Monday, 25 April 2022

அன்பார்ந்த பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு

அன்பார்ந்த பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு வணக்கம்.

எனது பிறந்தநாளான இன்று இதுவரை வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், இனிமேல் தெரிவிக்கவிருப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 






2000-ம் ஆண்டு திருநெல்வேலி திரைப்படம் முதல் கடந்த 22 வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கும் என்னை நீங்கள் அனைவரும் தொடர்ந்து ஊக்குவித்து, அன்பு செலுத்தி வருகிறீர்கள். ஒரு மிகப்பெரிய வெற்றியை இதுவரை பெறவில்லை என்றாலும் அதற்கான என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டே இருக்கிறேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் திரு விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியில், சாலை ஒன்றுக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.

உடனடியாக அதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்ற தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் அண்ணன் திரு பூச்சிமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. எனது கோரிக்கையை மாண்புமிகு மக்கள் முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலிப்பார் என்று நம்புகிறேன்.

திரைத்துறையில் என்னுடைய அடுத்த முயற்சியாக திரைப்படம் ஒன்றை விரைவில் இயக்க உள்ளேன். என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்த நீங்கள் இதற்கும் உங்களது முழு ஆதரவை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

No comments:

Post a Comment