Wednesday, 19 May 2021

வேலம்மாள் நெக்ஸஸ் இணையம் வழி வழங்கும் நேரடி இன்னிசை

வேலம்மாள் நெக்ஸஸ் இணையம் வழி வழங்கும் நேரடி இன்னிசை நிகழ்ச்சிகள்*

மே 17ஆம் தேதி முதல் மே 21ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தினமும் மாலை 6 மணிக்கு இசை விருந்து. இதில் திட்டமிட்டபடி மே 17ஆம் தேதி, பிரபல பின்னணி பாடகி திருமதி நித்யஸ்ரீ அவர்கள் ஜூக் பாக்ஸ் - நேரடி இன்னிசை இரவை வேலம்மாள் நெக்ஸஸில் தொகுத்து வழங்கினார்.


திருமதி நித்யஸ்ரீ இசை நிகழ்ச்சியின் போது, விருப்பமான பாடல்களைக் கேட்பவர்களிடம் தனது மயக்கும் குரலால் பாடி பார்வையாளர்களை வசீகரித்தார், மேலும் அவர்களுடன் கனிவாக உரையாடினார்.

வேலம்மாள் நெக்ஸஸின் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியைப் பல ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

தொற்றுநோய் பரவலான இக்காலகட்டத்தில் மக்களின் மனநிலையை நிலைநிறுத்த இந்த வாய்ப்பை வேலம்மாள் நெக்ஸஸ் இசைப் பிரியர்களுக்கு வழங்குகிறது.

பிரபல பின்னணி பாடகர்களான ஹிருத்திக், பிரணிதி, உத்ரா உன்னிகிருஷ்ணன், சைந்தவி மற்றும் பிரியங்கா ஆகியோரால் இனிவரும் நாள்களில் பற்பல நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.


No comments:

Post a Comment