Friday, 22 March 2019

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி  வேட்பாளர் டாக்டர் சாம் பால் (பாமக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்) வெள்ளிக்கிழமை அன்று(மார்ச் 22)  செனாய் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி எட்டாவது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பி. என்.ஸ்ரீதர் அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மாவட்ட தலைவர்கள், பாலகங்கா, வெங்கடேஷ் , சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா,பிஜேபி நிர்வாகி தனஞ்செயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கூட்டணிக் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தமது தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும்  பாடுபடுவேன் என்று வேட்பாளர் சாம்பால் தெரிவித்திருக்கிறார். அரசு அலுவலகங்கள் மேலும் செம்மையாக செயல்படவும் மக்களுக்கு நண்பனாக இருந்து செயல்படவும் தாம் முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் வேட்பாளர் உறுதியளித்துள்ளார்.


No comments:

Post a Comment