் மிகவும் முக்கியமானது. ‘இம்மார்டல்’ திரைப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது அனைவரும் இணைந்து உழைத்த படம் என்பதால், உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும்.


நடிகர்  டி.எம். கார்த்தி பேசியதாவது..,


“சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் இந்தக் கதையை என்னிடம் கூறினார். அப்போது பேசிய கதாபாத்திரத்தை தற்போது இன்னும் விரிவுபடுத்தி முழு நீள கேரக்டராக உருவாக்கியிருந்ததால், இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.


பல வருடங்களுக்கு முன்பு ஒரு இசைப் போட்டியில் ஜி.வி. பிரகாஷ் எனக்கு பரிசு வழங்கியது இன்னும் நினைவில் உள்ளது. இப்போது அவருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.


‘இம்மார்டல்’ மிகவும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. இதில் வழக்கமான மாஸ் என்ட்ரி இருக்காது, ஆனால் மாஸ் ரசிகர்கள் உட்பட அனைவரும் ரசிக்கும் வகையில் படம் இருக்கும். தயாரிப்பாளர், இயக்குநர், ஜி.வி. பிரகாஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.


நடிகர் குமார் நடராஜன் பேசியதாவது.., 


“பெரும்பாலும் சின்ன சின்ன கேரக்டர்களில்தான் நடித்து வருகிறேன். ஆனால் இந்தப் படத்தில் எனக்காகவே மனதில் வைத்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கேரக்டரை நான் மிகவும் ரசித்து நடித்திருக்கிறேன்.


இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவரின் ஒத்துழைப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தமிழ் தெரியாத நிலையிலும் நாயகி தமிழ் வசனங்களை மிகவும் அழகாகப் பேசி நடித்தது என்னை வெகுவாக கவர்ந்தது.


இது மொபைல், டிவி அல்லது ஓடிடியில் சாதாரணமாக பார்க்க வேண்டிய படம் அல்ல. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.


ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது.., 


‘“ஜி.வி. பிரகாஷ் சார் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை ஆதரிப்பவர். இந்தக் கதையைக் கேட்டதுமே இது ஒரு எக்ஸ்பெரிமென்டல் முயற்சி என்பதால் கண்டிப்பாக நீ செய்ய வேண்டும் என்று கூறினார்.


படப்பிடிப்பின்போது பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக சில இடங்களில் படப்பிடிப்பு மிகவும் சவாலாக இருந்தது. இருந்தபோதும், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் எந்தவிதமான தயாரிப்பு ரீதியான தடையும் ஏற்படுத்தாமல், எவ்வளவு நாட்கள் எடுத்தாலும் படத்தை தரமாக உருவாக்க வேண்டும் என்று முழு ஆதரவும் சுதந்திரமும் அளித்தார். அதுவே இந்தப் படம் இவ்வளவு தரமாக உருவாக முக்கிய காரணம்.


படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ‘இம்மார்டல்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.



ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், “டிராகன்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.


சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.


சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.


பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். 


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம் – மாரியப்பன் சின்னா

தயாரிப்பு – அருண்குமார் தனசேகரன்

தயாரிப்பு நிறுவனம் – AK Film Factory

ஒளிப்பதிவு – அருண் ராதாகிருஷ்ணன்

இசை – சாம் சி.எஸ்.

எடிட்டிங் – ஷான் லோகேஷ்

கலை இயக்கம் – சிவசங்கர்

ஸ்டண்ட் – சக்தி சரவணன்

விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா

நடனம் – சபரீஷ்

ஆடை வடிவமைப்பு – வினோத் சுந்தர், தமிழ்செல்வன் U

DI – Get In Dream Studio

கலரிஸ்ட் – ஸ்ரீராம்

VFX – R. மஹி

ஸ்டில்ஸ் – இ. ராஜேந்திரன்

காஸ்ட்யூமர் – ரவி தேவராஜ்

ஒப்பனை – P. மாரியப்பன்

மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு;

 *இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!*




போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படம் ‘நல்லபடம்’. Harish cinemas சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் எழுதி இயக்கியுள்ளார்.


இப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*இலங்கையில் நடைபெற்ற பிரமாண்ட இசை வெளியீடு*


‘நல்லபடம்’ திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல் வரிகளை இலங்கையைச் சேர்ந்த பிரபல கவிஞரும் தமிழ்சினிமா பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். வேல்முருகன், அருள் பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் உள்ளிட்டோர் பாடல்களுக்கு குரல் வழங்கியுள்ளனர்.


திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இலங்கையின் கொழும்பில் உள்ள Sooriyan FM மேடையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திரைப்படத்தின் இசை இருவட்டு மற்றும் ட்ரைலர், இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களால் அவரது அமைச்சு அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.


இந்நிகழ்வில் திரைப்படத்தின் பாடல்களை ரசித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பாடல்களையும் படக்குழுவினரின் முயற்சிகளையும் பாராட்டியதுடன், ‘நல்லபடம்’ திரைப்படத்தின் வெற்றிக்கும் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


இந்தச் சிறப்பு நிகழ்வில் பிரபல கவிஞரும், ‘அய்யோ சாமி’ பாடல் புகழ் தமிழ்சினிமா பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், திரைப்படத்தின் கதாநாயகன் டாக்டர் ஏ. ஹரிஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இசை வெளியீட்டுக்குப் பின்னர் ‘நல்லபடம்’ திரைப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், அந்நாட்டின் முன்னணி வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரைலர், இசை வெளியீடு மற்றும் படக்குழுவினரின் நேர்காணல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.


சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையவழித் தளங்கள் மூலமாகவும் திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் இலங்கை மட்டுமின்றி சர்வதேச தமிழ் ரசிகர்களையும் சென்றடைந்து வருகின்றன.


போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டுள்ள ‘நல்லபடம்’, இலங்கையிலும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், அங்கு கிடைத்து வரும் வரவேற்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.


படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரை திட்டமிட்டபடி நடைபெற்ற ‘நல்லபடம்’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. படக்குழுவினரின் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் படப்பிடிப்பு பணிகள் சிறப்பாக நிறைவு பெற்றதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.


இலங்கையில் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றுள்ள நிலையில், ‘நல்லபடம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.


திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா

 ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா 














AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.


படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின.


தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது.., 


இந்தக் கதையை இயக்குநர் மாரியப்பன் சின்னா முதன்முதலில் என்னிடம் கூறியபோது, ‘இது ஹாலிவுட் படம் போன்று இருக்கிறது. இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்?’ என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அவர் கூறிய விஷுவல் கிரியேஷன்கள் மிகப் பெரிய சிஜி பணிகளைக் கொண்டதாக இருந்தன. ஆனால், இயக்குநர் சுமார் ஏழு மாதங்கள் வெளிநாட்டில் உள்ள ஸ்டூடியோவில் பணியாற்றி, படத்தின் விஷுவல் மாடலைத் தயாரித்து என்னிடம் கொண்டு வந்தார். ‘சார், நீங்கள் இதுவரை பார்த்த சாதாரண தமிழ் படம் போல் இது இருக்காது. ஹாலிவுட் தரத்தில் இதை உருவாக்க முடியும்’ என்ற அவரது நம்பிக்கையே என்னையும் இந்தப் படத்தை தயாரிக்கத் தூண்டியது.


படப்பிடிப்பிற்கு முன்பாகவே நீண்ட காலம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டோம். அந்தத் தயாரிப்புப் பணிகள் மூலம் படத்தின் காட்சிகள் மற்றும் சிஜி தொடர்பான விஷயங்களை மிகவும் கவனமாகத் திட்டமிட்டோம். அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் மிகுந்த உற்சாகத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் படப்பிடிப்பில் பங்கேற்று எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கினார். நான் தனிப்பட்ட முறையில் ஜி.வி. பிரகாஷ் சாரின் ரசிகன். அவர் இந்தப் படத்தில் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதாநாயகி தேர்விலும் இயக்குநர் மிகவும் கவனமாக செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மூலமாக கயாது லோஹரை பார்த்து, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை அணுகினோம். படத்தில் அவர் மிகவும் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகள் சவாலான சூழ்நிலைகளில் படமாக்கப்பட்டன. குறிப்பாக, பல்வேறு ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி காட்சிகளை உருவாக்குவதில் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் முழுமையாக உழைத்துள்ளனர். ஒரு தயாரிப்பாளராக கலைஞர்கள் பாதுகாப்பாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் பணியாற்ற வேண்டும் என்பதில் நான் மிகுந்த கவனம் செலுத்தினேன்.


‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தியுள்ளோம். குறிப்பாக, விஷுவல்ஸ் மற்றும் சிஜி பணிகளுக்காக படக்குழு மிக நீண்ட காலமாக உழைத்துள்ளது. இந்தப் படம் உருவாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு உள்ளது. இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்திற்காக தனது முழு முயற்சியையும் அர்ப்பணித்துள்ளார். அவரது கனவு மற்றும் உழைப்பின் விளைவாக இந்தப் படம் இன்று மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, சவுண்ட், எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுடன் இருந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இம்மார்டல்’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் விஷுவல் அனுபவத்திலும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். படம் வெளியான பிறகு உங்கள் அனைவரின் ஆதரவும், கருத்துகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.


நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது.., 


“இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி.


கயாது லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.


ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.


‘இம்மார்டல்’ படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கில் சென்று பார்க்கலாம். டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நான் நடித்த பல படங்களில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், மாரியப்பன் சின்னா மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.


இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது.., 


“இந்தக் கதையை உருவாக்கியதில் இருந்து படமாக்குவது வரை ஏராளமான சவால்களை சந்தித்தோம். இது வழக்கமான திரைப்படம் அல்ல என்பதால், ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு முதலில் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் கதையைக் கேட்டதும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் இணைந்தார். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக உருவாக்குவதற்காக அதிகம் யோசித்து உழைத்தார். எடிட்டர் சான் லோகேஷ், பின்னர் இணைந்த ராஜேஷ் ஆகியோரும் படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.


கயாது லோஹர் இந்தக் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய முயற்சியை எடுத்துள்ளார். தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாத நிலையிலும், ஒவ்வொரு வசனத்தையும் புரிந்துகொண்டு சரியாகப் பேசுவதற்காக கடுமையாக உழைத்தார். சவாலான படப்பிடிப்பு சூழல்களிலும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., சவுண்ட் டிசைன் குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.


‘இம்மார்டல்’ ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் படம். இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத வகையிலான விஷுவல் மற்றும் சவுண்ட் அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொருவரின் உழைப்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்,” அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.


இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது.., 


இம்மார்டல் எனக்கு மிகவும் முக்கியமான படம், சில  படங்கள் செய்யும்போது இது தனித்துவமாக இருக்குமென நமக்கு தெரியும் அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்த படம். 


“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் மிகவும் எனர்ஜியான மற்றும் பாசிட்டிவான மனிதர். ஒரு படத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வமும், படக்குழுவினர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். அவர் செய்யும் உதவிகளைக்கூட வெளியே சொல்லிக்கொள்ள விரும்பாத நல்ல மனிதர். ஜி.வி. பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் இந்தப் படத்தில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் அவரது நடிப்புக்கு அதிக முக்கியத்துவமும், ஸ்கோப்பும் உள்ளது. அவர் அதை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.


இயக்குநர் மாரியப்பன் சின்னாவும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். ஒவ்வொரு இயக்குநருடனும் பணியாற்றும் அனுபவம் வித்தியாசமானது. அந்த வகையில், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஒரே நோக்கத்துடன் இணைந்து உழைத்திருப்பது திரையில் நிச்சயம் தெரியும். என்னுடன் இந்தப்படத்தில் உழைத்த அனைத்து குழுவினருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Anbe Diana now streaming on Sony LIV

 *Anbe Diana now streaming on Sony LIV* 





The much-awaited movie Anbe Diana is now streaming in Telugu, Tamil, Malayalam, Kannada, and Hindi on Sony LIV, following its theatrical release. Blending romance, humour, cultural and family dynamics, the film will now reach a wider audience, allowing viewers to experience this story from the comfort of their homes.


Set against the backdrop of Perambur, Chennai, Anbe Diana follows a conservative young man whose world takes an unexpected turn when he falls in love with a free-spirited Anglo-Indian girl. As two contrasting worlds come together, what follows is a journey shaped by family expectations and the complexities of finding your own voice. 


Link: https://www.instagram.com/reel/DckWPgwTr8t/?igsi=MWk5NTQwYWV4ZXo3aA==


_Catch Anbe Diana, now streaming exclusively on Sony LIV_

மனைவி கொலை கணவன் அதிர்ச்சி! கொலையாளி யார்?

 மனைவி கொலை கணவன் அதிர்ச்சி!

கொலையாளி யார்?





அந்த கிராமத்தில் கதையின் நாயகனான கருப்பட்டி தன் தாயுடன் வசித்து வருகிறான்.

அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான். மணமுடித்த சில நாட்களில் பவானி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். அவளை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் கருப்பட்டி ஈடுபடுகிறான். அப்பொழுதுதான் அவனுக்கு பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான். அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களில் அவனுக்கு மனைவியின் கொலையாளியை தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறான் இப்படி ஒரு கதைக்களத்தில் உருவாகி வரும் படம்தான் மோனிதா மூவிஸ் தயாரிப்பில் விஜயராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் " கருப்பட்டி".


விஜயராஜ், சமந்து, ஹரிணி, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கலைவாணி ,ரஷீத், மைக்கேல் ராஜ், செண்பகவள்ளி ஆகியோர் நடிக்கின்றனர்.


சேலம் மேட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்த்துள்ள இதன் ஒளிப்பதிவை செந்தில் மாறன்- கவிநாதன் இருவரும் இணைந்து கவனிக்கின்றனர்.


படத்தொகுப்பையும், இசையையும் டி. எஸ். திவாகர் கவனிக்க, இஷாஸ் அகமது பாடல்களை எழுதி உள்ளார்.  ராம் முருகேஷ் நடன பயிற்சியையும், ரமேஷ் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர். 


கதையின் நாயகனாக நடித்து, தமது மோனிதா மூவிஸ் சார்பில் "கருப்பட்டி" படத்தை பொழிச்சை ராஜ்குமார் தயாரித்து வருகிறார்.


"காதல்பதிவு", "நந்திவரம்" " சினிமா கனவுகள்" " கொலை தூரம்" படங்களை இயக்கிய பிரபு இராமானுஜம் " கருப்பட்டி" படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தமது ஐந்தாவது படமாக இதை இயக்கி உள்ளார்.

விரைவில் திரைக்கு வர உள்ளது" கருப்பட்டி"


Sunday, 30 August 2026

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

 *சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு*








சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்ததர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டு சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இயக்குநர்கள் பசங்க பாண்டியராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ராம், உறியடி விஜயகுமார், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரும் பங்கேற்று சக்திவேலனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


மேலும் நடிகைகள் சாக்க்ஷி அகர்வால், அதுல்யா ரவி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல் ராஜா, ராஜ சேகர்பாண்டியன், கண்ணன் ரவி,  அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தனஜெயன், அருண் விஷ்வா, அருளானந்து, அருண்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பிறந்தநாள் நாயகருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


திரையுலகைச் சேர்ந்த பல்வேறு முன்னணி பிரபலங்கள் ஒரே இடத்தில் திரண்டு வாழ்த்தியதால், சக்திவேலனின் பிறந்தநாள் விழா சிறப்பான கொண்டாட்டமாக அமைந்தது.


ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

 *ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!*




*40 நாட்களில் சாதித்த ‘தகப்பன்’ படக்குழு படப்பிடிப்பு முழுமையாக நிறைவு !*


நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்..,


படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததாகக் கூறி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.


‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


சிறப்பம்சமாக, படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு  கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மேலூர்  மேலவளவு கருப்பு  கோயிலில் கிடா வெட்டி,  பொதுமக்களுக்கு விருந்து வழங்கி,  அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய படக்குழுவின் இந்த செயல், அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான மற்றும் முக்கியமான படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.


சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.


தற்போது இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜீவாவின் வித்தியாசமான கிராமத்து பின்னணி கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 எம். எஸ். பாஸ்கர் நடிப்பில்  ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!







‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும்  புதிய க்ரைம் திரில்லர்!


எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும்  மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.


எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவு சாவித் துவாரத்தின் வழியே பயத்தில் விரியும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் கவனம் ஈர்க்கிறது. மேலும், கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் அதிகரித்துள்ளது.


இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா, தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.