Thursday, 25 February 2021

குத்துச்சண்டையில் களம் காணும் வேலம்மாள் பள்ளி

 குத்துச்சண்டையில் களம் காணும் வேலம்மாள் பள்ளி


 சமீபத்தில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தெற்கு மண்டல விளையாட்டு உலகம் என்னும் அமைப்பில் நடைபெற்றமுதல் மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2020-இல் கலந்து கொண்ட முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் அமர் ஷாலின் .ஏ,
   58 கிலோ இலகு எடைப் பிரிவின் கீழ் கலந்து கொண்டு சிறப்பாக தனது திறனை வெளிப்படுத்தினார்.
 
 
தேசிய அளவிற்கான தகுதித் தேர்வாக நடைபெற்ற இப்போட்டியில்
இறுதிச்சுற்றில் தனது எதிராளியை வீழ்த்தி குத்துச்சண்டைக்கான தங்கப் பதக்கத்தை அமர் வென்றார். 

 இந்தப் போட்டியை சர்வதேச விளையாட்டு கவுன்சிலுடன் இணைந்து இந்திய விளையாட்டு வீரர்கள் (ஒய்.எஸ்.ஐ) ஏற்பாடு செய்திருந்தனர்.
 இந்த மாநில அளவிலான போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 75 குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர். 

தனது அடையாளத்தை சிறப்பாக  வெளிப்படுத்தியுள்ள அமர் இப்போது தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். 

அவரது குறிப்பிடத்தக்க இந்த சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டுகிறது மற்றும் வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment