Wednesday, 2 July 2025

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 




ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 


BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை”  புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. 


காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க,  நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 


பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என  அன்பின் ஐந்திணையைக் கொண்டு, அழகான ரொமாண்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. 


இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட் சன்,  கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை  V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். 


இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment