Friday, 22 May 2020

திரையரங்க உரிமையாளர்

திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர் திரு ஆர் பி சௌத்ரி, தயாரிப்பாளர் திரு. பிரமிட் நடராஜன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள்...

வணக்கம். எடுத்திருக்கும் நல்ல முயற்சிக்கு வரவேற்புகள். சதவீத அடிப்படையில் வேலை செய்வதற்கு இணைந்த நடிகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 200 ஷேர்களை யார் யாருக்கோ தருவதற்குப் பதில் தமிழ் சினிமாவின் அனைத்து சங்கங்களுக்கும் அந்த ஷேரைப் பகிர்ந்தளிக்கலாம். குறைந்த பங்களிப்பு என்பது அந்தந்த சங்கங்களின் வளர்ச்சி நிதிக்காகப் பயன்படும்.

அதேசமயம் படம் உருவாவதில் அனைவரின் பங்களிப்பும் தங்கள் படம் என்ற எண்ணத்தில் பணிபுரிவார்கள்.

தங்கள் முயற்சியோடு என் கருத்தையும் பரிசீலித்தால் அனைத்து சங்கங்களும் பயனடைவார்கள்.  பரிசீலிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

No comments:

Post a Comment