Tuesday, 14 February 2023

கடித எண். 192 / தெ.ந.ச / 2023 நாள்:13.02.2023

 பெறுநர்,

மாண்புமிகு  தமிழக முதலமைச்சர் அவர்கள்,

தலைமை செயலகம்,

சென்னை.


கடித எண். 192 / தெ.ந.ச / 2023  நாள்:13.02.2023


பேரன்பிற்கும், பெரும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 12.02.2023 அன்று செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட நன்றி தீர்மானத்தின் சாராம்சம்,

“19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி நம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் பாடகி வாணி ஜெயராம். 3 தேசிய விருதுகள், நாட்டிலேயே உயரிய விருதான பத்ம பூஷண் விருது என நீங்கா புகழுடன் வாழ்ந்தவர்.  கடந்த வாரம் மறைந்த அவரது உடலுக்கு அரசு சார்பில் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. 

மேலும் அன்றைய தினம் சொந்த வீட்டிலேயே ஒரு துக்கம் இருந்த போதிலும் மறைந்த மூத்த நடிகரும் இயக்குனருமான டிபி.கஜேந்திரன், பாடகி வாணி ஜெயராம் இருவரின் உடல்களுக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதற்கும் இச்சங்கம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது “ 

எங்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நன்றி தீர்மானத்தை தங்களுக்கு சமர்ப்பித்து திரையுலகத்திற்கு தங்களின் சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி,

தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்


(M.நாசர்) 

தலைவர்

No comments:

Post a Comment