Tuesday, 6 May 2025

உடனடி நோயறிதல் காரணமாகத் தீர்த்து வைக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின்

 உடனடி நோயறிதல் காரணமாகத் தீர்த்து வைக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் - சென்னை, 26 ஏப்ரல், 2025




ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிறுநீர் கட்டுப்பாடின்மை காரணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து அசௌகரியத்தை அனுபவித்த எட்டு வயது சிறுமிக்கு, ஒரு தனித்துவமான பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Reimplantation Surgery) அறுவைs சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எக்டோபிக் யூரிட்டர் (Ectopic Ureter) எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சையினால் இறுதியாக முழு நிவாரணம் பெற்றுள்ளார். அவர், இன்று குணமடைந்து வருவது விடாமுயற்சி, கருணைகூர் பராமரிப்பு, மற்றும் முழுமையான மருத்துவ நிபுணத்துவத்தின் வல்லமைக்கு சான்றாக நிற்கிறது.


எக்டோபிக் யூரிட்டர் என்பது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பையுடன் சரியாக இணையாமல், சிறுநீர்ப்பைக்கு வெளியே இணைந்திருக்கும் ஒரு பிறவி குறைப்பாடாகும். இது சிறுநீர் வெளியேற்றத்தில் ஒழுங்கற்றத்தனத்தை ஏற்படுத்தி, சிறுநீர் கட்டுப்பாடின்மை போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும், குறிப்பாக பெண்களில்.


குழந்தைப் பருவத்திலிருந்தே, அச்சிறுமி தொடர்ந்து சிறுநீர் கசிவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் இரவும் பகலும் டயப்பர்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிலையிருந்தது. பல ஆண்டுகளாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருடைய பிரச்சனை என்பது மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் வுல்வோவஜினைடிஸ் (Vulvovaginitis) என்று தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஈரப்பதம், கடுமையான தோல் உரிதல் போன்ற  உடல் அசௌகரியத்துடனும், தனிமை, பழிச்சொல் போன்ற மனவலியுடனும் போராடியுள்ளார்.


ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் குழந்தை -சிறுநீரக மருத்துவ நிபுணரும், மூத்த ஆலோசகரும், மருத்துவருமான சங்கீதாவின் பராமரிப்பின் கீழ் வந்தபோது, குழந்தையின் பயணம் நம்பிக்கைக்குரிய திருப்பத்தை எடுத்தது. விரிவான மருத்துவ மதிப்பீட்டின் போது,  சிறுநீர்க்குழாயிலிருந்து தொடர்ச்சியான சிறுநீர் கசிவிற்குக் காரணம், எக்டோபிக் யூரிட்டராக இருக்குமோ என்ற சந்தேகத்தை அடைந்தது மருத்துவ குழு. 

அல்ட்ராசவுண்ட், MR யூரோகிராம் மற்றும் சிஸ்டோஸ்கோபி உள்ளிட்ட மேலதிக மருத்துவ ஆய்வுகள், குழந்தையின் நிலை குறித்து முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கின. நோயைக் கண்டறிந்ததும், அறுவைச் சிகிச்சை தான் தீர்வு எனும் தெளிவு கிடைக்கப்பெற்றது. குழந்தை அறுவைச் சிகிச்சை நிபுணரும் மருத்துவரான ராகுல் M அவர்களின் நிபுணத்துவத்தின் கீழ், குழந்தைக்கு பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் யூரிட்ரிக் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Ureteric Reimplantation Surgery) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மாற்றம் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகச் சிறுநீர் கட்டுப்பாடின்மையில் போராடிய பிறகு, அந்த சிறுமி தற்போது பகலிலும் இரவிலும் நிம்மதியாக இருக்கிறார். இரண்டு மணி நேரம் வரை சிறுநீரைக் கட்டுப்படுத்தும் சாதனை என்பது, ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக இருந்தது. இப்போது அவர் புது நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.


“எக்டோபிக் யூரிட்டர் என்பது அரிதான நோயாக இருந்தாலும், விடாப்பிடியான சிறுநீர் கட்டுப்பாடின்மைக்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம், குறிப்பாக இளம் பெண்களில்" என்று மருத்துவர் சங்கீதா விளக்கினார். "இந்த விஷயத்தில், விரிவான வரலாறு மருத்துவ பரிசோதனைகளின் வழியாக மூல காரணத்தைக் கண்டறிந்து, அவளுக்கு ஒரு சாதாரண, மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்க எங்களுக்கு உதவியது" என்றார்.


சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

No comments:

Post a Comment