Tuesday, 15 July 2025

மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46”


*மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46”  கோலாகலத் துவக்கம்!!*








*நடிகர் ஜீவா நடிப்பில், பிளாக் பட இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கும்  புதிய படம் “ஜீவா 46” இனிதே துவங்கியது!!*


தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி  இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46 வது படமாக உருவாகும் இப்படத்தினை, KR Group சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். துணை தயாரிப்பை  முத்துக்குமார் ராமநாதன்  மேற்கொள்கிறார்.  



இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். ரபியா கட்டூன் நாயகியாக நடிக்கிறார். பப்லூ பிரித்திவிராஜ், நைலா உஷா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.  மேலும் இந்த பூஜையில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி, திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவு கோகுல் பெனாய், எடிட்டர் RS சதீஷ்குமார், புரொடக்சன் டிசைனர் சிவசங்கர், காஸ்ட்யூம் டிசைனர் ரிதேஷ் செல்வராஜ், மேக்கப் ஆர்டிஸ்ட் விக்ரம், பிராஜக்ட் டிசைனர் வினிதா குமாரி, மக்கள் தொடர்பு சதீஷ்குமார் S2 Media ஆகியோர் பணியாற்றுகிறார்கள். 


இப்படத்தில் மற்ற விபரங்கள் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 



No comments:

Post a Comment