Friday, 16 May 2025

Devil's Double Next Level Movie Review

Devil's Double Next Level Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம தில்லுக்கு துட்டு படத்தோட fourth part ஆனா Devil's Double Next Level படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு comedy horror படம். prem anand தான் இந்த படத்தை எழுதி இயக்கி இருக்காரு. santhanam , Geethika Tiwary, Selvaraghavan ,  Gautham Vasudev Menon , redin  kingsley , mottai rajendran , yashika , lollusabha maran , kasthuri shankar னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. ofro தான் இந்த படத்துக்கு music அமைச்சிருக்காரு. DD returns படத்துக்கும் இவரு தான் music அமைச்சிருந்தாரு. 



படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா. சந்தானம் படங்களை review பண்ணற வேலை ல இருக்காரு. selvaraghavan , sandhanam அ பழி வாங்கணும் னு காத்துகிட்டு இருக்காரு. ஒரு நாள் சந்தனம் கிட்ட தன்னோட theatre ல ஒரு படம் போடப்போறதாகவும் அதுக்கு நீங்க review குடுத்தா ஒரு promo மாதிரி அமையும் னு சொல்லுறாரு. சந்தனம் மும் மொட்டை rajendran யும் அந்த theatre க்கு வராங்க. கடைசில அந்த screen ல ஓடிட்டு இருக்கற படத்துல இவங்க ரெண்டு பேரும் மாட்டிக்கிறாங்க. அதாவுது படத்துக்குள்ள தான் படத்தோட கதையே போகுது. இதுல இருந்து சந்தானமும் மொட்டை ராஜேந்திரன் யும் தப்பிச்சாங்களா? selvaraghavan எதுக்காக இவங்கள பழி வாங்க துடிக்கறாரு ன்ற கேள்விகளுக்கு பதில் அ இருக்கிறது தான் devils double next level . 


horror comedy concept ல வெளி வந்திருக்க படங்களுக்கு எப்பவுமே மக்கள் கிட்ட இருந்து  நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அந்த வகைல இந்த படத்தோட முதல் மூணு part யுமே box office hit தான். சந்தானம் க்கு ஒரு சில படங்கள் கைவிட்டாலும் இந்த படம் தான் அவருக்கு எப்பவுமே strong அ இருக்கும்  னே சொல்லலாம். 3 rd part ல எப்படி ஒரு வீட்டுக்குள்ளயே கதை full அ நடக்குதோ அதே மாதிரி தான் இந்த படத்தோட கதை முழுசா கப்பல் லேயே நடக்குது. நெறய படத்தோட reference அ வச்சிருக்கிறது ரசிக்கிற மாதிரி தான் இருந்து. நீங்க trailer அ பாத்தீங்கன்னா தெரிஞ்சுருக்கும் காக்க காக்க படத்தோட உயிரின் உயிரே song , jailer , ajith நடிச்ச படங்களோட reference னு நெறய குடுத்திருக்காங்க. 


சந்தானமும் மொட்டை ராஜேந்திரன் மட்டுமே இந்த படத்துக்குள்ள மாட்டிங்கமாட்டாங்க. சந்தானத்தோட மொத்த குடும்பமும் தான் மாட்டிப்பாங்க. அந்த படத்துக்குள்ள மர்மமான கொலைகாரன், பேய் இருக்கற வீடு, சாபம் னு எல்லாமே இருக்கும். இவங்க எல்லாருமே அந்த படத்துக்குள்ள இருக்கற characters ஓட பேசி இதுல இருந்து எப்படி தப்பிக்கிறது னு தான் plan போடுவாங்க. இதெல்லாமே கேட்கவே ரொம்ப interesting அ இருக்குல்ல படமும் அதே மாதிரி தான் இருக்கு. சந்தானம் அப்புறம் மொட்டை ராஜேந்திரன் ஓட comedy , அவங்களோட counter னு எல்லாமே ரசிக்கிற மாதிரி தான் இருந்தது. படத்தோட first half ல full அ  comedy அ குடுத்திருக்காங்க, second half ல இந்த பேய்கள் னால வர பிரச்சனைகளை solve பண்ணி அந்த எடத்துல இருந்து வெளில வர்றது னு எல்லாமே மக்களுக்கு பிடிச்ச மாதிரி படத்தை கொண்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும். 


actors ஓட performance னு பாக்கும் போது, சந்தானம் எப்பவும் போல பட்டைய கிளப்பி இருக்காரு னு தான் சொல்லணும். கௌதம் வாசுதேவ் மேனன், redin kingsely , மொட்டை ராஜேந்திரன்  , செல்வராகவன் னு இவங்களோட நடிப்பும் செமயா இருந்தது. interesting ஆனா கதைக்களம், actors  ஓட எதார்த்தமான நடிப்பு, மனுஷங்க கிட்ட பேய்கள் எல்லாம்  வேடிக்கையா தோத்து போறது னு ஒரு பக்காவான horror comedy படம் தான் இது. இத  must watch  movie னு தான் சொல்லுவேன். கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment