Friday 18 September 2020

ராணி’ ஆசிரியர் ராமகிருஷ்ணனின்

‘ராணி’ ஆசிரியர் ராமகிருஷ்ணனின் மறைவு பத்திரிகை உலகிற்கு பேரிழப்பு - நடிகர் சிவகுமார் இரங்கல்

‘ராணி’ பத்திரிகையின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் இன்று விடியற்காலை கொரானாவால்  அகால மரணமடைந்தார். அவரது மறைவிற்கு நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது...




ராமகிருஷ்ணன் நீண்ட காலமாக  ‘ராணி’ பத்திரிகையில் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். மிகச்சிறந்த எழுத்தாளர். பெருந்தலைவர் காமராஜர், ஈ.வெ.ரா.பெரியார் மற்றும் கவியரசு கண்ணதாசன் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாற்றை சுமார் 50 முதல் 60 வாரங்களுக்கு தொடராக எழுதியவர்.

அதேபோல், என்னுடைய வாழ்க்கை வரலாற்றையும் 56 வாரங்களுக்கு தொடராக எழுதியவர். எழுத்துக்கு தன்னை அர்ப்பணித்தவர்.

ஆனால், இந்த கொரோனா காலத்தில் 88 வயதாகும் தன்னுடைய தாய் தன்னைக் காண விரும்பியதற்க்காக ஊருக்கு நேரில் சென்றார். சுமார் ஒரு மாத காலம் அம்மாவுடனேயே தங்கி இருந்திருக்கிறார். அங்கு இருக்கும்பொழுதே இவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. பரிசோதனையின் கொரோனா உறுதி செய்யப்பட்டுவிட்டால் நம்மைத் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் பரிசோதனை செய்துக் கொள்ளாமலே இருந்துள்ளார். பிறகு மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று இரவு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் விடியற்காலையில் அகால மரணமடைந்தார்.

ராமு சிறிய வயது மற்றும் அற்புதமான எழுத்தாளர். அவரின் மறைவு பத்திரிகை உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திக்கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் சிவகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment