Friday 25 June 2021

2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு

2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேலம்மாள் வலையொளியில் யோகா நேரலை நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டது.

 2021 ஜூன் 21 முதல் வேலம்மாள் நெக்ஸஸ்  யோகா அமர்வுகளை
நேரலையாக நடத்துகிறது.
 'யோகா கற்றுக் கொள்' தொடர் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் சர்வதேச யோகா பயிற்சியாளர் டாக்டர் லட்சுமி ஆண்டியப்பன், எம்.பி.பி.எஸ். எம்ஃபில், பிஎச்.டி (யோகா) அவர்களால் நடத்தப்பட்டது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, யோகாவின் மூலம் கிடைக்கும் மகத்தான நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவும் யோகாவை மாணவர்களின் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகவும்  கொண்டுவருவதையும், சரியான உணவுத் திட்டம் மற்றும் உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதையும் பள்ளி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கடினமான காலங்களில் யோகா பயிற்சியாளர் தனது அபரிமிதமான திறனை வெளிப்படுத்தி பார்வையாளர்க்கு
 வழங்கிய சுவாசப் பயிற்சிகள், நினைவாற்றல், செறிவு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சூர்ய நமஸ்காரம், முதுகுவலி நிவாரணம், பிராணயாமா முதலியவை அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்தது.

இந்த அமர்வுகள் "நல்வாழ்வுக்கான யோகா" குறித்த சரியான அணுகுமுறையாக அமைந்தது.
 இதனால் பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்ப்பதாக அமைந்தது.

ஒவ்வொரு நாளும் யோகாவை ஆரோக்கியமான அளவீடாகக் கொண்டு வரவிருக்கும் அமர்வுகளுக்கு உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும் வேலம்மாள் உங்களுக்கு துணைபுரியும்.

 மேலும், விவரங்களுக்கு 8056063519 ஐ தொடர்பு கொள்ளவும்.


No comments:

Post a Comment