Monday 10 October 2022

சென்னையில் பிரதான காட்சிகள், அதிக திரைகள் பெறும் கன்னட ப்ளாக்பஸ்டர் ‘காந்தாரா’

 சென்னையில் பிரதான காட்சிகள், அதிக திரைகள் பெறும் கன்னட ப்ளாக்பஸ்டர் ‘காந்தாரா’


கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று வெளியானது. ஆனால் அன்று ​​​​இரண்டு பெரிய தமிழ் படங்களின் வெளியீடு காரணமாக சென்னையில் குறைந்தபட்ச காட்சிகள் மற்றும் திரைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. . 


கொஞ்சம் கொஞ்சமாக காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அற்புதமான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் வசூல் வேட்டை ஆடி வரும் காந்தாராவுக்கு,  இந்த வார இறுதி முதல் பலப் பிரபலத் திரையரங்குகள் (முக்கிய மல்டிபிளக்ஸ்கள் மற்றும் டிமாண்ட் உள்ள தனித் திரையிரங்குகள்) காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன, அதிகக் கொள்ளளவு கொண்ட பெரிய திரைகளையும் ஒதுக்கியுள்ளன. 


கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. இது உலகளாவிய கருப்பொருளாக இருப்பதால், படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பார்க்க மீண்டும் மீண்டும் திரையரங்குகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். .











காந்தாராவில் பொல்லாதவன் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை) இசை படத்தின் இன்னொரு பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. .


மிக விரைவில், இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது. கேஜிஎஃப் திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஹொம்பாலே பிலிம்ஸின் இரண்டாவது தமிழ் டப்பிங் வெளியீடான காந்தாராவின் தமிழ் வெளியீட்டு தேதி மற்றும் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment