Saturday 28 December 2019

மிஸ் தமிழ்நாடு 2020 பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த

மிஸ் தமிழ்நாடு 2020 பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த தீப்தி*

மிஸ் தமிழ்நாடு 2020 அழகிப்போட்டியின் பிரம்மாண்டமான இறுதிச் சுற்று சென்னையில் நடைபெற்றது.

ராஸ் மடாஸ் நடத்தும் தொடர்ச்சியான 13 ஆம் ஆண்டு நிகழ்வான இந்த மிஸ் தமிழ்நாடு 2020 போட்டிக்கென ஏறத்தாழ 100 மாடலிங் ஆர்வலர்களில் பல்வேறு ஆடிஷன்கள் மூலம் இறுதிச்சுற்றுக்கு  மொத்தம் 16 அழகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த், உபாசனா ஆர்.சி, ஹரினி, சைதன்யா ராவ், ஜெயஸ்ரீ ஈஸ்வர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






































நடைபெற்ற இறுதிப்போட்டியின் 3 சுற்றுகளின் அடிப்படையில் *தீப்தி மிஸ் தமிழ்நாடு 2020* ஆக முடிசூட்டப்பட்டார். *காம்னா, லாவன்யா* ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர். மேலும், இந்த போட்டியில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற அழகிகள் ஜனவரி 21ஆம் தேதி கேரளாவில் நடைபெறவுள்ள மிஸ் சௌத் இந்தியா 2020 அழகிப்போட்டியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய ராஸ் மடாஸ் நிறுவனர் ஜோ மைக்கேல், இந்த அழகிப்போட்டியில்  தமிழ்நாடு முழுவதும் சென்னை, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடல் அழகிகளும், சென்னையில் தங்கியிருக்கும் சில வட இந்திய அழகிகளும் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார். மேலும், அழகை மட்டுமே பார்க்காமல், நேர்த்தியான மற்றும் திறமையான அழகிக்கே  மகுடம் சூட்டப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இது போன்ற போட்டிகள் மாடல்களின் தரத்தை அதிகரிக்கின்றன மற்றும் முந்தைய போட்டிகளின் இறுதிப் போட்டியாளர்களைப் போல இவர்களும் எதிர்காலத்தில் நல்ல நிலைக்குச் செல்வார்கள் என்றார்.

முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை யாஷிகா ஆனந்த், மிஸ் தமிழ்நாடு 2020 அழகிப்போட்டியின் நடுவர்களில் தானும் ஒருவராக இருப்பதை மிகுந்த கௌரவமாகக் கருதுவதாகவும், ஒரு தகுதியான, திறமைமிக்க நபருக்கே அழகிப் பட்டம் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய பெகியாசிஸ் நிர்வாக இயக்குநர் ஜெபிதா, இந்த தமிழ்நாடு அழகிப் போட்டியை நடத்துவதில் மிகுந்த பெருமை கொள்வதாகவும், இந்த அழகிப் போட்டியில் தகுதி வாய்ந்த யார் வெற்றி பெற்றாலும் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment