*’ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்!*
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.
நடிகை மிதிலா பால்கர், "'ஓஹோ எந்தன் பேபி' ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். நிச்சயம் நீங்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ள முடியும். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூலை 11 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்".
நடிகை அஞ்சு குரியன், "'ஓஹோ எந்தன் பேபி' ரோம்-காம் திரைப்படம். இந்த படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம். நிச்சயம் நீங்கள் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்".
நடிகர் ருத்ரா, "ஜூலை 11 அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. கோவிட் காலகட்டத்திற்கு பிறகு அனைவருக்கும் ஒரு விதமான மன அழுத்தம் இருக்கிறது. அதை எல்லாம் போக்கி உங்களை 'ஓஹோ எந்தன் பேபி' ஜாலியாக சிரிக்க வைக்கும், கொண்டாட வைக்கும். படம் முடித்து நீங்கள் தியேட்டர் விட்டு வெளியே போகும்போது நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகை இருக்கும்".
நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், " புதுமுக இயக்குநர்களுடன் தான் நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். ஏனெனில், அவர்களிடம் தான் ஒரு மேஜிக் இருக்கும். அந்த மேஜிக் இந்த படத்தில் இருக்கக்கூடிய அனைத்து புது முக நடிகர்களிடமும் இருக்கிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. அது இருந்தால் அடுத்தடுத்து நிறைய புது முகங்களுக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன். நான் புதுமுகமாக திரையுலகில் வந்த பொழுது எனக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இன்று கடவுள் புண்ணியத்தில் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கும் இடத்திற்கு வளர்ந்திருக்கிறேன். உங்களுக்கு ஒரு அப்டேட்! என்னுடைய அடுத்த படம் 'கட்டாகுஸ்தி2'. 'ராட்சன்2' படமும் அடுத்த வருடம் என்னுடைய தயாரிப்பில் நிச்சயம் நடக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அமிர்கான் பாராட்டிவிட்டு கண்கலங்கினார். என் தம்பி ரொம்பவே லக்கி. என் தம்பி அறிமுகமாகும் படத்தில் நானும் ஹீரோவாகவே நடித்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.
No comments:
Post a Comment