Wednesday, 29 April 2020

வேலம்மாள் வித்யாலயா மற்றும் சூரியன் எஃப்.எம்

வேலம்மாள் வித்யாலயா மற்றும் சூரியன் எஃப்.எம். இணைந்து வழங்கும் நேரலை இன்னிசை நிகழ்ச்சி

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தலை நாம் அனைவரும்  எதிர்கொண்டு வருகிறோம். நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சென்னை வேலம்மாள் வித்யாலயா, சூரியன் எஃப்.எம் உடன் இணைந்து ஏப்ரல் 19 முதல்
மே 2 வரை நேரலை இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இரவு 7 மணிமுதல் 9 மணிவரை இந்த நேரலை ஒலிபரப்பப்படுகிறது.

நாட்டில் நிலவும் இந்த நோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குச் செவிசாய்க்கவும், கொரோனாவின் பரவலைத் தடுக்கவும், பிரபல பின்னணிப் பாடகர்கள் கார்த்திக், மஹதி, பம்பாய் ஜெயஸ்ரீ போன்ற இசைக்கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நவீன டிஜிட்டல் தளத்தில் மே 2 வரை இன்னும் பல நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இசை ஆர்வலர்களை இதில் ஈடுபடுத்தும் ஒரு வாய்ப்பாக வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் கருதுகிறது,

உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நோய் தொற்று இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க எளிதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதைக் கண்டறிவதற்காக இந்தப் பிரச்சாரத்தை வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் தொடங்கி இருக்கிறது.

No comments:

Post a Comment