Tuesday, 25 February 2025

K.ரங்கராஜ் இயக்கியுள்ள "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

 K.ரங்கராஜ் இயக்கியுள்ள  "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " 

 மார்ச் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 






















ஸ்ரீகாந்த் - புஜிதா பொன்னாடா நடித்த " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் "  மார்ச் 14ஆம் தேதி வெளியாகிறது


முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதை  ஸ்ரீகாந்த் - புஜிதா பொன்னாடா நடித்துள்ள " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " K. ரங்கராஜ் இயக்கியுள்ளார்.


பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கியுள்ள " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " 


ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் MY INDIA மாணிக்கம் தனது முதல் தயாரிப்பாக தயாரிக்கும் படத்திற்கு " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " என்று பெயரிட்டுள்ளனர்.


உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.


இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


வசனம் - PNC கிருஷ்ணா

ஒளிப்பதிவு  - தாமோதரன்.T

இசை - R.K.சுந்தர்

எடிட்டிங்  - கே.கே

பாடல்கள் - காதல் மதி

கலை - விஜய் ஆனந்த்  

நடனம் - சந்துரு

ஸ்டண்ட் - ஆக்ஷன் பிரகாஷ்

ஸ்டில்ஸ் - தேனி சீனு

மக்கள் தொடர்பு - மணவை புவன்

தயாரிப்பு - MY INDIA மாணிக்கம்

கதை, திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் - K.ரங்கராஜ்


படம் பற்றி இயக்குனர் K.ரங்கராஜ் பேசியதாவது...


வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும்  வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாக்கியுள்ளோம்.


இந்த படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சிகாக உண்மையான கிளைடர் பயன்படுத்தி முக்கியமான காட்சிகளை படம்பிடித்துள்ளோம். அந்த காட்சிகள் திரையில் பார்க்க மிகவும் பிரம்மாண்டாமாக இருக்கும்.


அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க கூடிய குடும்ப பாங்கான, இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றது. 


படம் மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது  என்றார் இயக்குனர் K.ரங்கராஜ்.

No comments:

Post a Comment